(Reading time: 10 - 19 minutes)

சுதந்திர தின ஸ்பெஷல் - Chillzee எழுத்தாளர் ஜெய்யுடன் கலந்துரையாடல்

Jay 

Jay's art work

Chillzee வாசகர்களுக்கு மிகவும் பரிச்சயமான எழுத்தாளர்களில் ஒருவர் ஜெய்.

2014ஆம் ஆண்டு எங்கே செல்லும் இந்த பாதை சிறுகதையின் மூலம் chillzeeயில் அறிமுகமாகி, கிட்டத்தட்ட நான்கு முழு ஆண்டுகளாக தொடர்ந்து சிரிக்க வைக்கும் & சிந்திக்க வைக்கும் பல கதைகள் எழுதிக் கொண்டு இருப்பவர்.

chillzee டீமை சேர்ந்த விசாலி இந்திய சுதந்திர தினத்திற்காக ஜெய்யுடன் நடத்திய சுவாரசியமான கலந்துரையாடல் இதோ உங்களுக்காக.

 


Chillzee: வணக்கம் ஜெய். உங்களை பற்றி எங்களுக்கு சொல்லுங்களேன்.

 

Jay : நான் ஸ்ரீஜெயந்தி, குடும்பத்தலைவி... இரண்டு மகன்கள் மற்றும் கணவருடன் சிங்கப்பூரில் வசிக்கிறேன்... பெரியவன் 11th சின்னவன் 7th  படிக்கிறார்கள்..... கணவர் பன்னாட்டு வங்கியில் வேலை செய்கிறார்....

 

Chillzee: உங்களைப் பற்றியும், உங்கள் குடும்பத்தினர் பற்றியும் தெரிந்துக் கொண்டதில் மகிழ்ச்சி. வீட்டிலேயும் உங்க nickname ஜெய் தானா? இல்லை எழுதுவதற்காக நீங்க தேர்வு செய்த பெயர் “ஜெய்”யா?

 

Jay : முதலில் ஒரு ரீடராக கமெண்ட்ஸ் போட தெரிவு செய்த பெயர் இது... பின்பு அதையே கதை எழுத உபயோகித்தேன்.... புத்தகம் வெளியிடுவது ஜெயந்தி மோகன் என்ற பெயரில்.... வீட்டில் கூப்பிடுவது ஜெயந்தி....

 

Chillzee: ஜெய் என்றாலே சமூக விழிப்புணர்வு கதைகள்ன்னு Chillzee வாசகர்கள் மத்தியில் ஒரு impression இருக்கு. காதல் கதைகளாக குவியும் இந்த காலக்கட்டத்தில் இப்படி ஒரு image வளர்ப்பது என்பது சுலபமான ஒன்றில்லை. இதன் பின்னே இருக்கும் உங்களுடைய ரகசியம் என்னன்னு சொல்லுங்களேன்.

 

Jay : கதைகள் எழுதும் எண்பது சதவிகிதம் எழுத்தாளர்கள் காதல் கதைகளாகத்தான் எழுதுகிறார்கள்... So அதையே நானும் செய்ய வேண்டாம் என்றே சமூக விழிப்புணர்வு கதைகளாக எழுத தேர்ந்தெடுத்தேன்... Plus அது என்னுடைய மனத்தாங்கல்களை கொட்ட வசதியாக உள்ளது... சமூகத்தில் பல அவலங்கள் நடக்கும்போது அச்சோ இப்படி ஆகிறதே என்று மனதில் போட்டு வருத்தாமல் கதைகளில் அதை கொட்டி விடுகிறேன்... viewers response இம்மாதிரி கதைகளுக்கு குறைவுதான்... ஆனாலும் என்னால் முடிந்ததாக ஏதோ ஒரு நல்ல விஷயத்தை சொல்லி விட்டேன் என்ற மனத்திருப்தி இதில் கிடைக்கிறது...

 

Chillzee: எழுதுவது என்பது பொழுதுபோக்கு என்பதை தாண்டி நம் மனதில் அடைப்பட்டுக் கிடக்கும் உணர்வுகளை வெளிக் கொண்டு வர உதவும் ஒரு வடிகால் என்று நிறைய பேருக்கு எடுத்து சொல்லி, அதே போல எடுத்துக்காட்டாகவும் இருக்கீங்க. அதற்கு வாழ்த்துக்கள்.

 

Jay : உங்கள் பாராட்டுதலுக்கு மனமார்ந்த நன்றி...

 

Chillzee: மேலே சொன்னது போல சீரியஸ் கதைகள் எழுதும் ஜெய் அப்பப்போ நகைச்சுவை கதைகளும் பகிரும் போது, எப்படி இப்படின்னு யோசிக்காமல் இருக்க முடியலை. இரண்டு extreme genres இப்படி சுலபமா எழுத எப்படி உங்களால் முடியுது?

 

Jay : ஹாஹாஹா.... நம் வாழ்க்கையே எல்லாம் சேர்ந்த கலவைதானே... So கதையிலும் ரெண்டு extreme எழுத முடிகிறது போல...  பொதுவாக நான் படிக்கும் கதைகளுமே அப்படித்தான்... காலையில் அகிலனின் சித்திரப்பாவை படித்தால் மாலை அப்புசாமி படம் எடுக்கிறார் படிப்பேன்...

 

Chillzee: நீங்க ரொம்ப இன்ட்ரஸ்டிங் கேரக்டர்ன்னு சொல்லுங்க!

கதாசிரியர்ன்னு இல்லாமல் பார்த்தால் ஜெய் சீரியசானவங்களா, நகைச்சுவையானவங்களா?

 

Jay :  எதையுமே சீரியஸ் ஆக எடுத்துக்கொள்ளாத படு ஜாலி பேர்வழி நான்...

 

Chillzee: Ok Jay, இப்போ, உங்க கதைகள் சார்ந்த சில ஜாலி கேள்விகள்.

SSSO (எ) ஸ்ருங்கார சீண்டல்கள் சில்லென்ற ஊடல்கள் கதை உங்க மற்ற கதைகளில் இருந்து தனித்து நிற்கும் ஒரு கதை. இதில் நகைச்சுவை இருந்தாலும் அது ஒரு காதல் கதை. அந்த கதை எழுதியதன் பின்னே ஸ்பெஷல் காரணம் ஏதாவது இருக்கா??

 

Jay : பெரிய காரணம் எல்லாம் ஒண்ணும் இல்லை... ஓவர் கருத்து கந்தசாமியா கருத்தா சொல்லிட்டு இருக்க... ஜாலியா ஒரு கதை எழுதுன்னு Friends சொன்னதால எழுதினது...  காமெடி எழுதுவது எனக்கு எப்பொழுதுமே ஈசியான ஒன்று.... ரொம்ப மெனக்கிட மாட்டேன்.... போற போக்கில் எழுதுவது....

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.