(Reading time: 1 - 2 minutes)

கவிதை - நம் கூடு - ராஜலக்ஷ்மி

 உன்னோடு  நான் வாழும்  இடம் 

 வீடு  அல்ல...

 நம் அன்பெனும்  இழைகளால்  பின்னபெற்ற  சிறு 

 கூடு  அது ...

 

 ஆளில்லா  பெருங்காட்டில் 

 அழகான  சிறு  கூடு 

 அது ...

 

 அதில் ,

 

    மலர் மகள்  தன்  மகரந்தத்தால் 

    மணம்  பரப்புவாள். . . 

 

    வானவில்  நண்பனிடம்  வண்ணங்களை 

    கடன்  வாங்கி 

    வண்ணத்துப்  பூச்சிகள் தம் சிறகுகளால் 

    நிறம்  சேர்க்கும். . .

 

    மின்சார  தட்டுப்பாடு  அறவே  இல்லை 

    மின்மினி  பூச்சிகளேனும் 

    விளக்குகள்  உண்டாம். . . 

 

    மழை  நீர்த்  துளிகளிலே நம் 

    தாகம்  தீர்ப்போம் 

  

    மனிதர்களின்  நாசியையே  சந்தித்திரா 

    மாசற்ற  காற்றினையே 

    சுவாசித்திருப்போம் 

 

    மலையன்னையின்  மடியினிலே 

    மூலிகைக்  குளியல் 

    மறவாமல்  தலை  துவட்டுவாள் 

    தென்றலும்  மெல்ல 

    சிட்டுக்குருவிகளோடு  சேர்ந்து 

    சிறகுலர்த்திடுவோம் 

 

    தேனீக்கள்  நம்  பசியாற்றும் 

    சிப்பந்திகளாம் - அவற்றின் 

    ரீங்கார  இசையோடு 

    இரவுறக்கமாம் 

 

   பொருள்  தேடல், புகழ்  கூட்டல்

   இனி  தேவையில்லை 

 

    இயந்திர  வாழ்வின்  சிறு  சுவடும் 

    இங்கு  நமக்கில்லை 

 

    இயற்கையோடு  இயைந்த நம்  புது  வாழ்வில் 

    இறப்பென்பது  இனி  எப்போதும்  இல்லை. . .  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.