(Reading time: 2 - 3 minutes)

கனவுகள் பல சுமந்தேன்...

கோட்டைகள் பல கட்டினேன்...

அரசனான உன்னருகில்

அரசியாய் நானும் அமர்ந்திட...

 

முகமறியா உன்னை காண 

மனம் முழுவதும் கற்பனையுடன் காத்திருந்தேன்...

உன்னை கண்டிட்ட அந்நாளே

உனக்காய் கனவு கண்டேன்...

 

காத்திருந்த நாட்கள் கரைய

கண் முன்னே நீ தெரிய

தலைகுனிந்து உன் கையால்

தாலியை ஏற்றுக்கொண்டேன்

தலைநிமிர்ந்து வாழ வைப்பாய் என்று....

 

இல்லறம் என்பது இரு மனங்கள்

இணைந்திட தோன்றும் உறவென்று

இனிக்க இனிக்க கூறிட்ட

இணையில்லா தம்பதியின் வார்த்தை கேட்டு

உன் மனதோடு என் மனம் இணைய

உனக்காக காத்திருந்தேன்...

 

ஆயிரமாயிரம் ஆசைகளோடு

எண்ணில்லா எதிர்பார்ப்புகளோடு

கண்களில் நிறைந்த கனவுகளோடு

வெட்கம் நிறைந்த உணர்வுகளோடு

உன்னிடம் நான் சரணடைந்தேன்....

 

இணைந்தது ஈருடல் ஓருடலாய்...

இணையாமல் போனதோ?

இரு மனங்கள் ஒரு மனமாய்...

 

வருடங்கள் பல கடந்து விட்டது

வலிகள் மட்டும் குறையவில்லை

வார்த்தைகள் என்னை கொல்கிறது

வாழும் விருப்பம் ஏனோ தொலைகிறது

 

அன்பிற்காக ஏங்கிய நெஞ்சம்

அமைதி தேடி துடிக்கிறது....

பாசத்திற்காக தவித்த உள்ளம்

பரிதவித்து கிடைக்கிறது....

 

இறைவன் எழுதிய வரிகளில் இதுவோ..

இதை மாற்றிட வழியில்லையோ...

இதயம் வளி தேடி திணறிடுதே....

இமைகள் வலியால் பொழிகிறதே...

 

விதியை மாற்றும்

மதி இன்றி

விதிக்குள் சிக்கிய

பதியாக தொலைகிறேன்....

3 comments

  • [quote name=&quot;Jeba..&quot;]Ungal comment kooda ethugai moonai udan kavi nayamaga irukirathu... Thank you dear uncle[/quote]<br />தங்கள் கவிதையே படித்ததும் ஏற்பட்ட புதிய திறன்!
  • Good morning dear Jeba! நேற்றைய கவிதையே விடவும் சூப்பர் இது! தங்கள் கவித்திறன் கதைத்திறனை விஞ்சுகிறது! வரிகள் ஒவ்வொன்றிலும் வலி தெறிக்கிறது. இப்படி எத்தனையோ மனங்கள் தவிக்கிறது, சமூகத்தில், ஆணினத்தில் சிலரின் ஆணவத்தால்!

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.