கணவன் – மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் இன்றைய நவீன யுக குடும்பத்தின் மனைவியா நீங்கள்?
உங்கள் கணவருடனான கெமிஸ்ட்ரியை அதிக படுத்த வேண்டும் என்ற ஆசை இருக்கிறதா?
அப்படி என்றால் மேலே படியுங்கள்.
திருமணம் என்பது முழுக்க முழுக்க இருவர் சம்மந்தப் பட்ட விஷயம். இதில் பெரியவர், சிறியவர் என்ற வேறுபாடு எல்லாம் இல்லை.
அன்பு, காதல், மதிப்பு என அனைத்தும் இருவரிடமும் இருக்கும் திருமண வாழ்க்கை தான் வெற்றி பெற்றதாகிறது!
உங்களின் திருமண வாழ்க்கையில் உங்களின் பங்கை நீங்கள் சரியாக செய்ய பல பல வழிகள் இருக்கின்றன.
அப்படி சில ஐடியாக்கள் உங்களுக்காக இதோ:
ஆண்களின் மனதை உணவின் மூலம் வெல்வது என்பது கிட்டத்தட்ட டைனோசர்கள் வாழ்ந்த காலம் முதலே இருக்கும் ஒரு விஷயம்.
அப்புறம் நீங்கள் இந்த ஈசி டெக்னிக்கை பயன்படுத்தாவிட்டால் எப்படி?
வார நாட்களில் சாதாரண சமையல், லஞ்ச் பாக்ஸ் சமையல் என்பது இன்றைய காலத்தின் கட்டாயம். ஆனால் வார இறுதி நாட்களில் உங்கள் கணவருக்கு பிடித்த சமையலை செய்து அசத்தலாமே.
எப்படி பட்ட ஆணாக இருந்தாலும் பிடித்த உணவை பார்த்து விட்டால் ஃபிளாட் தான்.
இதை தான் நாம் கல்யாண சமையல் சாதம் ரங்காராவ் முதல் என் ராசாவின் மனசிலே ராஜ்கிரண் வரை பார்த்து விட்டோமே!
எடுங்கள் அந்த கரண்டியை, அசத்துங்கள் உங்கள் கணவரை!!!
Hope I get a chance to experiment these soon :)
Pasangalukku than sis niraiya tips thevai. seekiram kodunga...
Purinthu kolla vital kashtam than :)
Hero-ku nick name-nu sonnale enaku muthala antha boss tahn ninaivu varum