(Reading time: 3 - 6 minutes)

  

வேண்டும்! வேண்டும்! புல்லே! என் மூக்கை யறுத்தாய் அல்லவா! உன் கூட்டத்தோடு ஒழிந்தாய் என்று முயல் குட்டி கும்மாளம் போட்டது.

  

சிறிது நேரத்தில் முயல் குட்டிக்குப் பசி எடுத்தது.

  

"ஐயோ ! ஒரு புல் கூட இல்லாமல் எரிந்து போயிற்றே! எதைத் தின்பேன்'' என்று முயல் குட்டி கவலை கொள்ளத் தொடங்கியது.

  

அதற்கு அழுகை அழுகையாக வந்தது. ஆராயாமல் தான் இட்ட சாபத்தால் அத்தனை புல்லும் கருகிப் போய் விட்டதே என்று தன் மீதே குறைப் பட்டுக் கொண்டது.

  

புல் அறுத்துவிட்ட தன் மூக்கு எப்படியிருக்கிற தென்று தன் முன்னங் காலால் தடவிப் பார்த்தது. அது ஆறிக் காய்ந்து போயிருந்தது.

  

"சற்றுநேரம் ஏற்பட்ட வலிக்காக அவ்வளவு புல்லும் எரிந்து போகச் சாபம் கொடுத்தேனே நான் ஒரு முட்டாள்!'' என்று கத்திக் கொண்டே தலையை ஆட்டியது.

  

தூக்கம் கலைந்து கண் விழித்தது. அதைச் சுற்றிலும் எந்தப் புல்லும் கருகவில்லை . பாறையின் மீது ஏறிப் பார்த்தது. புல்வெளி முன்னைப் போலவே இருந்தது. புல் அனைத்தும் தள தள வென்று காற்றில் ஆடிக் கொண்டிருந்தன.

  

முயலுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

  

நல்ல வேளை! கனவுதான் கண்டேன். இல்லா விட்டால் - என் முட்டாள் தனமான சாபம் நிறை வேறியிருந்தால் என்ன ஆகியிருக்கும்!

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.