(Reading time: 2 - 3 minutes)

பகலவன், பால் நிலா, நட்சத்திரம் - அனு.ஆர்

பார்வையுள்ள யாரிடமும்

மறைக்கபட முடியாதவன்

பகலவன்.

பகல் தோறும் இவனது பயணம்.

பயிர் செய்வோரின் பங்காளி

படைத்தவர் தந்த உணவு தொழிற்ச்சாலை.

 

பகலிற்கு விளக்கிட்டு

இரவில் அணைத்துவிடும்

இறைவன்

உன்னிலிருந்து வித்யாசமானவன்

என இகத்திற்கு அறிவிப்பவன் இவன்.

 

ஒரு நாள் மாத்திரம் உதிரும்

இளைய நிலாவிற்கும் இதே

கதைதான்.

பாலையிலும் பார்வைக்கு

பால்வார்க்கும் பாவையிவள்

இரவின் கொண்டாட்டம்.

 

துயில் கொள்ளும்

தன் பிள்ளை

பதறாமல் இருக்க

விடி விளக்கு

ஏற்றும்

அன்னையின் குணம்

ஆண்டவருக்கு என

இதம் சொல்பவள்.

 

இரவு பகல்

பருவ காலம்

பகுத்தறிவிப்பது

என பல வேலை இருவருக்கும்.

படைத்தவரின்

அன்பை

அக்கறையை

வல்லமையை

வலு செயலை

மானிடத்திற்கு அறிவிக்கும்

மகத்தான தூதுவர்கள்.

 

பிள்ளைகள் நாம்

பெற்றவரான பரம தகப்பனுக்கு

எத்தனை முக்கியமானவர்கள்

என அன்பாய் அறிவிப்பவர்கள்.

 

பகலவன்

வெளிச்சத்திற்குள்ளும்

மறைந்து கொள்ள முடிந்த ஒரே

மாயமிது.

இளம் இருட்டிற்குள்

முழு முகம் காட்டாமல்

மை இருட்டில்

வெளிப்படும்

இது

நட்சத்திரம்.

 

உடனிருந்தும்

ஒளியுண்ட

விரிந்த விழியில்

விழாமல்

கொடும் துன்பத்தில்

இருட்டில்

துவளும் போது

துணை வருவதை

வெளிக்காட்டும்

இறைவனை

குறிக்கும்

ரகசிய குறியீடு

இந்த வெண்

சித்திரம்.

 

இயற்கை அது

கடவுள் கையால்

செய்யப்பட்ட செயற்கை

அது

இறைவனை பற்றி

இடைவிடாது

இயம்பிக்கொண்டுதான்

இருக்கின்றது.

காதுள்ளவன்

கேட்க்க கடவன்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.