சிறிது தொலைவில் நிறுத்திவிட்டு அந்த ஆசாமியின் அருகே போனாள். அவன் கைகளைத் தூக்கி, தன் தோளில் போட்டுக்கொண்டு நிமிர்ந்து பார்த்தாள். பிளேடு ராக்கப்பன்...
அங்குமிங்குமாய் அப்பாவிகள்போல் ‘மப்டியில்’ சிதறியிருந்தவர்கள் வட்டம் போட்டு ஓடி வந்தார்கள். ஒருத்தன் எதிர் ஓட்டம் போடாமல் சும்மாவே நின்ற சுயம்புவை அவன் முடியைப் பிடித்து இழுத்தான். அவனைப் பார்த்து ஓடிய பச்சையம்மாவை நான்கு பேர் குப்புறத் தள்ளினார்கள். ஒரு மப்டி போலீஸ் மிரட்டியது.
“யாருடா. பொட்டப்பசங்க. போலீஸ்னா ஒனக்கு அவ்வளவு கேவலமாப் போச்சா? டேய்... அந்தப் புதுச்சரக்கையும் கையைக் கட்டுங்கடா... முகவெட்டு நல்லா இருக்கு... ஏண்டி பச்சை. போலிஸ் நாயிங்களா.. ஒன்ன நாய அடிக்கது மாதிரி சாவடி கொடுப்பேன் பாரு...”
பிளேடு ஊக்கிவித்தது.
“யாரை விட்டாலும் இவள விடப்படாது சார்...”
போலீஸ்காரர்கள் சொல்லப் பொறுக்காமல், பச்சையம்மாவுக்கும், சுயம்புவுக்கும் விலங்கு போட்டார்கள்.
சுயம்புவும், பச்சையம்மாவும் வாய்வலி தாங்க முடியாமல் துடித்ததால் அவர்களுக்குப் பின்னணிக் குரலாக அந்த ஆட்டோவே அலறிக்கொண்டு ஓடியது.
கையில் விலங்கிடப்பட்ட பச்சையம்மா, ஆட்டோவில் திணிக்கப்பட்ட போது விலங்கும் கையுமாய் கும்பிட்டாள்.
“அது பச்ச மதலை சார்... விட்டுடுங்க சார்... அது ஓட நெனச்சால ஓடியிருக்கலாம்... சும்மா நின்னுதே சார்... அதோட, குற்றவாளி நான்தான் சார்... என் மகள் இல்ல சார்...”
அவள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த போலீஸாரில் ஒருத்தர் பச்சையம்மாளின் வாயில் ஒரே குத்துதான் குத்தினார். அவள் அந்த ஆட்டோவிற்குள் சரிந்து விழுந்தாள். இன்னொருத்தர்