(Reading time: 4 - 8 minutes)
தெனாலி ராமன் கதைகள்
தெனாலி ராமன் கதைகள்

  

“ஊரெல்லாம் திருட்டு பயம் இருக்கும் போது, இவர் எதற்கு முட்டாள்தனமாக பணப் பெட்டியை திறந்தே வைத்திருந்தார்??”

  

அப்போது தெனாலிராமன் வீரர்களோடு இரண்டு திருடர்களையும் கையும் களவுமாக பிடித்த படி அரசவைக்கு வந்தார்.

  

“அரசரே நான் சொன்னதுப் போல திருடர்களை பிடித்து வந்து விட்டேன். இவர்களை விசாரித்து சிறையில் தள்ளுங்கள்”

  

“தெனாலி ராமா, தனி ஒருவனாய் எப்படி இவர்களை உன்னால் பிடிக்க முடிந்தது?”

  

“நகைக் கடைக்காரரிடம் நான் தான் அதிசய மந்திரம் தெரியும் என்று எல்லோரிடமும் சொல்ல சொன்னேன். அந்த செய்தி நம் சாம்ராஜ்யம் முழுவதும் பரவியதும், நகைக் கடைக்காரரின் பணப்பெட்டி இருக்கு வழியில் கருப்பு வண்ணம் போட்டு வைத்தேன். இது தெரியாமல் இந்த திருடர்களும் அங்கே வந்து கொள்ளையடித்தார்கள். அவர்கள் காலில் வண்ணம் ஒட்டிக் கொண்டது. அதை வைத்து அவர்களை முன்னாள் மந்திரியின் வீட்டில் இருந்து சிறை எடுத்தேன். அந்த மந்திரி தான் இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தார் என்பதையும் கண்டுப்பிடித்தேன்.”

  

“அருமை தெனாலிராமா! மீண்டும் உன் புத்திசாலித்தனத்தை காட்டி விட்டாய்! உன் போல சாதூர்யமானவர்கள் இருந்தால் எப்படிப்பட்ட பிரச்சனைகளும் தீர்ந்துவிடும்!”

  

தெனாலிராமனை அரசரும், மக்களும், அமைச்சர்களும் பாராட்டினார்கள்.

  

இரண்டு திருடர்களும், அவர்களுக்கு அடைக்கலம் தந்த மந்திரியும் சிறையில் தள்ளப் பட்டார்கள்.

  

------------

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.