(Reading time: 5 - 9 minutes)

"இந்த டைம்ல எங்க டா போயிருக்க போறாங்க? அவங்களுக்கு கால் பண்ணியா?" என கேட்க "அவ கிட்ட மொபைல் இல்ல யாழ்" என்று நந்தன் கூறியதும் "விளங்கிடும்" என தன் தலையில் கையை வைத்து அருகில் இருந்த ஊஞ்சலில் அமர்ந்துவிட்டாள். 

 

"சரி அவங்க கிட்ட மொபைல் இல்ல அவங்க ஃப்ரெண்ட்ஸ் க்கு கால் பண்ணியா?" 

 

"ஈவ்னிங்  பேசினேன் ஏதோ பிளான் செஞ்சு இருக்காங்க போல இப்போ லேட் நைட் ஆச்சுல அவங்களை ஏன் டிஸ்டர்ப் பண்ணனுனு  கூப்டல யாழ் அவங்க ஒண்ணா தான் இருப்பாங்கன்னு நினைக்கிறேன்" என பாவமாய் முகத்தை வைத்துக்கொண்டு கூறிய தன் அருமை அண்ணனை வெட்டவா குத்தவா என்ற ரீதியில் முறைத்துக்கொண்டிருந்தாள் யாழ். 

 

அடக்கிய கோபத்துடன்  "சரி சார் இப்போ என்ன செய்ய போறதா இருக்கீங்க?" என்றாள். 

 

"காலைல பாக்க தான போறேன் யாழ் இப்போ நீ ஏன் இவ்வளோ டென்சன் ஆகுற ஃப்ரீயா விடு" என சமாதான மொழிகளை யாழிடம் கூறினான் நந்தன். 

 

"எப்படி நந்து கூலா இருக்க நீ லவ் பண்ற இல்ல உனக்கு தெரிஞ்ச பொண்ணு வீட்டுல தனியா இருக்கா, அவ கிட்ட மொபைல் இல்ல, அவ வீட்டுலையும் இல்ல, எங்க போனானு தெரியல, அவங்க ஃப்ரெண்ஸ் கிட்ட கேக்கல, சுத்தியும் எங்கையும் தேடல, ஆனா காலைல வந்துடுவா னு சொல்ற இப்போ இந்த நேரத்துல அந்த பொண்னுக்கு ஏதாவது  ஆக்சிடெண்ட் ஆகி இருந்தா? இல்ல யாராவது கிட்னாப் செய்து இருந்தா? இல்ல வானதிக்கு நடந்த மாதிரி...." என தொடங்கும் போதே நந்தனின் கை தானாக உயர்ந்து யாழின் வாயை மூடியது. 

 

"என் க்ரிஷ்ணாக்கு எதுவும் ஆகி இருக்காது யாழ்" என்ற இறுகிய முகபாவத்துடன் கூறிய நந்தனிடம் 

 

"எதுவும் ஆகி இருக்காது தான் நந்து.. ஆனா நீ லவ் பண்றேனு சொன்னா மட்டும்  போதாது அந்த லவ் அவங்களை உணர வைக்கனும். அவங்க வீட்டுல இல்லைனு தெரிஞ்சும் ஒரு பதட்டமும் இல்லாம எப்படி உன்னால இருக்க முடியுது" என மூச்சிரைக்க பேசிக்கொண்டிருந்தாள். 

 

அவளை கையமர்த்தி தடுத்தவன் "மேடம் பேசி முடிச்சுட்டீங்களா... இப்போ ப்ரியா எங்கனு தெரியனும் அது தான? ஒரு நிமிஷம் இரு..." என்றவன் தன் மொபைலை எடுத்து காவியாவிற்கு அழைக்க "அண்ணா வாட்ஸ்அப் வாங்க" என்றதுடன் அவள் அழைப்பை துண்டித்தாள். 

 

"சாண்டி சீனியர் க்கு வீடியோ கால் பண்ணு" என்ற காவியா தன் அலைபேசியை நீட்ட சந்தியாவும் அவ்வாறே செய்தாள். "ஹாய் அண்ணா.... கொஞ்சம் இருங்க.." என்றபடியே பிரியாவின் புறம் அலைபேசியை திருப்பினாள். யாழ் இது தான் பிரியா என்று அறிமுகப்படுத்தினான் நந்தன்.

 

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.