(Reading time: 5 - 9 minutes)

மகிழ்ச்சியான, ஆரோக்கியமான வாழ்க்கை வாழ 8 எளிய குறிப்புகள்

1. புரத நிறைந்த உணவை உண்ணுங்கள் (Protein)

உணவில் புரதம் நிறைந்திருப்பது அவசியம். காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு என்று ளாமல் புரதம் நிறைந்த உணவை உட்கொள்ளுங்கள். தினமும் முட்டைகள் சாப்பிடுங்கள்.

புரோட்டீன் தசையை சரிசெய்ய உதவுகிறது, மற்றும் தசை இழப்பை நிரப்ப உதவுகிறது. அதே சமயம் எடை இழப்புக்கும் உதவுகிறது. வளர்சிதை மாற்ற செயல்பாட்டை (metabolism) அதிகரிக்கவும் புரதம் உதவுகிறது.


2. நல்ல கொழுப்பு உணவை சாப்பிடுங்கள்

வேகமாக உங்கள் உடலில் இருந்து கிலோவைக் குறைக்கும் முயற்சியில், உங்கள் உணவில் இருந்து கொழுப்புகளை முழுவதுமாக நீக்கி இருந்தால் அது உதவாது என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.

இப்படி கொழுப்பு உணவை மொத்தமாக தவிர்த்தால் உடல் குறையும் என்பது மிகப்பெரிய தவறான கருத்துக்களில் ஒன்று என்று வல்லுனர்கள் சொல்கிறார்கள். நட்ஸ் நல்ல கொழுப்பு நிறைந்த உணவுகளை தவறாமல் உண்ணுங்கள்.


3. தண்ணீர் குடியுங்கள்

சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் நம் உடலில் இருந்து தண்ணீரை இழந்து கொண்டே இருக்கிறோம். உங்கள் சிறுநீர்ப்பையில் இருந்து பாக்டீரியாக்களை வெளியேற்றுவது, செரிமானத்திற்கு உதவுதல், ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனை உயிரணுக்களுக்கு கொண்டு செல்வது, மலச்சிக்கலைத் தடுப்பது, எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரித்தல் போன்ற நமது அத்தியாவசிய உடல் செயல்பாடுகள் சீராக இயக்குவதற்கு தண்ணீர் மிகவும் முக்கியமானது.

தண்ணீர் குடிப்பது அல்லது நீரேற்றமாக இருப்பது எடை இழப்புக்கும் உதவுகிறது. உங்கள் நாளை ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் தொடங்குவது செரிமான அமைப்பை சுத்தப்படுத்துகிறது, மேலும் உங்கள் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது.

சோடா போன்ற மற்ற உயர் கலோரி பானங்கள் வடிவில் கூடுதல் கலோரிகள் நம் உடலில் நுழைவதையும் தண்ணீர் குடிப்பதன் முலம் நாம் தவிர்க்கலாம்.

உங்கள் உணவில் அதிக திரவத்தை சேர்ப்பது மிகவும் அவசியம். திரவ உள்ளடக்கம் நிறைந்த பழங்கள் சருமம், கூந்தல் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு சிறந்த வரம்.

தண்ணீர் மட்டுமல்லாமல் இளநீர், பிரெஷ் ஜூஸ் போன்ற பலவிதமான இயற்கை பானங்களையும் நீங்கள் பருகலாம். அதேப்போல கிரீன் டீ, ஹெர்பல் டீ, பழம் மற்றும் காய்கறி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.