(Reading time: 10 - 19 minutes)

யா..

என்னப்பா?

ஐயா நீங்கள் தினமும் பாண்டுரங்கனை பற்றி பஜனைப் பாடல்களைப் பாடுவீர்களே இப்பொழுது கொஞ்சம் பாடமுடியுமா?பாட்டைக் கேட்டுக் கொண்டே வேலை செய்தால் எளிதாக இருக்குமல்லவா?

தம்பி நான் பாடுவதை நீ எப்போது கேட்டாய்?..நான் தினமும் பாண்டுரங்கனைப் பாடுவேனென்பது உனக்கு எப்படித் தெரியும்?

நான்தான் தினமும் கேட்கிறேனே..

என்னப்பா சொல்கிறாய்?

ஒன்றுமில்லை ஐயா..தயவு செய்து பாடுங்கள் ஐயா..

பாண்டுரங்க விட்டலன் மீது பாட ஆரம்பித்தார் ஷிவ்ராம்.பாடிக்கொண்டே இருந்தவருக்கு திடீரென தூக்கம் கண்களைச் சுழற்றியது.தூக்கத்தைக் கலைத்துக்கொள்ள அவரால் முடிய வில்ல.

உட்கார்ந்து கொண்டிருந்த இடத்திலேயே சட்டென படுத்துக்கொண்டவர் ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்து போனார்.

வாரிச் சுரிட்டிக்கொண்டு எழுந்து உட்கார்ந்தார் ஷிவ்ராம்..ஐயோ இதென்ன நான் ஏன் இப்படித் தூங்கிப்போனேன் எவ்வளவு நேரம் தூங்கினேனோ தெரியவில்லையே.?தன்னைத் தானே கேட்டுக் கொண்டே சுற்றும் முற்றும் பார்த்தார் ஷிவ்ராம்.

அவர் கண்ட காட்சியால் அவர் பார்வை நிலைகுத்திப் போயிற்று.பாண்டுரங்கா நான் காண்பது கனவா நினைவா?இதெப்படி நடக்கும்?இதெப்படி சாத்தியமாகும்?கண்ட காட்சி அவரை திகைப்படையச் செய்தது.ஆம்..போர்வீரர்களுக்கு காலணிகள் தயார் செய்ய வேண்டும் என அரசரால் கட்டளை இடப்பட்டு கொண்டுவந்து இறக்கப்பட்ட அத்தனை மூலப் பொருட்களும் காலணிகளாக வெகு நேர்த்தியாகத் தைக்கப்பட்டு அடுக்கிவைக்கப் பட்டிருந்தது.இதென்ன மாயம் இப்படிக்கூட நடக்குமா?

இது யார் செய்தது?அதுவும் மிகச் சிறிய நேரத்தில்.சாதாரண மனிதர்களால் இதனைச் செய்திருக்க முடியாது?அப்படியென்றால் இது யாரால் நிகழ்த்தப்பட்டது?சட்டென அவருக்கு அந்தச் சிறுவனின் நினைப்பு வந்தது.இங்கும் அங்கும் தேடிப்பார்த்தார்.அச்சிறுவனையும் காணவில்லை அவனுக்குத் தருவதாக வாககளித்த அந்தத் தங்க நிறக் காலணிகளையும் காணவில்லை.அப்படியானால் அச்சிறுவனா இவ்வளவு பெரிய பணியைச் செய்து முடித்திருப்பான்.மனிதச் சிறுவனாகிய அவனாலும் நிச்சயமாக செய்திருக்க முடியாது.குழம்பிப் போனார் ஷிவ்ராம்.பண்டரினாதா இது என்ன அதிசயம்?

யார் இப்படி நிகழ்த்தி இருக்கக் கூடும்..புரியவில்லையே விட்டலா?விட்டலா விட்டலா...என்று வாய்விட்டுப் புலம்பினார் ஷிவ்ராம்.அப்போது தந்தையே தந்தையே என்று கத்திக்கொண்டே ஒரு சிறுவன் ஷிவ்ராமை நோக்கி ஓடிவந்தான்.யாரது தந்தையே என்று தன்னை அழைப்பது? ஓடி வரும் சிறுவனைப் பார்த்தார் ஷிவ்ராம்.ஆ..என்று கத்தி விட்டார் தன்னை அறியாமல்..ஆம் ஓடிவந்தது அவரது கால்கள் விளங்காத வாய்பேச முடியாத மகன் பண்டரிதான்.தன் கண்களை அவரால் நம்ப முடியவில்லை.மகனே பண்டரி..பண்டரி என்ன அதிசயம் இது?உனக்கு கால்கள் எப்படி சரியாயிற்று?வாய் எப்படி பேச முடிந்தது?மகனைத் தொட்டுத் தொட்டுப் பார்த்தார் ஷிவ்ராம்.

தந்தையே..நான் வீட்டில் படுக்கையில் கிடந்தபோது எனக்கு மிகவும் தாகமெடுத்தது.தண்ணீர் பாத்திரம் தவறுதலாக என் கைபட்டுக் கீழேவிழுந்து தண்ணீர் முழுதும் கொட்டிவிட்டது.தாகம் பொறுக்க முடியாமல் நான் பாண்டுரங்கா பாண்டுரங்கா எனமனதிற்குள் சொல்லி அழுதேன் அப்போது திடீரென என் வயதை ஒத்த ஒரு சிறுவன் வீட்டிற்குள் வந்தான்  தண்ணீர் எடுத்து என்வாயில் ஊற்றினான் என் கால்களத் தடவிக்கொடுத்தான்.எனைப்பார்த்து சிரித்து விட்டு கிடுகிடுவென வெளியேறி விட்டான்.சட்டென்று எழுந்து என்னால் நடக்க முடிந்தது.சூம்பிய என் கால்களில் பலம் வந்தார்போல் இருந்தது.பாண்டுரங்கா என கத்தினேன்..என் வார்த்தைகள் எனக்கே தெளிவாகக் கேட்டது.என்னால் பேச முடியும் இனி என்று புரிந்தது.வந்தது வேறு யாருமல்ல தந்தையே அந்த பாண்டுரங்கன்தான் வந்திருக்கிறான் சந்தேகமே இல்லை என்று ஆவேசம் வந்தவன் போல் கத்தவும் ஷிவ்ராமனுக்கு மிகத் தெளிவாய்ப் புரிந்துபோயிற்று...பாண்டுரங்கா..பாண்டுரங்கா..என்று கத்திக்கொண்டே பண்டரினாதனின் கோயிலுக்கு ஓடினார்..அங்கே அங்கே..பாண்டுரங்கனைப் பார்த்த ஷிவ்ராம் சிலைபோல் நின்றுவிட்டார்.ஆம் பாண்டுரங்கன் பண்டரினாதன் இடுப்பில் கைகளை ஊன்றியபடி மந்தகாசப் புன்னகையோடு நின்றுகொண்டிருந்தான்.

அவன் திருப் பாதங்களில் ஷிவ்ராம் தைத்த தங்க நிறக் காலணிகள் மின்னின.பாண்டுரங்கா..பாண்டுரங்கா..நீயா..நீயா.. சிறுவனாய் வந்தாய்?நீயா போர்வீரர்களுக்கான காலணிகள் அனைத்தையும் தைத்தாய்?என் மகனின் முடம் நீக்கி...அவனின் வாய் பேச வைத்து...பாண்டுரங்கா..பண்டரினாதா..விட்டலா...எப்பேர்ப்பட்ட அற்புதம் நீ நிழத்திவிட்டாய்?உனையே சதம் என நம்பும் பக்தரை நீ என்றுமே கைவிடுவதில்லை..

விட்டல் விட்டல் பாண்டுரங்கா பண்டரினாதா சொல்லிக்கொண்டே நெடுசாண்கட்டையாகக் கீழே விழுந்து விட்டலனை வணங்கினார் ஷிவ்ராம்..அவர் பக்கத்தில் அவரின் மகன் பண்டரியும் பாண்டுரங்கா..பாடுரங்கா எனச் சொல்லிக்கொண்டே விழுந்து வணங்கினான்.

அவர்களோடு சேர்ந்து நாமும் பண்டரினாதனை வாயாரப் பாடி மனதாரத் துதிப்போமே.. அவன் அருளுக்குப் பாத்திரமாவோமே...விட்டல்.. விட்டல் ஜெய்..ஜெய்..விட்டல்..

இனி வரும் நாட்களில் அவ்வப்போது ஆன்மிகப் பகுதியில் சில்சீயின் சம்மதத்தோடு சின்னச் சின்ன எளிய பக்திக் கதைகள் எழுலாமென நினைக்கிறேன்..ஓரளவாவது வரவேற்புக் கிடைத்தால்.. நன்றி..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.