(Reading time: 6 - 12 minutes)
Muthu Sippi
Muthu Sippi

Flexi Classics தொடர்கதை - முத்துச் சிப்பி (இரண்டாம் பாகம்) - 25 - சரோஜா ராமமூர்த்தி

2.25. பொம்மைக் குதிரை

  

னிதனை விருத்தாப்பியம் அணுகும்போது அவன் பால்யத்தில் எப்படியெல்லாம் இருந்தான் என்பதைச் சிந்தித்துப் பார்த்துக் கொள்கிறான். சிறு பிராயத்தில் அவன் விளையாடிய விளையாட்டுக்கள். பிறகு அவன் கல்வி பயின்று, மணம் புரிந்து கொண்டு இல்லறம் நடத்தியது, மக்களைப் பெற்று வளர்த்தது. யாவும் ஒன்றன் பின் ஒன்றாக அவன் நினைவுக்கு வருகின்றன. தன் மனசில் இருப்பதை யாரிடமாவது கூறி ஆறுதல் பெற விரும்புகிறான்.

  

வக்கீல் வேதாந்தம் எழுபது வயசை எட்டிப் பிடித்துக் கொண்டிருந்தார். அதிகமாக வெளியே போவதில்லை. சட்டப் புஸ்தகங்களும் அந்தத் தொழிலும் அவருக்கு அலுத்துப் போய் நாலைந்து வருஷங்கள் ஆயின. எதிலும் ஒரு சலிப்பு. உலகத்தில் வாழ்ந்தும், அந்த வாழ்க்கையில் தாம் செய்ய வேண்டிய முக்கியமான கடமை ஒன்றைத் தவற விட்டு விட்ட மனப்பான்மை யாவும் அவரிடம் காணப்பட்டன.

  

டாக்டர் காமாட்சி உற்சாகமாகத்தான் இருந்தாள். தொழில் முறையில் அவள் பெயர் மிகவும் பிரபலமாக இருந்தது. ஏற்கெனவே தகப்பனாரின் சொத்து ஏகப் பட்டது இருந்தது. அத்துடன் அவளுக்கே வருமானம் அதிகமாக வர ஆரம்பித்தது. ஏழைகளுக்கு இலவசமாக னைத்தியம் செய்தாள்.

  

அந்தச் சேவையிலேயே அவள் மனம் இன்பத்தையும். அமைதியையும் அடைந்திருந்தது. ஆனால் ஒன்றே ஒன்று அவள் மனத்தை வருத்திக் கொண்டிருந்தது . தள்ளாத கிழவரான தன் தகப்பனார் இப்படி ஒண்டிக் கட்டையாக அவ்வளவு பெரிய வீட்டில் உட்கார்ந்து பொழுதைக் கழிக்கும்படி ஆகிவிட்டதே என்கிற வருத்தம் அவளுக்கு ஏற்பட்டது. அந்த வயசிலே பேரன்களும். பேத்திகளும் . அந்த வீட்டில் விளையாடி, அவர்களுடன் இன்பமாகப் பொழுகைக் கழிக்க வேண்டியவர். இப்படி நடமாடும் பொம்மையாக அவர் வாழ்க்கை அமைந்து விட்டதே என்று அவள் வருந்துவாள். தனக்கு ஒழிவு ஏற்படும் (போதெல்லாம் தகப்பனாரின் அருகிலேயே இருந்து வேடிக்கையாகப் பேசி அவருக்கு ஆனந்த மூட்டுவாள்.

  

ஒரு தினம் காமாட்சி வெளியிலிருந்து வரும்போது ஒரு குதிரைப் பொம்மையை வாங்கி வந்தாள். காரை விட்டு மகள் இநங்குவதை வேதாந்தம் தாழ்வாரத்தில் நின்று கவனித்தார். ஒரு

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.