(Reading time: 6 - 12 minutes)

ஏழைகளும், கையேந்திகலும் பெரும்பாலும் வாழும் இடமான கூவநதிக்கரையிளும் இரயில் தண்டவாள பாலங்களுக்கு அடியிலுமே நாங்களும் வாழ்ந்து வந்தோம்.. அங்கு அனைவரும் குடும்பங்களோடும், பிள்ளைகளோடும் சிரித்து பாசவலையில் வாழ்ந்தனர்,  நானும் வாழ்ந்தேன் ஒரு சிலந்தியின் வலையில். 

எனக்கு சொந்தம் என்ற பெயரில் இருந்தது தோல்கள் சுருங்கி நெஞ்செலும்புகள் வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும் என்னுடைய தாத்தாவும், குட்டி நாய் மணியும்.... 

 

 நானும், மணியும் பையை தூக்கிக்கொண்டு வழக்கம் போல தொழிலுக்குப் புரப்பட்டோம்.. 

‌போகும் வழியில் சாலையில் ஒருவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார், அதை பார்த்ததும், எனக்கு படபடப்பாக இருந்தது. ஓடிச்சென்று அருகில் இருந்த கடையில் தண்ணீர் வாங்கி அவர் முகத்தில் தெளித்துக் கொண்டே அருகில் இருந்தவர்களை கூப்பிட்டேன்.

சட்டென்று கண்ணிமைக்கும் நேரத்தில் கூடியது கூட்டம், சிலர் ஆடோவில் ஏற்றி அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். 

கூட்டத்தில் ஒருவர் என்னைப் பார்த்து, சின்ன வயசுலே பொறுப்பாக இருக்கிறாயே நீ என்னப் படிக்கிறாய்? என்றதும், பிச்சையெடுக்கிறேன் என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டு சிறு புன்னகையுடன் அவ்விடத்தைவிட்டு நகர்ந்து சென்றேன்.

100 அடி தூரம் வந்த பிறகுதான் ஞாபகத்திற்கு வந்தது என் உண்டியல் பெட்டி.

பதட்டம் கலந்த பயத்துடன் கூட்டம் கூடிய இடத்தை நோக்கி ஓடினேன்.

அங்கு உண்டியலை காணவில்லை அருகில் இருந்த கடைகள், மக்கள் அனைவரிடமும் கேட்ட போது, அவர்கள் சொன்ன ஒரே பதில் பார்க்க வில்லை என்பதே. 

பின் அழுதுகொண்டே வீட்டிற்குச் சென்றேன். 

தாத்தாவிடம் நடந்ததைக் கூறினேன்.

அவருக்கு உண்டியல் துழைந்ததைவிட அவருக்கு இனி பீடிக்கட்டு வாங்க காசு இல்லையென்ற கோபத்தால் பிரம்புக் கம்பால் என் தோல்கள் கிழிய ரத்தம் ஒழுக சரமாரியாக அடித்தார்.

வலி தாங்க முடியாமல் கத்தியதில் பக்கத்து வீட்டு குடும்பங்கள் தாத்தாவை திட்டித்தீற்த்தனர். அதையெல்லாம் காதில் வாங்காத தாத்தா, என்னையும், மணியையும் வழக்கம் போல வெளியே துரத்தினார்.

அடி வாங்கின மயக்கத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் போது பசியால் மணி என்னுடைய தோல்களில் இருந்து வரும் ரத்தங்களை நாக்கில் ருசித்தான்.

 மழையின் குளிர்காற்று வீசிக் கொண்டிருக்க, இரவு முழுவதும் கோணியை தலையில் போட்டுக் கொண்டு குளிரில் பற்கள் நடுங்க எப்போது விடியும்மென்று நானும், மணியும் நின்றுகொண்டிருந்தோம்.

மறைந்த சூரியனும் காலையில் எழுந்தான்.  

தாத்தாவும் எழுந்தார், வழக்கம் போல பையை தூக்கிக்கொண்டு, இன்னைக்கு காசு கொண்டு வந்தால் 'உள்ள வா' இல்லையென்றால் வெளியே நில் என்று கூரிவிட்டு புறப்பட்டார். 

சிறிது நேரம் கழித்து நானும், மணியும் கையேந்தப் புரப்பட்டோம். 

என்றும் இல்லாதவாறு அன்று குப்பைகளும், நெகிழிகளும் குறைவாகவே தெருக்களில் இருந்தது.

ஏனென்று விசாரித்த போது சற்று முன்புதான் நகராட்சியில் இருந்து வண்டி வந்து அள்ளிச் சென்றதாம்..

கவலையோடு இருந்த குப்பைகளை மூட்டை கட்டிக் கொண்டு வழக்கமாக செல்லும் பழைய பேப்பர் கடையில் இந்த பேப்பருக்கும், நெகிழிக்கும் இடை பார்த்தோம் 1 ரூபாய்க்கு இருந்தது.

1 ரூபாயை வாங்கி பையில் போட்டுக் கொண்டு கடைக்காரரிடம் அண்ணா இன்னும் 1ரூபாய் தருவிங்களா? என்று கேட்டேன். என்னது மேலும் 1 ரூபாயா? என்று வினோதமாக பார்த்தார்.

அண்ணா நா இப்போ உண்டியலில் பணம் சேர்த்துகிட்டு இருக்கேன் அதுல இப்போது 29 ரூபாய் வந்துருச்சு இன்னும் 1ரூபாய்தான் அப்புறம் 30 ரூபாய் வந்துரும் அதான் கேட்கிறேன்.

சரி எதற்கு பணம் சேர்க்கிற? எனக்கு படிக்கனுமுனு 

‌ரொம்ப ஆசை ஆனால் படிக்க வைப்பதற்கு வசதியில்லை.

தாத்தாவிடம் கேட்டதற்கு நீ கையேந்தி தான் பிழைக்க வேண்டுமென்று கூறிவிட்டார்.

அப்போதுதான் ஒரு புத்தக கடைக்காரர் என்னிடம் கூறினார்.100 பள்ளி வகுப்பறையில் கற்றுத்தரும் பாடத்தை உனக்கு ஒரு நல்ல நூல் கற்றுத்தருமென்றார்.

அந்த புத்தகம் அங்கு நிறைய இருக்கிறதாம் அதை வாங்குவதற்குத் தான் பணம் சேர்க்கிறேன். 

அதுசரி... என்ன புத்தகம் அது?அதை நானும் அவரிடம் கேட்டேன் ஆனால், அவர் கூறியது ...

உண்மையாக நீ படிக்க விரும்பினால் அது என்ன புத்தகமென்று உனக்கு தெரியவரும் என்றார். 

ஆச்சரியத்துடன் இருந்த கடைகாரரின் முகம் சூரிய காந்தியாக மலர்ந்தது. என்னுடைய ஆர்வத்தைப் பார்த்த கடைக்காரர் 1ரூபாய் தந்தார்.

அதை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு ஓடிவந்தேன்.தகரப்பெட்டியை திறந்து உண்டியல் பணத்தை எண்ணிப் பார்த்த போது அதில் 25 ரூபாய் மட்டுமே இருந்தது. குழப்பத்தில் அழுது கொண்டே தாத்தாவிடம் கேட்டேன் அவரும் பார்க்க வில்லையென்றார்.

பணம் பரிபோன துக்கத்தில் இரவு முழுவதும் கண்களை மூடிக்கொண்டு தூங்காமல் யோசித்துக் கொண்டிருந்தேன்.நான் உறங்கி விட்டதாக நினைத்து தகரப்பெட்டியை திறந்தார் தாத்தா.

அதைப் பார்த்தும் பார்க்காத படியே தூங்குவது போல் நடித்தேன். அவரும் நான் தூங்கிவிட்டேனென்று காசுகளை பையில் போட்டுக் கொண்டார்.

மறுநாள் காலையில் எழுந்தவுடன் தாத்தாவிடம் ஏன் இரவு என்னுடைய காசுகளை எடுத்திங்க? என்றதும், என்னது பணமா? நா எதுவும் எடுக்கவில்லையே என்று பொய் புழுகினார். திறந்து எடுத்ததை நா பார்த்தேன் என்று கத்தியதும்,ஆமாடா எடுத்தேன்.

பீடிக்கட்டு வாங்குவதற்காக எடுத்தேன், நீ என்னைய கேள்வி கேட்குற அளவுக்கு வந்துட்டாயா? என்று சட்டை காலரை பிடித்து வெளியே விரட்டினார். 

இவரின் மிரட்டலுக்கு பயந்து எதுவும் பேசாமல் 

உண்டியலை வீட்டில் வைக்கக்கூடாது என்று முடிவெடுத்தேன்.

அதைத் தூக்கிக்கொண்டே நானும், மணியும் அழைந்தோம். 

 

          "இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான். "

 

என்ற வரிகள் அந்த அரசு பள்ளியை கடக்கும் போது எனக்கு கேட்டது. 

மெல்லமாக அதனை கடந்து சென்றேன். 

போகும் வழியில் இரண்டு நபர்கள் ஒரு நூலை பற்றியும் மிகவும் அறிவு சார்ந்த விஷயங்களையும் பேசிக் கொண்டனர். அது தமிழுக்கே கிடைத்த பொக்கிஷம் என்று கூறியதும், எனக்கு ஆர்வம் அதிகமானது. 

 அதன் பெயரை கேட்டுக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தேன். 

புத்தகக் கடைக்காரரிடம் நான் வாங்கப் போகும் புத்தகம் பெயர் தெரிந்து விட்டது. திருக்குறள் சரியா என்றதும், ஆச்சரியத்துடன், நீ உண்மையாகவே ஒன்றை விரும்பி உழைத்தால் இந்த பிரபஞ்சமே உனக்கு வழி வகுக்கும்.

சரியான பதில், அதைப் படித்தால் போதும் ஏனென்றால் அனைத்திற்கும் முதன்மை திருக்குறளே... சரி பணத்தை எடுத்துட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு பார்த்த போது உண்டியலில் 1ரூபாய் கம்மியாக இருந்தது. 

வீட்டில் சென்று பார்க்கலாமென்று, வீட்டிற்கு ஓடினேன்.

       வீட்டின் அலமாரி முதல் அடுப்பங்கரைவரை தேடியும் காசு இல்லை.

கவலையோடு வீட்டின் வெளியே வந்து நிற்கும் போது கூட்டமாக இருந்தது அவர்களுக்கு நடுவில் தாத்தா படித்திருந்தார்.

அவர் நெற்றியில் 1ரூபாய் நாணயம் வைத்திருந்தார்கள். அந்த நாணயத்தை எடுத்துக் கொண்டு தலைதரிக்க புத்தக கடையை நோக்கி ஓடினேன், மணியும் பின்னாடியே ஓடி வந்தான்.

கடைக்காரரிடம் 30 ரூபாயை கொடுத்து திருக்குறளை வாங்கிக் கொண்டு எங்கள் தெரு முனையில் நின்று கொண்டு பள்ளியில் வாசித்த அதே குறளை வாசித்தேன்.

      அதற்கு பொருள் படித்தேன், பிச்சை எடுத்து தான் நீ உயிர் வாழ முடியும் என்ற நிலை இங்கு இருக்குமென்றால். உன்னை அந்நிலைக்கு ஆளாக்கியவன் இறந்து போவான் என்று குறளின் பொருள் உணரும் போது உறவினர்கள் தாத்தாவின் உடலை கொண்டுச் சென்றார்கள் ஊர்வளமாய்...... 

 

 

5 comments

  • [quote name=&quot;தமிழ்ஸ்ரீ&quot;][quote name=&quot;Ravai&quot;]மிக நல்ல கற்பனை! கதாசிரியருக்கு பாராட்டுகள்![/quote]<br />Hai Sir, very good morning epa health ok va Sir[/quote]<br />Many thanks, Tamilsri! I am o.k.
  • [quote name=&quot;Ravai&quot;]மிக நல்ல கற்பனை! கதாசிரியருக்கு பாராட்டுகள்![/quote]<br />Hai Sir, very good morning epa health ok va Sir
  • அருமையான சிறுகதை . எழுத்தாளர் பெயர் குறிப்பிட்டவில்லையே ?
  • மிக நல்ல கற்பனை! கதாசிரியருக்கு பாராட்டுகள்!

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.