(Reading time: 2 - 3 minutes)

கண்ணீர் துளிகளுடன் - அப்துல் காதர் ஹசனி

 Chennai floods

சென்னை....

தமிழகத்தின்

மூச்சு குழல் !

 

மூச்சு குழலில்

தண்ணீர் புகுந்து விட்டது !

 

சென்னை...

தமிழத்தின் இரைப்பை!

தமிழ் பந்தத்தின்

எல்லா உறவுகளையும்

உள்வாங்கி செரித்துவிடும்

வலிமை அதற்கு உண்டு!

 

ஆனால் பெருவெள்ளத்தை

செரிக்க முடியவில்லை

குடல் சரிந்துவிட்டது !

 

தமிழகத்தின் இதயம்

தண்ணீரில் மூழ்கிவிட்டது!

 

தமிழ் மக்களின் இதயம்

கண்ணீரில்  மூழ்கிவிட்டது !

 

வெள்ளம் தின்ற பிணங்கள்

செரிக்காமல் பாதியாய்

வீதியில் மிதக்கிறது.!

 

உயிர்காக்க தப்பிய

ஜனங்கள்  கூட்டம்

நிர்கதியாய்

நடுத்தெருவில் வதைகிறது !

 

உறவை தேடி

ஒதுங்கி வரும் பிணங்கள் !

 

பிணங்களை தேடி

ஓடிவரும் மனங்கள் !

 

வெள்ள வேட்கைக்கு முன்

கொடி மதிப்பெல்லாம் தெரு கோடியில் !

 

லட்ச மதிப்பெல்லாம்

அவ லட்சணமாய் !

 

பிரபலங்கள் கூட தத்தளிக்கிறார்கள்

ஆம் !

தண்ணீர் தன்னை தவிர  பிற பலங்களை

அனுமதிக்கவில்லை.

 

பீகாரில் புயல் வந்தது

உறங்க  மறக்கவில்லை

அஸ்ஸாமில்  வெள்ளம் வந்தது

உண்ண மறக்க வில்லை !

ஒடிசாவில் புயல் வந்தது !

ஓய்வெடுக்க தயங்க வில்லை !

ஏன் தெரியுமா ?

அங்கெல்லாம்

என் உறவு சாகவில்லை !

என் உயிர் போகவில்லை !

என் உடல் நோகவில்லை !

வீரியம் தெரியவில்லை !

வேதனை புரியவில்லை !

 

முதல் முறையாக

ஒரு முடிக்க தெரியாத

கவிதை எழுதுகிறேன்

 

சொல்ல முடியாத சோகத்தில்

என் பேனா புதைந்து விட்டது.

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.