"தில-கஷ்ட-மஹிஷா-பந்தனாவின் தகுதிகளைப் பற்றி விவாதிக்க ஆரம்பிக்கலாம்" என்று ராமன் கூறினான்.
அறிஞர் அதிர்ச்சியடைந்தார். அவர் சமஸ்கிருதத்தில் ஆயிரக்கணக்கான அறிவார்ந்த படைப்புகளைப் படித்திருந்தார். ஆனால் ராமன் குறிப்பிட்ட இந்த நூலை அவர் கேள்விப்பட்டதே இல்லை. அவர் அதைப் படித்ததே இல்லை என்றால், இந்தப் படைப்பின் சிறப்பை அவர் எப்படி விவாதிக்க முடியும்?
அறிஞர் தோல்வியை ஒப்புக்கொண்டு அமைதியாக அரண்மனையை விட்டு வெளியேறினார்.
கிருஷ்ணதேவராயரும் தில-கஷ்ட-மஹிஷா-பந்தனா பற்றி தெரிந்துக் கொள்ள விரும்பினார்.
ராமன் பட்டுத் துணியை அகற்றினார். உள்ளே தடிமனான கயிற்றால் கட்டப்பட்ட பெரிய குச்சிகள் இருந்தது. அரசருக்கு ஒன்றும் புரியவில்லை. ராமனிடம் விளக்கம் கேட்டார்.
"அரசே, சமஸ்கிருதத்தில் தில என்பது எள் ஆகும், கஷ்ட என்றால் குச்சி, திலகஷ்டா என்றால் எள் செடிகளின் குச்சிகள்” என்று ராமன் குச்சிகளை விளக்கினான்.
பிறகு, கயிற்றைக் காட்டி, "இது எருமையைக் கட்டப் பயன்படும் கயிறு. மகிஷா என்றால் எருமை, பந்தனா என்றால் கட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் கயிறு. எனவே, இது தில-கஷ்ட-மகிஷா-பந்தனா" என்றான்.
அறிஞர் பெரிய பெயரை கேட்டவுடன் பயந்து விட்டார் என்பதை உணர்ந்து அரசர் விழுந்து, விழுந்து சிரித்தார்.