(Reading time: 10 - 19 minutes)

Jay 

Jay's Whole wheat mango cake

Chillzee: உங்க நினைவாற்றலை செக் செய்ய தான் சொல்லாமல் விட்டோம் 😃 நீங்க பாசாகிட்டீங்க 😊 கௌரி – கௌஷிக் & ஹரி – ஸ்வேதாவும் கூட எல்லோருக்கும் பிடித்த ஜோடிகள் தான் 😊

கதை எழுதும் ஆர்வம் உங்களுக்கு ஏற்பட்டதன் பின்னே ஏதாவது ஸ்பெஷல்  காரணம் இருக்கிறதா?

 

Jay : மேலே சொன்ன காரணம்தான்.... சமூகத்தில் நடக்கும் அவலங்களை பார்க்கும்போது ஒரு கோவம் வரும்... அதை வெளிப்படுத்த ஒரு வடிகால் வேண்டும்... வடிகாலாக நான் எடுத்துக்கொண்டது எழுத்து....

 

Chillzee: ரொம்ப நல்ல விஷயம் ஜெய்.

நீங்கள் கதாசிரியையாக இருப்பது, உங்கள் குடும்பம் & நட்பு வட்டத்தில் ஸ்பெஷல் அந்தஸ்தை கொடுப்பதாக எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா??

 

Jay : பொதுவாக நான் கதை எழுதுவேன் என்று நிறைய பேருக்குத் தெரியவே தெரியாது... யாரிடமும் சொன்னதில்லை.... FB மெசேஜில் அப்டேட்  பார்த்து தெரிந்து கொண்டவர்கள்தான் அதிகம்.... அதனால் ஸ்பெஷல் அந்தஸ்து எதுவும் வந்ததாகத் தெரியவில்லை... அப்படி வராமல் இருப்பதுதான் என்னைப் பொறுத்தவரை நல்லது... என்றும் நான் சாதாரண ஜெயந்தியாக இருப்பதையே விரும்புகிறேன்....

 

Chillzee: அப்படி சொல்லாமல் எழுதுவதன் / எழுதியதன் பின்னிருக்கும் காரணம் என்ன? எழுதுவது எனக்கு ஒரு வடிகாலாக இருக்கிறது எனும் எண்ணம் மட்டும் தானா? இல்லை வேறு காரணங்கள் ஏதாவது இருக்கிறதா?

 

Jay : சொல்லாமல் எழுத பெரிய காரணம் எல்லாம் இல்லை... பொதுவாகவே நான் இது எல்லாம் பண்ணுவேன் அப்படின்னு சொல்ல மாட்டேன்... மற்றவர்களாக பார்த்து கேட்டால்தான் உண்டு... சுயதம்பட்டம் அடிக்கிறாளோ என்று யோசித்து விடுவார்களோ என்ற முன்னெச்சரிக்கை காரணமாக இருக்கலாம்....

 

Chillzee: கதை எழுதுவதை தவிர உங்களின் பிற ஆர்வங்கள் என்னென்ன?

 

Jay 

Jay's Corn Rava and ragi idly

Jay : சமையல்.... நிறைய புது புது ரெசிப்பி பண்ணப் பிடிக்கும்... Then Kundan Art செய்வேன்.... மாலை நேரங்களில் குழந்தைகளுக்கு தமிழ் மற்றும் ஸ்லோக வகுப்புகள் எடுக்கிறேன்...

 

Chillzee: வாவ்! அற்புதம் ஜெய்! நீங்க multi talented personality என தெரிந்துக் கொண்டதில் மிக்க மகிழ்ச்சி.

 

எங்களுக்காக நேரம் ஒதுக்கி பதில்களை பகிர்ந்ததற்கு மிக்க நன்றி.

இந்த கலந்துரையாடலின் மூலம் ஜெய் எனும் எழுத்தாளரை அவரின் எழுத்துக்கள் தாண்டியும் தெரிந்துக் கொண்டதில் எக்ஸ்ட்ரா மகிழ்ச்சி.

இன்னும் நீங்கள் நிறைய எழுதவும், உங்களின் பிற முயற்சிகள் அனைத்தும் சிறப்பாக அமையவும் எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

 

Jay : உங்கள் வாழ்த்திற்கு நன்றி... இன்டர்வியூ என்று சொன்னவுடன் என் கணவர் கேட்டது... நீ அவ்ளோ பெரிய அப்பாடக்கர் ஆகிட்டியா என்பதுதான்... ஹாஹாஹா.... கண்டிப்பாக ஆகவில்லை.... என்னை போன்ற கத்துக்குட்டி எழுத்தாளர்களை இதைப் போல் இன்னும் பல விஷயங்கள் மூலம் உற்சாகப்படுத்தும் chillzeeக்கு மிக்க நன்றி.... இந்த பேட்டி மூலம் அனைவரையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி....

இன்று என் அம்மா மற்றும் கணவரின் பிறந்தநாள்.... இருவருமே நான் எதை செய்தாலும் என்னை உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்துவார்கள்... இந்த நாளில் இன்டர்வியூ நடைபெறுவது கூடுதல் மகிழ்ச்சி

 

Chillzee: உங்கள் கணவர் மற்றும் அம்மாவிற்கு Chillzee டீம் மற்றும் Chillzee வாசகர்கள் சார்பில் ஸ்பெஷல் பிறந்தநாள் வாழ்த்துக்கள். எதிர் வரும் நாட்கள் அவர்களுக்கு மிகவும் சிறப்பாக அமையட்டும்.

நன்றி, வணக்கம்!

 

ஜெய்யின் பங்களிப்புகள்:

அனைத்து பங்களிப்புகளையும் படிக்க, https://www.chillzee.in/chillzee-contributors/185:jay பக்கம் செல்லுங்கள்.

நிறைவுப்பெற்ற கதைகள் படிக்க https://www.chillzee.in/stories/chillzee-completed-stories-by-authors-01#jay பக்கம் செல்லுங்கள்.

 

{kunena_discuss:656} 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.