(Reading time: 8 - 15 minutes)

“இப்போ இந்த நிமிசம் நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன்” என கண்கள் மகிழ்ச்சியில் மின்ன கூறினாள் பிரியா. 

 

“சரி வா, சாப்பிட போகலாம் இனிமேல் தான் நிறைய வேலையே இருக்கு” என அவள் கைகோர்த்தபடியே கேட்டான் நந்தன். 

 

சரி என தலையாட்டியவள் தானும் அவனுடனே இணைந்து நடந்தாள். 

 

அனைவரும் உணவருந்தி முடிக்க அகல்யா ப்ரியாவிடம், “பிரியா இன்னும் ஒரு வாரத்துல உங்களுக்கு கல்யாணம். இனியும் நீ அந்த வீட்டுல தனியா இருக்க வேண்டாம். நாளைக்கே வீட்டை காலி பண்ணிட்டு நம்ம வீட்டுக்கு வந்துடு.” என சொல்ல அவள் ஒரு வாரத்தில் திருமணம் என்றதிலே பேச்சற்று அமர்ந்திருந்தாள். 

 

திருமணம் என்பதில் அவளுக்கு மகிழ்ச்சி தான். ஆனால் ஒரு வாரத்தில் என்பதில் தான் அவள் மனசுணக்கமே. அதுவும் தன்னிடம் திருமணம் பற்றி எதையும் கேட்கவில்லையே என்ற வருத்தமும் கூட. 

 

அவளது முகமாற்றத்தை உணர்ந்த நந்தன், “போச்சுடா இவ கிட்ட காலைல சொல்லிக்கலாம்னு பார்த்தா அம்மா இப்பவே இதை பற்றி பேசிட்டாங்களே. சரி டா நந்து சமாளி சமாளி” என தனக்கு தானே ஆறுதல் கூறியவன்,  

 

“ம்மா நான் பார்த்துக்குறேன். நீங்க எல்லாரும் முதல்ல வீட்டுக்கு கிளம்புங்க. நான் பிரியாவை வீட்டுல விட்டுட்டு வரேன்” என்று அவசர அவசரமாய் அவர்களை வீட்டிற்கு வழியனுப்பி வைத்தான். 

 

கொஞ்சமே கொஞ்சம் கூட்டை விட்டு வெளிவந்த பிரியாவின் மனம்  நத்தை போல மீண்டும் தன் கூட்டினுள் செல்வதாகவே உணர்ந்தான். பிரியாவின் வீடு வரும் வரை இருவரிடமும் எந்த பேச்சு வார்த்தையும் இல்லை. 

 

காலை வழக்கம்போல செய்திதாளை புரட்டிக்கொண்டிருந்த சக்திவேல் தாத்தவின் கண்களில் பட்டது அந்த விளம்பரம். “ஜார்ஜ் சில்க்ஹவுசின் 25ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு உங்கள் ஜார்ஜ் சில்க்ஹவுசில் பட்டு புடவை அனைத்தும் நீங்கள் எதிர்பார்க்க முடியா விலையில் ரூ 99 முதல். இந்த அதிரடி சலுகை இன்று ஒரு நாள் மட்டுமே. 

 

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.