(Reading time: 3 - 5 minutes)

மற்றவர்கட்குத் தன் பொருளை வாரி வழங்கிப், பெற்றுக் கொண்ட மக்களின் முகம் மலர்ந்து மகிழ்ச்சியடைவதைக் கண்டு தாம் மகிழ்ச்சியுறுவது - அந்த இன்பம் எப்படி இருக்கும் என்பதை (தருமி) அவன் வாழ்நாள் முழுதும் செய்து மகிழ்ந்து, மகிழ்ந்து - சவித்துப் போய் எரிகிறான்.

  

இந்தப் பாவிப் பயல் (கருமி) அவ்வின்பம் எப்படி இருக்கும் என்று அறியாமலே மரித்து எரிகின்றானே ஐயோ - என்று, அலறி அழவேண்டிய இடம், அது வல்ல; இது - என்றார்.

  

அன்று வள்ளுவரால் ‘ஈகையின் சிறப்பு’ ஊரார் எல்லோர்க்கும் உணர்விலே தைத்து ஊன்றியது. பின் ஈத்துவக்கும் இன்பத்திலே திளைத்து வாழ்ந்தனர்.

  

நாம் இன்றுதான் உணர்கின்றோம். நாம் அப்படி வாழ்கின்றோமா? இனியேனும் வாழ்வோமா?

  

- எனச் சிந்திக்கச் செய்கிறது. இக் குறள்.

  

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை

வைத்திழக்கும் வன்க ணவர் - குறள்

  

------------

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.