மன்னர் தெனாலிராமனிடம், “நீ என்ன நினைக்கிறாய் ராமா? யார் உண்மையை பேசுவது? எஜமானனா? அல்லது ராமுவா? “
“அரசே, இந்த பிரச்சனையை நான் சில நிமிடங்களில் தீர்க்கிறேன். நீங்களும் அமைச்சரும் சிறிது நேரம் இந்த திரைக்கு பின்னால் அமர்ந்து நடப்பதை வேடிக்கைப் பாருங்கள். “
அரசரும் அமைச்சரும் திரைக்கு பின்னால் தங்களை மறைத்துக் கொண்டனர்.
தெனாலிராமன் முதல் சாட்சியை அழைத்து, “உன் முன்னிலையில் உன் எஜமானர் வைரத்தை ராமுவிடம் கொடுத்தாரா? “ என்றுக் கேட்டான்.
“ஆம், ஐயா. “
“சரி ராமுவிடம் கொடுக்கப்பட்ட வைரங்களின் நிறம் என்ன? “
“வைரங்கள் என்ன நிறம் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அவை சிவப்பு பையில் வைக்கப் பட்டிருந்தன. “
“ சரி, நீ அமைதியாக இங்கே நில்.”
பின்னர் ராமன் இரண்டாவது சாட்சியை அழைத்து அவனிடம், “உன் முன்னிலையில் உன் எஜமானர் வைரத்தை ராமுவிடம் கொடுத்தாரா? “ எனக் கேட்டான்.
“ஆம், ஐயா. “
“அந்த வைரங்களின் நிறம் என்ன? “
இரண்டாவது சாட்சி முதல் சாட்சியைப் பார்த்தான். ஆனால் முதலாமவன்