(Reading time: 12 - 23 minutes)

மந்திரப் பரிசுகள் - ஜான்சி

Magic gifts

ஹாய் குட்டீஸ்,

உங்கள் எல்லோருக்காகவும் இன்னொரு கதையோடு நான் வந்திருக்கிறேன்.

 ஒரு கிராமத்தில ஒரு அப்பாவும் 3 மகன்களும்இருந்தாங்களாம். ராம், ஷாம், ப்ரேம் என்பது அவங்க பெயர்களாம்.

அவங்களுக்கு அம்மா இல்லை, அவங்க அப்பா ரொம்ப கண்டிப்பானவர் அவருக்கு யார் பொய் சொன்னாலும் பிடிக்காது.அவங்க வீட்டில நாய், ஆடுகள், ,மாடுகள்னு பல இருந்தாலும் அப்பாக்கு ரொம்ப பிடிச்சது அவர் ஆசையா வளர்த்துட்டு வர கழுதை தான். அந்தக் கழுதைக்கு தன்னை வீட்டின் எஜமானுக்கு ரொம்ப பிடிக்கும் என்பதில ரொம்ப பெருமை. எப்போவும் வீணா அலட்டலா நடந்துக்கும். ஆடு மாடுங்களை பையன்கள் மேய்த்தாலும், கழுதையை அப்பாதான் எப்பவும் மேய்ப்புக்கு கொண்டு போவார்.

 ஆனால், கொஞ்ச நாளா அப்பாக்கு உடல் நலம் இல்லாமப் போச்சு, அதனால் அப்பா முதல் நாள் ராம் கிட்ட,

" ராம் நீ இன்னிக்கு கழுதையை புல் மேய கொண்டு போப்பா"

 என்றுச் சொல்லி விட்டு தூங்கி விட்டார். ராமும் கழுதையை நல்ல புல் வெளி இருக்கிற இடத்தில் மேய்த்து விட்டு வந்தான். வீட்டில் கழுதையை கட்டிப் போட்டு விட்டு தன்னோட மற்ற வேலையை பார்க்கச் சென்றான். 

அப்பா முழிச்சதும் கழுதைக் கிட்ட ஆசையாப் போய்,

" கழுதை கழுதை நீ இன்னிக்கு வயிராற சாப்பிட்டாயா? " என்றுக் கேட்டார்.

 கழுதையோ ரொம்ப பரிதாபமா முகத்தை வச்சிக் கிட்டு அழுகிற மாதிரி இருந்ததாம்,

"அப்போ ராம் உன்னை மேய்ச்சலுக்கு கூட்டிப் போகலையா?"ன்னு கேட்டதும், இல்லைனு தலையை அசைச்சு சொன்னதாம், 

 போதாததுக்கு ரெண்டுச் சொட்டு நீலிக் கண்ணீர் வடிச்சதாம்.அவர் உடனே ராமைக் கூப்பிட்டு,

" நீ இன்னிக்கு கழுதையை புல் மேய்க்க கொண்டு போனாயா?"ன்னு கேட்கவும் அவன் ஆமாம் என்று பதில் சொன்னான்.

 "பொய்யாச் சொல்லுற நீ" என்றுச் சொல்லி அவனை நன்றாக அடித்து விட்டு , நீ வீட்டை விட்டு போய் விடு என்று அவனை விரட்டி விட்டார். அவனும் அழுதுக் கொண்டே அந்த ஊரை விட்டே போய் விட்டானாம்.

 வீடு திரும்பிய ஷாம் & பிரேமுக்கு தங்கள் அண்ணனை அப்பா எதற்காக வீட்டை விட்டு விரட்டினார் என்கிற காரணம் தெரியவில்லை.ஏன்னு அப்பாக் கிட்ட கேட்டாலும் அவர் சொல்லப் போறதில்லை. இரண்டு பேருமே ரொம்ப சோகமா இருந்தாங்களாம். அடுத்த நாள் அவர் கழுதையை மேய்க்க ஷாமை போகச் சொன்னார், அவனும் மிகவும் அதிகமான புற்கள் இருக்க கூடிய பகுதியில் அதனைக் கூட்டிச் சென்று மேய்த்து வந்தான் ஆனால் அந்த நன்றிக் கெட்டக் கழுதை மறுபடியும் பொய் சொல்ல ஷாமையும் அவர் வீட்டை விட்டு விரட்டி விட்டார்.

 யாரிடமும் எதையும் கேட்கவும் முடியாமல், ஏன் என்ற விபரமும் தெரியாமல் ப்ரேம் மிகவும் கவலையுடன் இருந்தான். அவன் அப்பா அடுத்த நாள் அவனை கழுதையை மேய்ப்பிற்க்கு கொண்டுச் செல்ல சொன்னாராம். அவனும் அப்படியேச் செய்ய , அன்று அளவுக்கு மேலாக கழுதை சாப்பிட்டு விட கழுதையால் எழுந்து நடக்கவே முடியவில்லை. ப்ரேம் தான் அதனைக் கஷ்டப் பட்டு தூக்கிக் கொண்டு வந்தான். அப்பா கழுதையிடம் வந்து அன்பாக,

"கடந்த இரண்டு நாள்கள் தான் நீ சாப்பிட முடியாமல் ஆயிற்று, இன்றாவது நீ சாப்பிட்டாயா?" என்றதும் கழுதை மாலை மாலையாக கண்ணீர் வடித்து இல்லையென்று தலையை அசைத்ததாம்.அவர் ப்ரேமைக் கூப்பிட்டு விசாரிக்கவும், அவனும்

 "ஆம், அப்பா கழுதை இன்று நிறையச் சாப்பிட்டு விட்டு எழும்பவும், நடக்கவும் கூட முடியாமல் திணறிச்சு, நான் தான் அதைத் தூக்கிக் கொண்டு வந்தேன்" என்றதும் அப்பாக்கு ரொம்ப கோபமா ஆயிட்டுதாம்.

 ஏண்டா, இப்படி பொய் சொல்லுற நீ" என்றுச் சொல்லி ப்ரேமையும் ரொம்ப அடிச்சு அவன் அப்பா வீட்டை விட்டு வெளியேற்றிட்டார்.

 கழுதைக்கு தனக்கு எவ்வளவு செல்வாக்கு இருக்கிறதுன்னு நினைச்சு புளங்காகிதமா இருந்துச்சாம். பொய் சொன்னதால் தன்னோட பிள்ளைங்களையே அடிச்சு விரட்டுறவர் தான் சொல்ற பொய் தெரிஞ்சா தன்னை என்னச் செய்வார்னு நினைக்க மறந்து போயிட்டு அந்தக் கழுதை. அடுத்த நாள் தன்னால முடியாத போதும் வீட்டில தான் பிள்ளைங்க யாருமே இல்லையே அதான் 3 பேரையும் விரட்டியாச்சே அதனால் தானே அந்தக் கழுதையை விளைச்சலுக்கு கூட்டிட்டு போனாரு, வயிறு முட்டச் சாப்பிட்டு வந்த அந்தக் கழுதை நடக்கவே முடியாம நடந்து வீட்டுக்கு வந்துச் சேர்ந்ததாம்.

 வழக்கம் போல,

" நீ இன்னிக்கு வயிறார சாப்பிட்டியா?"

 என்று கழுதையிடம் கேட்க அதற்கு இன்னிக்கு நம்மைக் கூட்டிட்டுப் போனதே அவர்தான்னு மறந்து எப்பவும் போல அழுகிற மாதிரி முகத்தை வச்சுக்கிட்டு இல்லைன்னு தலையசைச்சதாம். அப்போதான் அப்பாக்கு இந்தக் கழுதை தினமுமே நம்மக் கிட்ட பொய் சொல்லிட்டு இருந்திருக்கு. இதுத் தெரியாம நாம நம்ம பிள்ளைங்களை அடிச்சு விரட்டிட்டோமேன்னு மனசு வருந்தினார். பொய் சொன்னக் கழுதையை சும்மா விடுறதான்னு அதக் கட்டி வச்சு நல்லா அடிச்சு காட்டிலேயே விரட்டி விட்டுட்டார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.