(Reading time: 12 - 23 minutes)

டுத்ததாக ஷாமின் முதலாளி அவனிடம் "உன்னுடைய நேர்மைக்கு பரிசாக என்னிடமுள்ள மந்திரக் கழுதையில் ஒன்றை நான் உனக்குத் தரப் போகிறேன். இந்தக் கழுதை உன்னிடம் இருந்தால் உனக்கு எந்தக் குறைவும் ஏற்படாது. எப்போதெல்லாம் உனக்கு பணத்தேவை ஏற்படுகின்றதோ அப்போது மட்டுமே நீ இந்தக் கழுதையை உபயோகிக்க முடியும். அதன் வாலை சற்று இழுத்து அதன் காதில் உனக்கு எதற்காக எவ்வளவு பணம் தேவை என்றுச் சொன்னதும் அதன் வாயில் இருந்து உனக்குத் தேவையான பணம் கிடைக்கும் என்றுச் சொன்னார்."

 அவனும் மகிழ்வோடு அந்தக் கழுதையைக் கூட்டிக் கொண்டு சென்றான். இரவானதால் அவனும் அதே ராஜூவின் விடுதியில் தங்க நேர்ந்தது. அவனுடைய முகச் சாயல் ராமுடைய முகச் சாயலை ஒத்திருக்க ராஜூவிடம் பரபரப்பு தென்பட்டது. இவனை நாம் நன்றாக கவனிக்க வேண்டும் என்று எண்ணினான். சாப்பாட்டிற்கு ஆர்டர் கொடுத்த ஷாம் , தாம் பணத்தை சற்று நேரத்தில் தருவதாகச் சொல்லி அறை நோக்கிச் சென்றான். பின்னேயே ராஜீவும் அவனை பின் தொடர்ந்தான். அறைக்குள் சென்றவுடன் ஷாம் தன் கழுதையில் வாலை சிறிது இழுத்து, அதன் காதில் விடுதியில் தங்குவதற்கும், உனவிற்கும் ஆகும் செல்வைத் தரச் சொன்னான். உடனே கழுதையின் வாயில் ஏடிஎம்-மில் பணம் வருவது போல வந்தது. ( நான் இந்தக் கதையை படிக்கும் போது ஏ டி எம் உபயோகத்தில் இல்லை. ஆனால், என்ன மாதிரி யோசிச்சிருக்காங்க என்று இப்போது வியக்கிறேன்.)

 அதை பார்த்த ராஜூ என்னச் செஞ்சிருப்பான்? அதான் உங்களுக்கே தெரிஞ்சிடுச்சே இரவில் ஷாம் தூங்கும் போது அவனறியாமல் கழுதையை மாற்றி விட்டான். வீட்டிற்கு சென்ற ஷாம் அப்பா மற்றும் அண்ணனைக் கண்டு அகமகிழ்ந்தான். இருவரும் தங்கள் தம்பியை தேடிக் கண்டு பிடிக்க வேண்டும் என்றுப் பேசிக் கொண்டனர். அவன் தன்னுடைய மந்திரக் கழுதையைக் குறித்துப் பேசியவனாக தாம் தம் ஊரிலுள்ள எல்லோருடய பணத்தேவையையும் தீர்க்க விரும்புவதாக கூறினான். அதைக் கேட்ட அவன் அப்பா ராமிற்கு நிகழ்ந்ததைக் கூறி, முதலில் நாம் இந்தக் கழுதையின் மந்திர சக்தியை சோதித்தறிவோம். ஒரு வேளை அதன் மந்திர சக்தி செயல் பட்டால் நாம் ஊர் மக்களுக்கு உதவிச் செய்யலாம் என்று அறிவுரைக் கூறினார்.

 அது போலவே ஷாம் கழுதையின் அருகினில் சென்று அதன் வாலைச் சற்று இழுத்து காதில் சொல்ல, எரிச்சலுற்ற கழுதை அவனை எட்டி உதைத்தது. அதனால் அதிர்ச்சி அடைந்ததோடு தன்னுடைய கழுதையின் மந்திர சக்தி என்னவாயிற்று எனப் புரியாமல் கவலையில் ஆழ்ந்தான் ஷாம்.

 இப்போது ப்ரேமின் முதலாளி என்னச் சொல்கிறார் எனப் பார்ப்போம்.

"ப்ரேம் இதோ என்னுடைய பரிசு, இது ஒரு மந்திரக் கோல், இது உனக்கு யாராவது தீமைச் செய்வதாக அறிந்தால் அவர்களை தண்டிக்கும். நீயாக நிறுத்தச் சொல்லும் வரை நிறுத்தாது" என்றுக் கூறி ஒருக் கோலைக் கொடுத்தார். அவனும் அதைப் பெற்றுக் கொண்டு தன்னுடைய ஊருக்கு புறப்பட்டான். இரவு வெகு நேரமாக களைப்பு தீர ஓய்வெடுக்க எண்ணி அவனும் ராஜூவின் இரவு விடுதியிலேயே தங்க நேரிட்டது.

 ராஜூ ப்ரேமின் முகச் சாயலைக் கண்டு மனதிற்குள் மகிழ்ச்சிக் கொண்டான். இவனிடமும் ஏதாகிலும் மந்திரம் கொண்ட விஷயம் இருக்கும் என்று அவனை மிகவும் கவனித்துப் பார்த்தான். ப்ரேம் உணவிற்கு ஆர்டர் கொடுத்தான், உடனேயே தன் பையினின்று பணமும் கொடுத்தான். அறைக்குச் சென்று சாப்பிட்டு அசந்து உறங்கி விட்டான்.அவனையே கண்காணித்துக் கொண்டிருந்த ராஜூவிற்கு ஒன்றையும் கண்டு பிடிக்க முடியாததால், ப்ரேம் உறங்கியதும் அவன் அறைக்குள் சென்று ஒவ்வொன்றாய் தேடினான். ஒன்றும் கைக்கு அகப் படவில்லை என்வே ப்ரேமின் தலையணைக்கு கீழே ஏதாகிலும் இருக்கும் என நினைத்து அவன் அருகே வரவும், அவனுடைய மந்திரக் கோலுக்கு ப்ரேமிற்கு ஏதோ ஆபத்து என்று தோன்றவே ராஜூவை அடி அடி என அடிக்கத் தொடங்கியது.

"ஐயோ என்னை காப்பாத்துங்க, காப்பாத்துங்க" என்ற அலறலில் எழுந்த ப்ரேமுக்கு ஒன்றுமேப் புரியவில்லை." ராஜூ ஏன் அறைக்குள் வந்தான்?" என்று ப்ரேம் யோசிக்க அதற்குள் அடி வாங்க முடியாமல் துடித்த ராஜூ.

" நான் செஞ்சதெல்லாம் தப்புதான். நான் ராம் கிட்டயிருந்து எடுத்த டேபிளையும், ஷாம் கிட்டயிருந்து எடுத்த கழுதையையும் திரும்ப தந்திடறேன். என்னை மன்னிச்சு காப்பாத்து" என்றுக் கதறினான்.

 ப்ரேமிற்கு அரைகுறையாக புரிந்தாலும், தன் அண்ணன்களிடம் இவன் ஏதோ அபகரித்து இருக்கிறான் என்றுப் புரியவே, அவனிடமிருந்து அந்த மந்திர டேபிளையும் , மந்திரக் கழுதையையும் பெற்றுக் கொண்டு, இனிமேல் இதை மாதிரி யாரிடமாவது செய்தால் தான் மறுபடியும் வந்து தண்டிப்பதாக மிரட்டிச் சென்றான்.

ராஜூவும் பயத்துடன் தன்னுடைய பேராசையை அடக்கிக் கொண்டு வாழத் தொடங்கினான்.

ப்ரேம் வந்ததைக் கண்டு மகிழ்ந்த அவன் அப்பா மற்றும் அண்ணன்களிடம் தான் ராஜீவிடமிருந்து மீட்டு வந்தவைகளைக் காட்டினான். ராம், ஷாம் தங்களுடைய பரிசுகளை திரும்பப் அடைந்துக் கொண்டது குறித்து மிகவும் மகிழ்ந்தனர். தாங்கள் நினைத்த மாதிரியே ஊரார் அனைவருக்கும் ஒரு மிகப் பெரிய விருந்து அளித்தான் ராம். ஷாம் தன்னை நாடி வந்த வறியவர்களுக்கு தேவையான பணத்தைக் கொடுத்து உதவினான்.

 அவர்கள் மூவரும் தங்கள் அப்பாவோடு தங்கள் வீட்டிலுள்ள ஆடு, மாடுகள் எல்லாவற்றையும் பராமரித்து மிக மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தார்கள்.

{kunena_discuss:875}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.