(Reading time: 1 - 2 minutes)

கவிதை - நள்ளிரவு நட்சத்திரங்கள் - ஆசுல் ஹமீத்

midnight Stars

சில நூறு நட்சத்திரங்களின்
ஒளியில் பிரவாகம் செய்யும்
நள்ளிரவுப் பொளுதொன்றின்
குளிரில் சிலிர்த்தபடி
மேன்மாடமொன்றில் அமர்ந்து
எனக்கானதோர் வசந்தக்
கனவொன்றில் பிரபஞ்சித்துக்
கொள்கிறேன்;
நிலவிலோர் வீடுகட்டி,
நட்சத்திரம் பிடுங்கி
கூரைகொண்டு
என்றெல்லாம்
இல்லையிது;
தேடும் கனவானதே
என் துக்கத்தையும்
தூக்கத்தையும் சேர்ந்தே
விரட்ட போதுமான
உயிரிலானதொரு
உன்மத்தம்.....

இருள் விலகுவதற்கு
பொழுது மிச்சமிருக்கிறது,
இருந்தும்
எனக்கான நீலமும்
பரந்தே கிடக்கிறது!!!

நள்ளிரவு நட்சத்திரங்கள்

{kunena_discuss:1143}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.