(Reading time: 1 minute)

நாயகன் - அன்னா ஸ்வீட்டி

வெண்மையும் சிவப்புமானவன்

பதினாயிரம் பேர்களில் சிறந்தோன்

சிந்தை தங்கம்

சிகை காக நிறம்

பாலில் கழுவபட்டனவோ கண்கள்

பதமாய் பதிக்க பட்டிருந்தன அவை முன்னில்

கன்னங்கள் கந்தவர்க்க பாத்திகள்.

உதடுகள் நறுமண வார்ப்புகள்.

வார்த்தைகள் மதுர யாப்புகள்

கரங்கள் தந்த ஞாபகம் தரும்

கால்களோ பசும் பொன் தூண்களை.

கடும் காட்டிலுள்ள பெரும் மரங்கள்

பல ரகங்கள்.

அதில் எம்மரம்

தந்தது தேகம்? எனுமாய் ஒரு வாதம்

பார்ப்போர் மனதில் இயல்பாய் எழும்.

இவன் முற்றிலும் அழகுள்ளவன்

ஆம்! இவனே முற்றிலும் அழகுள்ளவன்.

காற்றாக நான் வருவேன் கதை நாயகனை குறித்து எழுதபட்டது இது..”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.