(Reading time: 14 - 27 minutes)

மே – 8

உலக தாலசீமியா நோய் தினம்

(World Thalassemia Day)

தாலசீமியா என்கிற நோய் குழந்தைகளுக்குப் பிறவியிலேயே ஏற்படக்கூடிய ஒரு நோயாகும். இது ஒருவித இரத்த சோகை. தாலசீமியா பாதித்தக் குழந்தைக்கு இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கும். இதனால் சுவாசிக்கும் ஆக்சிஜன், நுரையீரலில் இருந்து மற்ற பகுதிக்குச் செல்வதில் தடை ஏற்படுகிறது. மக்களிடம் இந்நோயைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவே மே 8 அன்று இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

செஞ்சிலுவை தினம்

(Red Cross Day)

போரின்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் நோக்கில் உருவான அமைப்புதான் ரெட் கிராஸ். இதற்குக் காரணமானவர் ஹென்றி டுனான்டு. இவர் 1828ஆம் ஆண்டு மே 8 இல் பிறந்தார். முதன்முறையாக 1948ஆம் ஆண்டு மே 8 அன்று செஞ்சிலுவை தினம் கொண்டாடப்பட்டது. பின்னர் 1984ஆம் ஆண்டிலிருந்து செஞ்சிலுவை தினம் மற்றும் சிகப்பு பிறை நிலா தினமாக மே 8 இல் கொண்டாடப்படுகிறது.

மே – 8 - Road Safety Week

 

மே 8 – 9

இரண்டாம் உலகப் போரில் உயிரிழந்தோருக்கான நினைவு நாள்

(Time of Remembrance and Reconciliation for Those who last Their Lives during the Second world war)

இரண்டாம் உலகப் போரின்போது பல லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். இது பூமியில் நிகழ்ந்த கொடுமையான வரலாற்று நிகழ்வாகும். எதிர்காலத்தில் மீண்டும் இது போன்று ஒரு யுத்தம் ஏற்படக் கூடாது என்பதை நினைவுறுத்தும் வகையில் இரண்டாம் உலகப் போரில் உயிரிழந்தவர்களுக்காகவும் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் நினைவஞ்சலி மற்றும் நல்லிணக்க நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.

 

மே – 9 - உலக கணிப்பொறி தினம்

 

மே – 10

உலக வலசை போதல் தினம்

(World Migratory Bird Day)

பறவைகள் தங்களின் வாழ்விடத்திலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட காரணங்களுக்காக வலசை போகின்றன. வலசை போகும் பறவைகள் பூமியின் காந்த விசையில் ஏற்படும் மாற்றத்தை உணர்ந்து தாங்கள் சேருமிடத்தைக் கண்டறிகின்றன. வலசை போகும் பறவைகளைப் பாதுகாப்பது, அதன் இருப்பிடத்தைப் பாதுகாத்தல் போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்த 2006ஆம் ஆண்டிலிருந்து இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

 

மே – 10 - ஹோலி தர்ஸ்டே, தத்தாத்ரேய ஜெயந்தி

 

மே – 11- தேசிய தொழில்நுட்ப தினம்

ரியல் உலகிற்கும், விர்ச்சுவல் உலகிற்கும் உள்ள வேறுபாட்டையே மறக்கடிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ள நாட்டின் தொழில்நுட்ப முன்னேற்றங்களை அங்கீகரிக்கவும், புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும், தொழில்நுட்பத்தின் மீதான ஆர்வத்தை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் தேசிய தொழில்நுட்ப தினம் இன்று, அதாவது மே 11ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

 

மே – 12

சர்வதேச செவிலியர் தினம்

(International Nurses Day)

பிளாரன்ஸ் நைட்டிங்கேல் (Florence Nightingale) என்பவர் 1820ஆம் ஆண்டு மே 12 இல் பிறந்தார். இவர் மக்களுக்கும், போரின்போது பாதிக்கப்பட்ட ராணுவ வீரர்களுக்கும் சிறந்த மருத்துவ சேவை புரிந்தார். இவரின் மருத்துவ சேவையை கௌரவிக்கும் வகையில் இவர் பிறந்த தினமான மே 12 ஐ சர்வதேச செவிலியர் தினமாக 1965ஆம் ஆண்டுமுதல் கொண்டாடப்படுகிறது.

 

மே – 13

உலக அன்னையர் தினம்

(World Mother’s Day)

அண்ணா ஜார்விஸ் என்கிற அமெரிக்கப் பெண் தன் அன்னைமீது கொண்ட அன்பின் காரணமாக அன்னையர் தினம் ஏற்பட்டது. இவரின் கடும் முயற்சியால் அமெரிக்க ஜனாதிபதி வில்சன் அவர்கள் 1914ஆம் ஆண்டில் அன்னையர் தினத்தை அறிவித்தார். தாயின் ஆரோக்கியம், கல்வி, பொருளாதார வாய்ப்பு போன்ற சிறந்த வசதிகளை செய்து கொடுப்பதே அன்னையர் தினத்தின் நோக்கமாகும்.

 

வெசாக் தினம்

(Day of Vesak)

வெசாக் என்பது மே மாதத்தின் முழு நிலவு நாள். இதே நாளில் கி.மு. 623ஆம் ஆண்டில் புத்தர் பிறந்தார். ஆகவே உலகம் முழுவதும் உள்ள புத்தமதத்தை பின்பற்றுவோர் இத்தினத்தை புனித நாளாகக் கருதுகின்றனர். இத்தினத்தை ஐ.நா. சபையும் சர்வதேச தினமாக 1999ஆம் ஆண்டில் ஒரு தீர்மானத்தின் மூலம் பிரகடனம் செய்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.