(Reading time: 12 - 23 minutes)

ராசு -எழுத முயற்சி செய்திருக்கிறேன். வழக்கம்போல் முழுமை பெறாமல் இருக்கிறது. தோழியின் மரணத்திற்கு காரணமானவர்களை பழிவாங்கும் நாயகி. அந்தத் தொடர் கொலைகளைக் கண்டறிய வரும் நாயகன். இந்தக் காலகட்டத்தில் அது ஒத்து வருமா என்று அப்படியே ஒதுக்கி வைத்திருக்கிறேன். சில காலம் கழித்து என்னை கொஞ்சம் அதற்கு ஏற்றவாறு மாற்றிக்கொண்டு முயற்சி செய்யலாம் என்று நினைக்கிறேன்.

சிறுகதையானாலும் சரி, தொடர்கதையானாலும் சரி, சோகமாகவே எழுதுகிறோமே. கொஞ்சம் நகைச்சுவை கலந்து எழுதினால் என்ன? அந்த ஆசை உண்டு. பார்க்கலாம் எனக்கு வருகிறதா? என்று. இல்லையென்றால் நீங்கள்தான் பாவம்.

 

Chillzee.in - அதெல்லாம் சரியாக வரும், எழுதுங்கள், படிக்க நாங்க அனைவரும் ரெடி🙂

நீங்கள் chillzeeயில் எழுதி இருக்கும் எட்டு கதைகளில் சமீபத்திய ‘நீ இல்லாத வாழ்வு வெறுமையடி’ இளைய தலைமுறையின் பாஷையில் சொன்னால் பட்டையை கிளப்பிடுச்சுன்னு சொல்லலாம். அந்த கதை பற்றிய சுவாரசியமான விஷயங்கள் இருந்தால் எங்களிடம் பகிருங்களேன்.

 

ராசு -கேட்கவே ரொம்ப சந்தோசமா இருக்கு. சுவாரசியமான விசயம் என்பதை விட என் மனதைப் பாதித்த விசயம் என்றுதான் சொல்ல வேண்டும். ஏற்கனவே அதைப் பற்றி சொல்லியிருக்கிறேன். பன்னிரெண்டாம் வகுப்பு மாணவனின் தற்கொலைதான் அதற்குக் காரணம். அந்த நாளில் அந்த வீட்டில் இருந்த ஒரு நிசப்தம் துக்க வீட்டிற்கு வந்திருக்கிறோம் என்ற உணர்வே இல்லை. (நீங்கள் கிராமத்தில் எப்போதாவது துக்கம் விசாரிக்க சென்றிருந்தால் உங்களுக்கே தெரியும்) எல்லோரும் ஒரு கனத்த மௌனத்தைக் கடைபிடித்து தங்கள் துக்கத்தை மனதிற்குள்ளேயே கொண்டு மருகிக்கொண்டிருந்தனர். அந்தப் பையனின் உடல் வந்த போது அத்தனை பேரும் தங்கள் வீட்டிலேயே துக்கம் நிகழ்ந்தது போல் கதறித் தீர்த்துவிட்டனர்.

அப்போது அந்தப் பையன் தன் தாயாருக்கு எப்படி எல்லாம் உதவி செய்வான் என்று அங்கு பேசிக்கொண்டது என் மனதைத் தாக்கியது. இரண்டு மூன்று நாட்கள் வரையிலும் நான் அதிலிருந்து மீளவில்லை. அந்தத் துக்கத்தின் வெளிப்பாடுதான் “நீ இல்லாத வாழ்வு வெறுமையடி”.

 

Chillzee.in - உங்களுடைய எட்டு கதைகளில் தனிப்பட்ட முறையில் உங்களுக்கு பிடித்த கதை எது?

 

ராசு -எதைச் சொல்வது? உன் குழந்தைகளில் எந்தக் குழந்தையை உனக்குப் பிடிக்கும் என்று ஒரு தாயிடமே கேட்கிறீர்களே? எல்லா கதைகளையும் நான் ரசித்துதான் எழுதினேன். என்னால் குறிப்பிட்டு எதையும் சொல்ல முடியவில்லை. நான் இப்போதைக்கு ஒன்று சொல்ல வேண்டும். இந்த எட்டுக்கதைகளில் எந்தக் கதையுமே நான் முதன் முதலில் எழுத ஆரம்பித்த கதை இல்லை. நான் கல்லூரியில் படிக்கும்போது கண்மணி இதழில் வெளிவந்த நாவல் போட்டிக்காக நான் எழுத ஆரம்பித்த “அன்னை மடி” தான் எனது முதல் கதை. ஆனால் நான் பாதி வரைதான் எழுதினேன். அதைப் பத்திரப்படுத்தவும் தெரியவில்லை. ஆனால் என் மனதில் ஆழப்பதிந்திருக்கிறது.

 

Chillzee.in - அந்த கதையையும் படிக்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைக்கும் என்று நம்புகிறோம்.

நீ இல்லாத வாழ்வு வெறுமையடிக்கு அடுத்ததாக உங்களின் திட்டம் என்ன?

 

ராசு - சில்சீயையும், சில்சீ மூலம் கிடைத்த வாசகத் தோழமைகளையும் விட்டுவிடும் எண்ணம் எனக்கு கண்டிப்பாக கிடையாது. அடுத்து அடுத்த தொடர் எழுதும் திட்டம்தான், கதை கூட தயாராகிவிட்டது. இனிதான் முதல் அத்தியாயத்தை அனுப்பி ஒப்புதல் கேட்க வேண்டும். அநேகமாக அடுத்த வாரம் அந்தக் கதையின் முதல் அத்தியாயத்தை நீங்கள் படிக்க வேண்டி வரலாம்.

 

Chillzee.in - உங்களின் அடுத்த கதையை பற்றி தெரிந்துக் கொள்ள ஆர்வத்துடன் காத்திருக்கிறோம். வாழ்த்துக்கள்.

கேட்ட உடன் நேரம் ஒதுக்கி இந்த கலந்துரையாடலில் கலந்துக் கொண்டதற்கு மிக்க நன்றி சுபா.

நீங்கள் இன்னும் நிறைய எழுதவும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

 

ராசு - எனக்குப் மிகவும் பிடித்த கடவுள் விநாயகர். அவரின் பிறந்த தினத்தன்று என்னுடைய பேட்டியை பதிவிட தேர்வு செய்தது குறித்து எனக்கு மிகவும் மகிழ்ச்சி.

அழகான கேள்விகளுடன் என்னுடன் கலந்துரையாடல் செய்த சில்சீ டீமிற்கும், வாசகத் தோழமைகளுக்கும் மீண்டும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

நன்றி.

 

Chillzee.in - நன்றி, வணக்கம்

 

ராசுவின் பங்களிப்புகள்:

அனைத்து பங்களிப்புகளையும் படிக்க, https://www.chillzee.in/chillzee-contributors/188:rasu பக்கம் செல்லுங்கள்.

நிறைவுப்பெற்ற கதைகள் படிக்க https://www.chillzee.in/stories/chillzee-completed-stories-by-authors-01#rasu பக்கம் செல்லுங்கள்.

 

{kunena_discuss:656} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.