(Reading time: 3 - 6 minutes)

குழந்தைகள் சிறப்பு சிறுகதை - போட்டிக்கு வந்த காற்றண்ணன் - நாரா நாச்சியப்பன்

திரவனும் காற்றண்ணனும் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தபோது அவர்களுக்குள் ஒரு போட்டி ஏற்பட்டது. உலகத்தில் இரண்டு வல்லவர்கள் சந்தித்தால், அவர்களுக்குள் என்ன போட்டி ஏற்படும்? யார் வல்லவர் என்பதைத் தவிர வேறு எதற்காக அவர்கள் மோதிக் கொள்ளப் போகிறார்கள்.

  

"நான் தான் வல்லவன்" என்றான் காற்றண்ணன்.

  

"இல்லை. நான் தான் வல்லவன்!'' என்றான் கதிரவன்.

  

"மெய்ப்பிக்கிறாயா? என்றான் காற்றண்ணன்.

  

"முதலில் நீ வல்லவன் என்பதைக் காட்டு. பிறகு நான் என் வல்லமையைக் காட்டுகிறேன் என்றான் கதிரவன். "சரி அதோ , பூமியில் பார்! தெருவில் கைத்தடி ஊன்றி நடந்து செல்லுகிறானே கிழவன் , அவனிடம் நம் வல்லமையைக் காட்டலாம் என்றான் காற்றண்ணன்.

  

''போயும் போயும் தள்ளாடி நடக்கும் கிழவனிட மா நம் கைவரிசையைக் காட்ட வேண்டும்?' என்று தகைத்தான் கதிரவன்.

  

"வீண் பிதற்றல் வேண்டாம். கூறுவதைக் கவனித்துக் கொள். அந்தக் கிழவன் அணிந்திருக் கிறானே மேல் சட்டை , அதை அவன் உடலிலிருந்து பறித் தெறிய வேண்டும். என் ஆற்றலை நான் காட்டு

  

கிறேன். உன் ஆற்றலை நீ காட்டுவாயா?' என்று கேட்டான் காற்றண்ணன்.

  

சரி என்று சவாலை ஏற்றுக் கொண்டான் கதிரவன்.

  

காற்றண்ணன் தன் வல்லமையைக் காட்டத் தொடங்கினான்.

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.