(Reading time: 8 - 15 minutes)

கடற்கரை மணலில், இரவின் தனிமையில், அலைகளின் இசையில், நிலவின் ஒளியில், ஓர் ஏகாந்த மனநிலையில் இருவருமே நடந்துக்கொண்டிருந்தனர். 

 

“கிருஷ்ணா நீ இன்னும் எந்த பதிலும் சொல்லவே இல்லையே?” என நந்தன் தயக்கமாய் கேட்க 

 

“நான் என்ன சொல்லனும்னு எதிர்பார்க்குரீங்க” 

 

“இல்ல நீயும் என்னை விரும்புறியா?” 

 

“எனக்கு என்ன சொல்றதுனு தெரியல, யாருமே இல்லாத எனக்கு உங்க மூலமா ஒரு குடும்பத்தை அந்த கடவுள் கொடுத்து இருக்காரு. எனக்கு உங்க குணம், நீங்க நடந்துக்குற விதம், உங்களோட அன்பு, அக்கறை, இதோ இப்பொ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீங்க எல்லார்கூடவும் சிரிச்சு பேசுனது எல்லாமே ரொம்ப பிடிக்கும். ஆனா நான் உங்களை விரும்புறேனா னு கேட்டா எனக்கு அதற்கான விடை தெரியலை.” என பேசியவள் கைகளை மார்பின் குறுக்கே கட்டியபடி நடந்துக்கொண்டிருந்தாள். 

 

“ஏன் கிருஷ்ணா, எப்பவும் ஒன்னு தப்பாவே யோசிக்குற இல்லைனா எதையும் யோசிக்கவே மாட்டேங்குற. வானதிக்கு டெலிவரி நேரத்துல எப்போ என்னை நீ கட்டிபிடிச்சியோ அப்போவே உன் மனசுல நான் இருக்கேனு எனக்கு தெரிஞ்சிடுச்சு. உன்னை தனியா விட்டா நீ வேற மாதிரி யோசிக்க ஆரம்பிச்சுடுவ. அதுனால தான் இந்த அவசர ஏற்பாடே. கூடிய சீக்கிரம் உனக்கு உன்னொட மனசை புரிய வைக்குறேன் பாரு.” என தன் மனதினிலே சூலுரைத்துக்கொண்டவன் 

 

“பரவால்ல கிருஷ்ணா நீ என்னை பற்றி இவ்வளோ தெரிஞ்சு வைச்சு இருக்குறதே அதிசயம் தான். ஆனா ஒன்னு மட்டும் உறுதியா சொல்றேன் இதுவரைக்கும் நீ இழந்த எல்லாத்தையும் உனக்கு நான் திருப்பி கொடுப்பேன்.” என கட்டியிருந்த அவள் கைகளை பிரித்து தன் கையோடு கோர்த்துக்கொண்டான். 

 

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.