மே – 31
உலகப்புகையிலை ஒழிப்பு தினம்
(World No – Tobacco Day)
புகையிலையில் நிக்கோடின் என்ற வேதிப்பொருள் உள்ளது. இது ஒரு போதைப்பொருளாகும். ஆகவே புகையிலையைப் பயன்படுத்தினால் எளிதில் இப்பழக்கத்திற்கு அடிமையாகி விடுவார்கள். புகையிலையில் 28 வகையான புற்றுநோய் காரணிகள் உள்ளன. புகையிலையின் தீங்கை மக்களிடம் கொண்டுசெல்ல உலகப்புகையிலை ஒழிப்பு தினம் மே 31 அன்று கொண்டாடப்படுகிறது.
மே மாத முதலாவது வியாழக்கிழமை
உலகக் கடவுச்சொல் நாள் (World Password Day) என்பது பலரும் தங்களுடைய தகவல் பரிமாற்றத்திலும் நிதி தொடர்பான பரிமாற்றத்திலும் பயன்படுத்தும் கடவுச்சொல்லை எவ்வாறு பாதுகாப்பாக அமைப்பது தொடர்பாகவும், அதனை குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை மாற்றம் செய்வது போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் இணைய முன்னோடிகளினால் கொண்டாடப்படும் ஒரு தினம் ஆகும். இந்நாள் ஆண்டுதோறும் மே மாத முதலாவது வியாழக்கிழமையில் கொண்டாடப்படுகிறது
மே மாத முதலாவது ஞாயிற்றுக்கிழமை
உலக சிரிப்பு நாள் (World Laughter Day) மே மாதத்தின் முதலாவது ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடப்படும் ஒரு சிறப்பு நாள் ஆகும். இத்தினம் முதல் முதலாக சனவரி 10 1988 இல் கொண்டாடப் பட்டது. இதை இந்தியாவின் மும்பையைச் சேர்ந்த டாக்டர் மதன் கதரியா ஆரம்பித்து வைத்தார். இவர் மும்பையைத் தலைமை இடமாகக் கொண்டு சர்வதேச நாடுகள் முழுக்க இயங்கி வரும் ‘லாப்டர் யோகா இயக்கத்தைத் (Laughter Yoga Moveement) தொடங்கியவர்.
மே – இரண்டாவது சனிக்கிழமை
உலக நியாயமான வர்த்தக தினம்
(World Fair Trade Day)
உலகம் முழுவதும் நியாயமான வர்த்தகம் செய்பவர், உற்பத்தியாளர் மற்றும் வாடிக்கையாளர்களை ஒன்றிணைக்கும் விதமாக மே மாதம் இரண்டாவது சனிக்கிழமை உலக நியாயமான வர்த்தக தினம் கொண்டாடப்படுகிறது. உலக நியாயமான வர்த்தகர் சங்கம் இத்தினத்தை அறிவித்துள்ளது. 75 நாடுகளில் 450 அமைப்புகளின் ஒப்புதலுடன் இத்தினம் கொண்டாடப்படுகிறது.
மே – 3 ஆவது ஞாயிறு
சர்வதேச எய்ட்ஸ் கேண்டில் லைட் நினைவு நாள்
(International AIDS Candlelight Memorial Day)
உலகில் தற்போது 33 மில்லியன் மக்கள் எச்.ஐ.வி. பாதிப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். எச்.ஐ.வி. விழிப்புணர்வு பிரச்சாரம் உலகில் மிகப்பெரிய பிரச்சாரங்களில் ஒன்றாகும். சமூக விழிப்புணர்வு, சமூகத்தை அணி திரட்டல் போன்ற காரணங்களுக்காக 1983ஆம் ஆண்டு முதல் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 115 நாடுகளில் 1200 சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து இதனைக் கடைப்பிடிக்கின்றனர்.
{kunena_discuss:747}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.