(Reading time: 14 - 27 minutes)

உலக பல்லுயிர் பெருக்க தினம்

(World Biodiversity Day)

மனிதர்களாகிய நாம் வாழ்வதற்கு இப்பூமியில் உரிமை உள்ளது போலவே மற்ற விலங்கினங்களும், தாவர இனங்களும் வாழ உரிமை உண்டு. பூமியின் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பது மனிதனின் கடமை. உயிரினங்களை அழிவிலிருந்து பாதுகாப்பதற்காக உலக பல்லுயிர் தினம் மே 22 இல் கொண்டாடப்படுகிறது. உயிரினங்களைப் பாதுகாக்கும் ஒப்பந்தத்தில் 150 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.

 

மே – 23

கார்ல் லின்னேயஸ் பிறந்த தினம்

(Carl Linnaeus Birth Day)

கார்ல் லின்னேயஸ் 1707ஆம் ஆண்டு மே 23 இல் சுவீடன் நாட்டில் பிறந்தார். இவர் தாவரவியலாளராகவும், விலங்கியலாளராகவும், மருத்துவராகவும் திகழ்ந்தார். இவர் புதிய மற்றும் தற்கால அறிவியல் வகைப்பாட்டு முறைக்கும், பெயர் முறைக்கும் அடிப்படையை உருவாக்கினார். எனவே இவர் நவீன வகைப்பாட்டியலின் தந்தை என அழைக்கப்படுகிறார்.

 

சர்வதேச மகப்பேறு ஃபிஸ்துலா ஒழிப்பு தினம்

(International Day to End Obstretric Fistula)

வளரும் நாடுகளில் சுமார் 2 – 3.5 மில்லியன் பெண்கள் மகப்பேறு ஃபிஸ்துலாவுடன் வாழ்கின்றனர். ஆண்டிற்கு ஐம்பதாயிரம்முதல் ஒரு லட்சம் பேர் இதனால் பாதிப்படைகின்றனர். இதனை முற்றிலும் குணப்படுத்த முடியும். ஆகவே இதனை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என 2003இல் பிரச்சார இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. ஐ.நா. சபையும் மே 23ஐ மகப்பேறு ஃபிஸ்துலா ஒழிப்பு தினமாக அறிவித்தது.

 

உலக ஆமைகள் தினம்

(World Turtle Day)

ஆமைகள் மிகப் பழங்கால உயிரினமாகும். இவை சுமார் 200 மில்லியன் ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றன. சிறப்பு அமைப்பு கொண்ட ஒரு கவசத்தால் ஆன ஓட்டினால் இதன் உடல் மூடப்பட்டுள்ளது. இந்த ஆமை இனம் தற்போது விரைவாக அழிந்து வருகிறது. அழிவிலிருந்து பாதுகாக்கவும், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உலக ஆமைகள் தினம் 2000ஆம் ஆண்டிலிருந்து கடைப்பிடிக்கப்படுகிறது.

 

மே – 24 - காமன்வெல்த் தினம், எம்பயர்டே, தினத்தந்தி நிறுவனர் ஆதித்தனார் நினைவு நாள்

 

மே – 25 - உலக தைராய்டு தினம்

மே – 25 -

சர்வதேச காணாமல் போன குழந்தைகள் நாள்

(International Missing Children's Day) எனும் இந்நாள், காணாமற்போன குழந்தைகளுக்கான சர்வதேச நாளென ஒவ்வொரு ஆண்டும் மே 25-ம் நாள் கொண்டாடப்படுகிறது. காணாமல் போகும் எதிர்காலத் தலைமுறையினரான குழந்தைகளுக்கு அரசு மற்றும் குடும்பங்களின் பாதுகாப்பு அவசியம் என்பதை வலியுறுத்தும் நோக்கில் இந்த நாள் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படுகிறது

 

மே – 26- குயின் மேரி பிறந்த நாள்

 

மே – 27 - உலக சகோதரர்கள் தினம், பண்டித நேருஜி நினைவு நாள்

சவகர்லால் நேரு (நவம்பர் 14,1889 – மே 27,1964) இந்தியாவின் முதல் பிரதமர் (தலைமை அமைச்சர்). இவர் பண்டிட் நேரு, பண்டிதர் நேரு என்றும் அழைக்கப்பெற்றார்.இவர் குழந்தைகள் மேல் மிகவும் அன்பு கொண்டவர். இவர் பிறந்தநாள் அன்று இந்தியாவில் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.

இந்தியா, 1947 ஆம் ஆண்டு ஆகத்து 15 அன்று ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றபோது அதன் முதலாவது தலைமை அமைச்சராகப் பதவியேற்றார். 1964, மே 27 இல், காலமாகும் வரை இப்பதவியை வகித்து வந்தார்.

 

மே – 29 - உலக தம்பதியர் தினம்

 

மே – 29

ஐக்கிய நாடுகள் சர்வதேச அமைதி காப்போர் தினம்

(International Day of UN Peacekeepers)

யுத்தத்தின்போது சமாதானத்தை ஏற்படுத்தவும், நிவாரணங்களை ஒருங்கிணைக்கவும், அமைதி காப்பாளர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களை உரிய இடங்களில் ஐ.நா. சபை பணியமர்த்துகிறது. ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஆண், பெண் இருபாலரையும் கௌரவிக்கவும், சமாதானத்தில் உயிர் நீத்தவர்களை நினைவுகூரவும் 2001ஆம் ஆண்டுமுதல் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.

 

மே – 30 - Goa Statehood Day, உலக முதிர்கன்னிகள் தினம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.