(Reading time: 4 - 7 minutes)
தெனாலி ராமன் கதைகள்
தெனாலி ராமன் கதைகள்

  

நாடகம் முடிந்தப் பிறகு ராமனுக்கு யோசனையாக இருந்தது!

  

நான் உடனடியாக வழி வேகமாக யோசிக்க வேண்டும். அரசர் எனக்கு கொடுப்பதில் பாதியை பெற்றுக் கொள்ள காவலர்கள் காத்திருக்கிறார்கள்!

  

ராமன் நடிகர்கள் இருந்த இடத்திற்கு ஓடினான். ஒரு குச்சியை கையில் எடுத்துக் கொண்டு கதாநாயகனாக நடித்தவனை இரண்டு அடி அடித்தான்! நடிகன் அலற, அரசர் கோபப்பட்டார்.

  

“ராமன்! உனக்கு பைத்தியம் பிடித்துவிட்டதா? நிறுத்து.” அரசர் கட்டளையிட்டார்.

  

அரசரின் உதவியாளர்கள் ராமனை பிடித்து அரசர் முன் கொண்டு வந்து நிறுத்தினார்கள்.

  

“ராமன், என்ன காரியம் செய்து விட்டாய்? இந்த முட்டாள்தனத்திற்காக நீ 100 சவுக்கடிகள் பெற வேண்டும்”

  

அரசரின் உதவியாளர் சாட்டையை உயர்த்தினார்.

  

“தயவு செய்து பொறுங்கள். உங்கள் அடிகளை என்னோடு பகிர்ந்துக் கொள்ள விரும்பும் இரண்டு நண்பர்கள் எனக்காக வெளியே இருக்கிறார்கள்.”

  

அரசர் ஆச்சரியப்பட்டார்!

  

“யார் அந்த முட்டாள்கள்? அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள்.”

  

ராமன் உதவியாளரின் காதில் ஏதோ கிசுகிசுத்தான்.

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.