(Reading time: 2 - 4 minutes)

குடும்பம் - வாழ நினைத்தால் வாழலாம் - மகிழ்ச்சியாக வாழ சில டிப்ஸ்! - விந்தியா

Happiness

இதுவும் கடந்து போகும்!

டந்தக் காலத்தை பின்னுக்கு தள்ளிவிட்டு, நிகழ் காலத்தையும், எதிர் காலத்தையும் மனதில் கொண்டு வாழ பழகுங்கள்.

முன்பு நடந்த சண்டைகள், சோகங்கள், பிரச்சனைகளை நினைத்து, நினைத்து உழன்றுக் கொண்டிருந்தால் வாழ்க்கை போராட்டமாகத் தான் இருக்கும்.

கவலைகளை யாரிடமேனும் பகிர்ந்து பழகுங்கள்! அது உங்கள் மனதை லேசாக்க உதவும்.

 

நீங்களாகவே இருங்கள்!

ந்த காரணத்திற்காகவும் உங்களின் வாழ்க்கையை மற்றவருடன் ஒப்பிடாதீர்கள்.

ஒவ்வொருவர் வாழ்விலும் இன்பமும் துன்பமும் இருக்கின்றது. மற்றவர் வாழ்க்கை எப்படி இருக்கின்றது எனபது நமக்கு தெரியாது! எனவே ஒப்பிட்டு பேசுவதை / பார்ப்பதை நிறுத்துங்கள்.

 

வெற்றியும் தோல்வியும் சகஜம்!

ப்போதும் எதிலும் வெற்றி பெற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்று நினைத்து, உங்கள் வாழ்க்கையை நீங்களே போராட்டக்களமாக மாற்றிக் கொள்ளாதீர்கள்!

வெற்றி, தோல்வி என்பது வாழ்வில் சகஜம் என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்!

தோல்விகள் நம்மை பலமாக்கும் என்பதை மனதில் பதிய வையுங்கள்.

எத்தனை பெரிய பிரச்சனை என்றாலும் தளராமல் நிமிர்ந்து நில்லுங்கள்!

 

உங்களுக்கு உண்மையானவராக இருங்கள்!

லகத்தில் இருப்பவர்கள் அனைவருக்கும் நீங்கள் நல்லவர் என்று பறைசாற்ற முடியாது!!

மற்றவர்க்கு நல்லவராக தெரிய வேண்டும், உண்மையானவராக தெரிய வேண்டும் என்று உங்கள் வாழ்க்கையை பாழடிக்காமல் உங்களுக்கு உண்மையானவராக இருங்கள்.

மற்றவர்கள் உங்களை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை விட நீங்கள் உங்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பது தான் முக்கியம்!

 

குற்றம், குறை கண்டுபிடிப்பதை நிறுத்துங்கள்!

ற்றவரிடம் இருக்கும் குற்றம், குறைகளை கண்டுப்பிடித்து பெரிதாக்காமல் அதை சகஜமாக எடுத்து பழகுங்கள்!

 

மற்றவரை பற்றி பேசுவதை நிறுத்துங்கள்!

குறுகிய இந்த வாழ்க்கையில், மற்றவரை பற்றி புறம் பேசி, சண்டையிட்டு வீணாக்க வேண்டுமா?

மற்றவரை பற்றி யோசிப்பதை / பேசுவதை விட்டு விட்டு, உங்களின் வாழ்க்கையை பற்றி யோசித்து முன் செல்லுங்கள்!

 

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.