குட்டிக் கதைகள் – 57. சத்தியம் தவறேல்
நம் அனைவருக்குமே ரொம்பவும் மரியாதையை கொடுக்கும் பண்பு - கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது. தான் கொடுத்த வார்த்தைகளை மதித்து, உண்மையாக நடக்கும் ஒருவரை தாராளமாக நம்பலாம். அப்படி பட்டவர் எப்போதும் மற்றவரின் மரியாதையையும் நம்பிக்கையையும் ஈஸியாகவே பெற முடியும்.
குழந்தைகள் சிறு வயது முதலே அப்படி வாக்குறுதிகளை நிறைவேற்றும் பழக்கத்தை பெற வேண்டும்.
ஒரு சிறிய கதையின் மூலம் ஒருவர் வாக்கு தவறுவதால் மற்றவருக்கு ஏற்படும் வருத்தத்தைப் பார்ப்போம்.
ஒரு ஸ்கூலில் எக்ஸ்கர்ஷன் செல்ல திட்டமிட்டு இருந்தார்கள்.
காலை எட்டு மணிக்கு ஸ்கூலில் இருந்து பஸ்ஸில் கிளம்புவதாக திட்டம்.
அந்த ஸ்கூலில் படிக்கும் இரண்டு சிறுமிகள் கவிதா, சவிதா மிகவும் க்ளோஸ் ஃபிரென்ட்ஸ்.
இருவருமே இந்த எக்ஸ்கர்ஷனை மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
எக்ஸ்கர்ஷனுக்கு ஒரு நாள் இருந்த நிலையில், கவிதா எக்ஸ்கர்ஷனுக்காக ஒரு புதிய அழகான தொப்பி வாங்கினாள். அதைப் பற்றி சவிதாவிடமும் சொன்னாள்.
சவிதாவிற்கு அதேப் போல தொப்பி வாங்க வேண்டும் என்ற ஆசை வந்தது.
கவிதாவிடம் அதைக் கேட்டாள். அடுத்த நாள் ஸ்கூலுக்கு போகும் முன்