(Reading time: 7 - 14 minutes)

 

டியவர் வேடத்தில் வந்திருந்த பாண்டுரங்கன் ஐயா..கொஞ்சம் விழித்துக் கொள்ளுங்கள்..என்று பலமுறை வேண்டினார்.திரிலோசனாரும் கண்களைத் திறந்தார்.

அவர் அடியவரை பார்த்து சுவாமி..இவ்வடர்ந்த காட்டில் உம்மைப் பார்த்தால் வியப்பாக உள்ளது..தாங்கள் எதற்காக இங்கு வந்தீர் ?நான் தங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்றார்..

அடியவர் வேடத்தில் இருந்த இறைவன்..ஐயா..இன்று இன்னாட்டின் மன்னர் மகளுக்கு திருமண நிச்சயதார்த்தம்..மன்னரின் மகளான மணமகள் அணிய கண்டோர் வியக்கும் வண்ணம் ஓர் ஹாரத்தை பொற்கொல்லர் ஒருவர் செய்து கொடுத்தாராம்.மன்னர் மகிழ்ந்துபோய் அளவுக்கதிகமாய் பொற்காசுகள் கொடுத்தாராம்.அந்த பொற்கொல்லார் இறையடியார்களை அழைத்து நல்லதொரு விருந்தளித்தார். அவ்விருந்தில் நானும் கலந்து கொண்டேன்.திருப்தியாய் உண்ட நான் திரும்பி வருகையில் பாதை தவறி இக் காட்டிற்குள் வந்து விட்டேன்.இதோ பாருங்கள் விருந்தில் அளிக்கப்பட்ட பதார்த்தங்களை மீண்டும் பசியெடுத்தால் உண்ணலாமென கொஞ்சம் அந்த பொற்கொல்லரிடம் கேட்டுப் பெற்றுக் கொண்டுவந்துள்ளேன்..உம்மைப் பார்த்தால் மிகவும் பசியோடு இருப்பவர் போல் தெரிகிறது.இந்தாருங்கள் இதனை நீங்கள் உண்ணுங்கள் என்று கொண்டுவந்திருந்த உணவுப் பொட்டலத்தை அளித்தார்.

உண்மையில் திரிலோசனதாசருக்கு அந்த அடியார் கூறிய செய்தி மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தது.

நல்லவேளை ஹாரம் செய்வதற்கு நம்மால் ஆகாது என நினைத்த நாம் மன்னனின் தண்டணைக்குப் பயந்து இக்காட்டில் வந்து ஒளிந்து கொண்டோம்.வேறொரு பொற்கொல்லர் அதனைச் செய்து கொடுத்துவிட்டார் போலிருக்கிறது.நல்லவேளையாய்ப் போயிற்று.இனி நாம் நம் வீடு திரும்பலாம்.இனி பயமில்லை என நினத்தார்.அந்த நினைப்பே அவருக்குப் பசியைத் தூண்டியது.அடியவர் அளித்த உணவை ஏற்று அதனை உண்டார் திரிலோசனார்.

வீட்டுக்குக் கிளம்பியவர் அந்த அடியவரிடம்..சுவாமி எனக்கு உணவளித்த நீர் என்னுடன் என் இல்லம் வரவேண்டும்.உமக்குத் தக்க மரியாதை செய்ய விரும்புகிறேன் என்றார்.

அடியவரின் உருவில் இருந்த பாண்டுரங்கனும் சம்மதித்தார்.இருவரும் திரிலோசனாரின் இல்லம் அடைந்தனர்.

அடியவர் திரிலோசனாரின் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து கொள்ள திரிலோசனதாசர் உள்ளே சென்றார்.

வீட்டில் குவிந்து கிடந்த மளிகைப் பொருட்களைக்கண்டு வியந்த திரிலோசனார் மனைவியிடம் இன்று என்ன வீட்டில் விசேஷம்? ஏதும் விருந்து நடக்கப் போகிறதா?மளிகைப் பொருட்கள் குவிந்து கிடக்கின்றன?

என்று வியப்போடு கேட்டார்.அவரின் கேள்வியால் திகைத்துப் போனார் அவரின் மனைவி.

இதென்ன இப்படிக் கேட்கிறீர்கள்?நீங்கள்தானே ஹாரம் செய்து கொடுத்ததற்காக மன்னர் அளித்த மோகராக்களில் என்னிடம் சிலவற்றைக் கொடுத்து அடியவர்களுக்கு விருந்து வைக்க மளிகைப் பொருட்கள் வாங்கி வரச் சொன்னீர்கள்.அவ்வாறு நானும் வாங்கி வர அடியவர்களுக்கு விருந்தும் வைத்தோமே..?

நீங்களும் அவ்விருந்திலிடப்பட்ட பதார்த்தங்களைப் பொட்டலமாகக் கட்டிக்கொண்டு எங்கோ சென்றீர்களே?அப்படியிருக்க ஒன்றுமறியாதவர் போல கேள்வி கேட்கிறீர்களே என்றாள்.

மனைவி சொன்னதைக் கேட்டு வியந்து போன அவர் தன்னைக் காட்டில் சந்தித்தவரும் இதைத்தானே சொன்னார் என்று அதிசயத்தபடி வெளியே வந்தார்.வந்து பார்த்த போது திண்ணையில் அந்த அடியவரைக் காணோம்.

இப்போது நன்கு புரிந்து போயிர்று திரிலோசனதாசருக்கு.தான் மன்னனுக்கு பயந்து காட்டில் சென்று ஓளிந்து கொண்டபோது பாண்டுரங்கனே தம் உருவில் இங்கு வந்து ஹாரத்தினைச் செய்து மன்னனிடம் கொடுத்து கூலிபெற்று அதில் மளிகை வாங்கி அடியவர்களுக்கு விருந்து படைத்துள்ளார். அவிருந்தில் அளிக்கப்பட்ட உணவினை எனக்கும் கொண்டுவந்து அளித்துள்ளார் அடியவர் வேடமிட்டு வந்து.

ஆஹா..ஆஹா..எப்பேர்ப்பட்ட பேறு இது.தன் பக்தர்களை பாண்டுரங்கன் எப்போதும் துன்பப்பட வைத்ததே இல்லை.தன்னை நம்புபவரை அவன் கைவிடுவதே இல்லை..என மிகுந்த பக்தியோடு தன்னை மறந்து பாண்டுரங்கன் மீது பாடல்களைப் பாட ஆரம்பித்தார்.அவர் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பிரவாகமெடுத்தது.

சொல்லுங்கோ..பாண்டுரங்கா..பண்டரினாதா..விட்டல் விட்டல்... ஜேஜே விட்டல்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.