(Reading time: 3 - 5 minutes)
தெனாலி ராமன் கதைகள்
தெனாலி ராமன் கதைகள்

குழந்தைகள் ஸ்பெஷல்ஸ் - தெனாலி ராமன் கதைகள் - 2. புத்திசாலியின் வெற்றி

கிருஷ்ணதேவராயர் மற்ற மன்னர்களுடன் போர் புரியாமல் நட்புடன் இருக்கவே விரும்பினார். இதனால் அனைத்து அண்டை நாட்டு மன்னர்களையும் தன் நண்பர்களாகவே பாவித்தார்.

  

இதில் ஒரு அண்டை நாட்டு மன்னன் உதயன் கிருஷ்ணதேவராயர் மீது பகைமை பாராட்டுபவன்.

  

இது தெனாலி ராமனுக்கு தெரிய வந்தது. உதயனின் உண்மை முகத்தை அரசருக்கு எப்படி காட்டுவது என்று யோசித்தான்.

  

திடீரென்று ஒரு நாள் தெனாலிராமன் காணாமல் போய் விட்டான். ஒரு மாதமாகியும் அவனைக் காணவில்லை. கிருஷ்ணதேவராயர் படைகளை அனுப்பி எல்லா இடங்களிலும் ராமனை தேடினார். ஆனால் தெனாலிராமன் அகப்படவில்லை.

  

வெறும் கையுடன் வந்த வீரர்கள் தெனாலிராமனை கண்டுப்பிடிக்க முடியவில்லை என்று ஒப்புக் கொண்டார்கள்.

  

கிருஷ்ணதேவராயர் வேறு வழி இல்லாமல் ராமனை மறந்து விட்டு தன் அரசாங்க வேலைகளில் ஈடுப்பட்டார். அப்போது நாட்டில் புதிதாக திருட்டு சம்பவங்கள் பலவும் நடக்க தொடங்கி இருந்ததால், சந்தேகப்படும் படி இருக்கும் நபர்களை கைது செய்ய உத்தரவிட்டார்.

  

கிருஷ்ணதேவராயர் இப்படி தொடர்ந்து நாட்டைப் பற்றியும், காணாமல் போன ராமனை பற்றியும் கவலையில் ஆழ்ந்திருந்தார்!

  

அரசரின் படைகள் காட்டில் ரோந்து செய்யும் போது முகமூடி அணிந்திருந்த சிலரை பார்த்து சந்தேகப்பட்டு சிறைப் பிடித்தனர்.

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.