(Reading time: 1 - 2 minutes)

 06. ராதா கிருஷ்ணன் காதல் - ராதை தோழியிடம் தூது - புவனேஸ்வரி

Radha Krishna Kathal

அருந்ததி, ஆருயிர் தோழியே வா

ராதையை ஏங்க  வைத்த மன்னனை காண் !

 

கண்ணின் மணி நீயென்று கவி சொன்னான்

அவனை எண்ணியே சிந்தும் என் கண்ணீரே வீண் !

 

மடிமீது உறங்க வைத்து மயக்கம் தந்தான்

இன்றுமலர் இவளது அருகாமை சுமையென்றுநொந்தான் !

 

தேன்சிதறி தெவிட்ட வைக்கும் குரல் உனதுஎன்றான்

இக்குரலினால்  அழைக்கிறேன் மறைந்தே நின்றான் !

 

எந்த பூவில் மணம்  அதிகம் அவனறிவான்

இவள் பூவுள்ளம்  வாடியதை அவனறியான் !

 

வருடும் தென்றல் எத்திசை என்றறிவான்

என் எட்டுத்திசையும் மன்னவனின்  வாசல் என்றறியான் !

 

புன்னகைக்கும் முகம் அழகென்று அவன் உரைப்பான்

என் புன்னகையின் மர்மமேஅவன் என்பதை மறப்பான் !

 

என்ன பிழை செய்துவிட்டேன் அவனது ராதை

அதை புரியாமல் வரட்சியாகும் எந்தன் பாதை !

 

என்னருமை தோழி என்றும் நீதான் என்றாயே

உன்னிடமே கெஞ்சுகிறேன் அவனிடம் இதை சொல்வாயே !

 

லீலைபுரியும் தேவன் அவனுக்கு நேரமிருந்தால்

ஒரு கணமேனும் என்னை வந்து தழுவச் சொல்லடி !

 

நேசம் எனும் நீரினிலே மூழ்கிவிட்டேன் !

பாசம் எனும் பாலையிலே வாடி விட்டேன் !

 

அன்பெனும் அமிலத்தை அருந்திவிட்டேன் !

என்னை காதலுடன் தழுவி கொஞ்சம் மீட்கச் சொல்லடி!

 

அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்

Ratha Krishnan kathal - 05

Ratha Krishnan kathal - 07

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.