(Reading time: 12 - 24 minutes)

சிறுகதை - அத்தை - பூர்ணிமா செண்பகமூர்த்தி

athai

ருக்கு வர்றதுனாலே தனி சந்தோஷம் தான். எல்லாரையும் பார்க்கப் போறது ரொம்ப எக்ஸ்சைட்டிங்கா இருக்கு அர்விந்த்!”

கவிதா ஆர்வத்துடன் சொல்ல, அயர்ச்சியுடன் கேட்டுக் கொண்டு இருந்தான் அரவிந்தன்.

“இதையே ஆயிரம் தடவை சொல்லிட்ட கவி. எனக்கு எக்சைட்டிங்கிறத விட நெர்வஸா இருக்கு. விசா ஸ்டாம்பிங் பண்ணனும். எவ்வளவு டென்ஷன் தெரியுமா? நாம இருக்கிறது மதுரைல. இதுக்காக சென்னைக்குப் போகணும். நினைச்சாலே கடுப்பா இருக்கு. எவ்வளவு அலைச்சல், எவ்வளவு அசதி, எவ்வளவு வேலைன்னு யோசிச்சால் பயமாவும் இருக்கு.”

சொல்லியவாறே சீட்டில் இன்னும் சற்று சாய்ந்து அமர்ந்தான்.

“ஹாலிடேஸ் கொஞ்சம் கூட ரெஸ்ட்டே இல்லாம போகப்போகுது. நம்ம வர்றப்ப தான் எல்லா விஷேசங்களயும், கோயில் ட்ரிப்களையும் பிளான் பண்ணுவாங்க.. எனக்கிருக்கிற டென்ஷன் துளியும் இல்லாம, நீ இதெல்லாம் விரும்பி ரசிக்கிற மாதிரி தான் தெரியுது. பொண்ணுங்க நகை, பட்டுப்புடவை போட்டுகிட்டு கல்யாணம், காதுகுத்துன்னு விஷேசத்துக்குப் போறதுன்னா இன்னும் விரும்பத்தானே செய்யறாங்க.”

“சும்மா கிண்டல் பண்ணாதீங்க!” செல்லமாக கோபித்தாள் கவிதா.

விசேஷங்களுக்குப் போக கவிதாவுக்கு ஆசை தான், ஆனால் அங்கே அவளிடம், ‘விஷேசம் இருக்கான்னு?” கேட்கப்படும் கேள்விகளுக்குத் தான் பயம். திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகியும் இன்னும் கவிதா அரவிந்தனுக்குக் குழந்தை இல்லை. முதல் மூன்று வருடம் அரவிந்தனும் கவிதாவும் வெவ்வேறு இடங்களில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தார்கள். அரவிந்தின் தங்கை ப்ரியாவின் திருமணப்பொறுப்பு அவனுக்கு இருந்ததால், அவர்களுக்கென்று சேமிப்பொன்றும் இல்லை. எனவே மேலும் ஐந்து  ஆண்டுகள் அமெரிக்க வாசம் என்று முடிவு செய்தனர். ப்ரியா திருமணத்தை நடத்திய பிறகு கவிதாவும் வேலையை விட்டுவிட்டு, ஹெச்4 விசாவிற்கு மாறிவிட்டாள். இவர்கள் இருவரும் தங்கள் ஆசைகளைத் துறந்து, சிக்கனமாய் சேமித்து நடத்திய தங்கை திருமணத்தைக் காணக்கூட அவர்களுக்குக் கொடுத்து வைக்கவில்லை. விடுமுறை கிடைக்காத சமயத்தில் தான் அவள் திருமணம் நடந்தது.

‘அரவிந்த்! இந்த இரண்டு வருஷத்தில் நம்ம வீட்ல இரண்டு குட்டீஸ் புதுவரவு. அவங்களை நேரில் பார்க்கப் போறத நினைச்சாலே குஷியா இருக்கு!”

“ஹ்ம்ம்!”

“என்னோட அத்தை, என் அப்பா கல்யாணத்துக்கு அப்புறம் தனக்கு கல்யாணம் பண்ணனும்னு தாத்தா கிட்ட கண்டிஷனா சொல்லிட்டாங்களாம். தன்னோட அண்ணி கூட இருந்து, அண்ணன் குழந்தையை பாசமுள்ள அத்தையா சீராட்டனும்னு  அவங்களுக்கு ரொம்ப ஆசையாம்!”

“ம்”

“அது மாதிரியே எனக்குப் பெயர் வச்சதில் இருந்து, என்னை ரொம்பப் பாசமா பார்த்துகிட்டாங்க! இப்பவும் ஊருக்கு நான் வந்தால் முதல் ஆளா பார்க்க நம்ம வீட்டுக்கே வந்திருவாங்க. அத்தையோட கல்யாணத்துல சின்ன குழந்தையா என்னைக் கையில் வச்சிட்டு அம்மா நிப்பாங்க. அதே மாதிரி நம்ம குழந்தைய வச்சிட்டு நானும் அவ அத்தை ப்ரியா கல்யாணத்துல நிக்கணும்னு நினைச்சேன். ப்ச் கொடுத்து வைக்கல!”

“ம்”

“கவலைப்படாம இரு! நமக்குக் கண்டிப்பா குழந்தை பொறக்கும்போது என் சித்தி பொண்ணுங்க கல்யாணத்துக்குப் போய் நின்றுவோம்.!அவங்களும் நம்ம பொண்ணுக்கு அத்தை முறைதானே!”

புன்னைகையுடன் கவிதா “கண்டிப்பா!” என்றாள்.

“கொஞ்ச நேரம் தூங்கு கவி! தரையில் கால் பதிச்சதில் இருந்து ஓட்டமாத்தான் இருக்கும். போனமுறை நாம வந்தப்போ, நீ தலைக்கு குளிச்சிட்டேன்னு நம்ம குலதெய்வம் கோவிலுக்கு வராமல் இருந்திட்டேன்னு, இப்போ நாம போய் இறங்கியதும், குலதெய்வம் கோயிலுக்குப் போகணும்னு அப்பா சொல்லி இருக்காங்க”

“சரி. கோவிலுக்குப் போய்ட்டு வந்ததும் நான் நைட் அம்மா வீட்டுக்குப் போய்டுவேன்!”

“சரிம்மா கவி! போகலாம்”

துரை விமான நிலையம், அப்பாவும் தம்பியும் நிற்பதைப் பார்த்ததும் கண்ணீர் ததும்பியது. “அம்மா வரலயாப்பா?” என்றாள் ஆர்வத்துடன்.

“பாட்டிக்குக் காய்ச்சல் அடிக்கிற மாதிரி இருந்தது, துணைக்கு ஒரு ஆள் வேணுமேன்னு அம்மா வரல!”. இந்தா போன்ல அம்மாகிட்ட பேசு, தம்பி செல்போனை நீட்ட.

அம்மா “மாப்பிள்ளையும் நீயும் பத்திரமா வந்துட்டீங்களா ?”

“வந்துட்டோம்மா! பாட்டி எப்படி இருக்காங்க.”

“இப்போ நல்லா இருக்காங்க. நீ எப்ப வருவேன்னு கேட்டுட்டே இருக்காங்க.”

“இன்னிக்கு எட்டு மணிக்கு வருவேன்னு சொல்லிருங்கம்மா. அப்பாகிட்ட கொடுக்குறேன். நேர்ல நிறைய பேசுவோம்மா.”

போகும் வழியெல்லாம், ஒவ்வொருவரைப் பற்றி விசாரித்துக் கொண்டே வந்தாள். வண்டியூரில் அரவிந்த் வீட்டைச் சென்றடைந்ததும், காரில் இருந்து பெட்டிகளை எடுத்து உள்ளே சென்றனர். முதல் நாத்தனார் பிரதீபாவின் இரண்டு மகன்கள் அகில், முகில் அறைக்குள் ஓடி ஒளிய, இரண்டாவது நாத்தனார் ப்ரியாவின் மகள் நிவேதா மட்டும் புதிதாக வந்த விருந்தினர்களைப் பார்த்துக் கை நீட்டி மழலை மொழியில் ஏதோ சொன்னாள். தம்பிக்குக் கல்லூரிக்கு நேரமாகிறது என்று அப்பாவும், தம்பியும் விடைபெற்று கிளம்ப, தம்பியை மாலை 7 மணிக்குக் கூப்பிட வரச்சொல்லிவிட்டு  அவர்களை வழியனுப்பினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.