(Reading time: 7 - 14 minutes)
Muthu Sippi
Muthu Sippi

யும் இப்பொழுது இருந்த நிலைமையையும் நினைத்துப் பார்த்து வருந்தினாள் அவள். இதைப்பற்றி அனுதாபத் துடன் அவள் தன் மன்னி கோமதியிடம் கூறியபோது 'ஆமாம். நீதான் அவளுக்காகக் கரைந்து போகிறாய். நல்ல இடமாக ”டாக்டர் பார்த்துக் கல்யாணம்பண்ணி வைத்திருக்க மாட்டாரா? எத்தனை பிள்ளைகள் கண்ணியமாக, கௌரவமாக இல்லை . அவனுடன் சுற்றி அவள் தன் பெயரைக் கெடுத்துக் கொண்டாள். விஷயம் மிஞ்சிப்போன பிறகு என்ன செய்ய முடியும்? அவனுக்கே கல்யாணத்தைப் பண்ணிவைத்தார். அப்புறமாவது புருஷனைக் கவனித்துக் கொஞ்சமாவது திருத்தி இருக்கலாம். ஒருத்தர் விவகாரங்களில் இன்னொருத்தர் தலையிடக்கூடாது என்கிற நாகரிகம் புருஷன் மனைவி வரையில் பரவி விட்டதாக்கும். ராதா அவன் போகிற வழிக் கெல்லாம் வளைந்து கொடுத்து அவனுக்கு உடந்தையாக அவளும் ஆடி இருக்கிறாள். அவள் அண்ணா கொடுத்த வைர வளையல்களை விற்கிற வரையில் அவளுக்கே தெரியவில்லை பார்!" என்று கோமதி ராதாவின் பேரில் குற்றத்தைச் சுமத்திப் பேசினாள்.

  

மன்னியின் கடுமையான வார்த்தைகளைக் கேட்ட பவானியின் மனம் ராதாவுக்காக மேலும் இரங்கியது. அவளைத் தனிமையில் சந்தித்து ஆறுதல் கூற வேண்டும் என்று நினைத்திருந்தாள். அதற்காக அவர்கள் வீட்டுக் குப்போய்ப் பேசுவதும் சிறந்த முறையாகப் பவானிக்குத் தோன்றவில்லை. ஆகவே சில நாட்கள் வரையில் சும்மா இருந்து விட்டாள். இடையில் சுவாமிநாதன் காலமாகி விட்டார் என்கிற செய்தி தெரியவந்தது. டாக்டரின் குடும்பத்தைத் தாங்கிவந்த பெரிய தூண் ஒன்று நிலை பெயர்ந்த மாதிரி இருந்தது அந்தச் செய்தி.

  

"ராதா, ராதா என்று அவள் மீது உயிராக இருந்தார் அந்த மனிதர். அவள் சுகத்தோடு வாழ்வதை அவர் இருந்து பார்க்கக் கொடுத்துவைக்கவில்லை! பாவம்..." என்று நாகராஜனும் கோமதியும் வருந்தினார்கள்.

  

கோமதி இப்பொழுது நோயாளி அல்ல. தன் குடும்பத்தைத்தானே நிர்வகிக்கும் பொறுப்பு அவளிடம் ஏற்பட்டிருந்தது. அத்தை வராவிட்டால் நீ எப்பொழு தும் படுக்கையில் தான் இருந்திருப்பாய். நாத்திக்குப் பயந்துகொண்டு குடும்ப வேலைகளைக் கவனிக்கவே வலிவும் உற்சாகமும் உனக்கு ஏற்பட்டு விட்டது" என்று கேலி செய்தாள் சுமதி.

  

நீ இவ்வளவு கெட்டிக்காரியாக இருப்பதும் உன் அத்தையால் தான். அதை மறந்து விடாதே"

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.