(Reading time: 12 - 23 minutes)

இடையில் கல்லூரிப் படிப்பின்போது எழுதுவதற்கு நேரமில்லை. அப்படியே இருந்தாலும் எழுதி என்ன செய்யப்போகிறோம்? என்ற விரக்தி வேறு. படிப்பை முடித்து வேலை என்று வந்த உடன் மீண்டும் எழுத ஆரம்பித்தேன். இப்போது போட்டிக்காக மட்டும் எழுதினேன்.

எனக்கு சிறுகதைகளை விட பெரிய கதைதான் வரும் என்று தோன்றியது. சிலநேரங்களில் எழுதியே ஆக வேண்டும் என்ற மனஅழுத்தம் அதிகமாகும்போது நோட்டு போட்டு எழுத ஆரம்பித்தேன். அப்படி எழுதிய கதைகளில் ஒன்றுதான் மௌனம் எதற்கு?

சில்சீயில் என் கதை வெளியான பிறகு அதே வருடம் (2015) ராணி வார இதழில் என்னுடைய சிறுகதை வெளியானது. இந்த வருடத்தில் (2018) மாலைமதியிலும், கொலுசு மாத இதழிலும் என்னுடைய சில கதைகள் வெளியாகியுள்ளன. ஆனாலும் சில்சீதான் எனக்கென்று ஒரு வாசகர் வட்டத்தை முதலில் உருவாக்கித்தந்தது. அதனால்தான் எனது குடும்பம், வேலை பார்க்கும் இடம் மாதிரி சில்சீயும் என் வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறிவிட்டது. நன்றி சில்சீ.

 (இந்த இடத்தில் ஒன்று சொல்லியே ஆகவேண்டும். என்னுடைய சொந்தப் பெயரை பயன்படுத்த முடியாத ஒரு நிலைமை. அது என்னன்னு கேட்கறீங்களா? என்னுடைய பெயரில் இரண்டு பிரபலமான எழுத்தாளர்கள் இருக்கின்றனர் (சுபா). அவர்களுடன் நாம் போட்டி போட முடியுமா? அதனால்தான் எனக்கு நானே விதவிதமான புனைப்பெயர்களை வைத்துப்பார்த்தேன். கடைசியில் எனது சொந்தப் பெயர்தான் நிலைத்தது. (இரா.சுபா தான் ராசு))

 

Chillzee.in - உங்க பெயரின் ரகசியத்தை எல்லோரிடமும் பகிர்ந்ததற்கு நன்றி.

அப்படியே உங்களை பற்றியும், உங்க குடும்பத்தை பற்றியும் சொல்லுங்களேன்.

 

ராசு - நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் கூட்டுக்குடும்பம்தான். அதனால்தான் என்னுடைய கதைகள் பெரும்பாலும் நிறைய அங்கத்தினரைக் கொண்டே அமைந்திருக்கும்.

நான் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவள். இன்று வரை பிறந்த மாவட்டத்திலேயேதான் என் வாழ்க்கை சுழன்று கொண்டிருக்கிறது. ஒரு தனியார் கல்லூரியில் (ஏனாரி இராஜப்பா கல்லூரி, பட்டுக்கோட்டை) உதவிப் பேராசிரியராக வேலை பார்க்கிறேன். என் கணவர் பாலகிருஷ்ணன். சுயமாக தொழில் செய்கிறார். எனக்கு இரண்டு மகள்கள். பெரிய மகள் (சௌந்தர்யா) ஏழாம் வகுப்பிலும், சின்ன மகள் (ஐஸ்வர்யா) ஐந்தாம் வகுப்பிலும் படித்துக்கொண்டிருக்கிறார்கள். கூடப்பிறந்தது ஒரு சகோதரி என்பதால் நாங்கள் என் பெற்றோருடன் வசிக்கிறோம்.

நான் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பதற்கு சில்சீ எப்படி காரணமோ, அதே மாதிரி என் குடும்பத்தினரும், நட்பு வட்டமும் எனக்கு பக்கபலமாக இருக்கிறார்கள். அவர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

 

Chillzee.in - உங்கள் குடும்பம் பற்றி பகிர்ந்துக் கொண்டதற்கு நன்றி சுபா.

உங்கள் கதைகள் பற்றி பேசுவோம்.

பேசும் தெய்வம் கதையில் வரும் சிந்தனா கதாபாத்திரம், பொதுவாக நாம் பார்க்கும் கதாநாயகிகளிடம் மிகவும் மாறுப்பட்ட ஒரு கதாபாத்திரம். அந்த கதாபாத்திரம் உருவான விதத்தை பற்றி சொல்லுங்களேன்.

 

ராசு -ஒருநாள் பேருந்தில் சென்று கொண்டிருக்கும்போது ஒரு நிறுத்தத்தில் ஏறிய பெண்ணைப் பார்த்து என் தாயார் சொன்ன விசயம் என்னை மிகவும் பாதித்தது. அது அந்தப் பெண்ணுடைய தந்தை திருமணமாகி மூன்று மாதங்களில் பெண் பிடிக்கவில்லை என்று தற்கொலை செய்துகொண்டாராம். எனக்குப் பகீரென்றது. அது எத்தனை கொடுமை? ஒரு பெண்ணைப் பிடிக்கவில்லை என்று அந்தப் பெண்ணுடன் மூன்று மாதங்கள் வாழ்ந்து பார்த்துதான் சொல்ல முடியுமா?அந்தப் பெண் கருப்பாக இருந்தாலும் களையாக இருந்தார். அந்த நேரத்தில் உருவானதுதான் அன்பு கதாபாத்திரமும், சிந்தனா கதாபாத்திரமும். அந்தப் பெண்ணுடைய தாயாரை நான் பார்த்ததில்லை. இருந்தாலும் அவர் கண்டிப்பாக அழகானவர்தான் எனக்குத் தோன்றியது. வெளித்தோற்றம்தானா ஒரு பெண்ணின் அழகு? எனக்கு இல்லையென்று தோன்றியது. கணவனின் புறக்கணிப்பை உதாசீனப்படுத்தி மனதைரியத்துடன் ஆண்துணை இல்லாமல் தன் பெண்ணை வளர்த்து திருமணமும் செய்து கொடுத்திருக்கிறாரே?அவரல்லவோ அழகு.

 

Chillzee.in - சரியா சொன்னீங்க!

ஒரு கூட்டு கிளிகள்என்ன ஏதோ செய்து விட்டாய்நீ தான் என் சந்தோஷம்யார் அவள் யார் அவளோ என பொதுவாக காதல் & குடும்பம், அதை சுற்றிய நிகழ்வுகள் என எழுதும் நீங்க எப்போதாவது துப்பறியும் கதை, க்ரைம் கதை மாதிரிவேற வகை கதைகளை முயற்சி செய்யனும்னு யோசிச்சிருக்கீங்களா?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.