(Reading time: 6 - 11 minutes)

  

அன்று முழுவதும் முயல்களை வைத்துக் கொண்டு அவர்கள் பொழுது போக்கினார்கள். முயல்களுக்கும் அந்தக் குழந்தைகளோடு இருப்பது இன்ப மாயிருந்தது. அன்புள்ள குழந்தைகள். ஆசையோடு விளையாடினார்கள். அவ்வப்பொழுது இரை கொடுத்தார்கள். பேசிச் சிரித்துக் கல கலவென்று இருந்தார்கள். முயல்களுக்குப் புதிய இடத்தில் பொழுது மிக மகிழ்ச்சியாகக் கழிந்தது.

  

மறுநாள் காலையில், அந்தப் பிள்ளைகள் இரண்டு பேரும் பள்ளிக் கூடம் சென்று விட்டார்கள். முயல்களுக்குப் பொழுது போவது மிகக் கடுமையாக இருந்தது. பிள்ளைகள் இல்லாமல் நாம் இங்கிருப்பது தண்டனை யனுப்பவிப்பது போல் இருக்கிறது என்று குட்டி முயல் கூறியது. வா நாம் காட்டுக்கே போய் விடுவோம் என்று ஆண் முயல் அழைத்தது.

  

பேசி முடிவெடுத்தவுடன் அவை அங்கிருந்து புறப் பட்டன. துள்ளித் துள்ளிப் பாய்ந்தோடித் தங்கள் காட்டுக்கு வந்து சேர்ந்தன.

  

நகரத்துப் பிள்ளைகளைப் பற்றியும், அவர்கள் அன்பைப்பற்றியும், அவர்கள் வீட்டைப் பற்றியும் தோட்டத்தைப் பற்றியும் அவை மற்ற முயல்களிடம் எடுத்துச் சொல்வதிலேயே நன்றாகப் பொழுது போயிற்று.

  

ஆறு நாள் ஆயிற்று. அவற்றிற்கு மறுபடியும் அந்தப் பிள்ளைகளைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது.

  

இந்தத்தடவை கூட இரண்டு முயல் குட்டிகள் அவற்றுடன் கிளம்பின.

  

நான்கு முயல்களும் அந்த சிறுவனும் சிறுமியும் இருக்கும் வீட்டுக்கு வந்தன. உரிமையோடு உள்ளே நுழைந்தன.

  

அந்தப் பிள்ளைகளுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. நான்கு முயல்களோடும் அவர்கள் விளையாடினார்கள்.

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.