(Reading time: 12 - 24 minutes)

“வாங்கி வச்ச மாலை வீணாகும்னு திட்டுவாருடா!”

“நம்ம குடும்பத்தைப் பத்தி உயர்வா நினைச்சிருந்ததை வீணாக்கிட்டீங்க! மாலை வீணாப் போன என்னவாம்? ஏன்மா அவ  நகையை அப்பா எடுத்தாரும்மா? நீங்களாவது சொல்லகூடாது. வேணாம்னு!”

“என்கிட்டே கேட்டுட்டா எடுத்தாரு. அவர் அடமானம் வச்சதுக்கு அப்புறம் தான் என்கிட்டவே சொன்னாரு! நீங்க கோவிப்பீங்கன்னும் உங்களுக்குள்ள சண்டை வந்திடும்னுதான் நானும் சொல்லல.”

“இப்ப மட்டும் என்னவாம். கவிதா யாரும் எங்ககிட்ட சொல்லலன்னு தான் கோவிச்சுட்டு இருக்கா!”

ண்ணி! நீங்க அண்ணன் மேல கோபப்பட்டு விடக்கூடாதுன்னு நாங்க சொல்லல அண்ணி!” ப்ரியா சொன்னாள்.

ஒன்றும் பதில் பேசாமல் கவிதா எழ, அவள் கையில் இருந்த குழந்தை நிவேதா..”டாட்டா  டாட்டா” என்று சொல்லிக் கொண்டு இருந்தாள்.

“சரி நானே போய் விட்டுட்டு வர்றேன்.!”

அண்ணாநகரில் கவிதா வீட்டுக்கு ஆட்டோவில் செல்ல..

கவிதாவும், அரவிந்தும் ஆட்டோவில் வந்து இறங்கவும், “இதென்ன இப்படியே வந்து நிக்கிற.?”

“வாங்க மாப்பிள்ளை!உள்ளே வாங்க!”

“அத்தை, நான் இதே ஆட்டோல திரும்புறேன். திங்கள்கிழமை வர்றேன் அத்தை. மாமாகிட்ட சொல்லிருங்க.!”

“மாப்பிள்ளை, சாப்பிட்டு போங்க.!”

“இருக்கட்டும் அத்தை. அடுத்து வர்றப்ப சாப்பிடுறேன்!”

“வரேன் கவி!”

பதிலேதும் சொல்லவில்லை. எதோ பிரச்சினை என்று அம்மா யூகித்து கேள்வி கேட்குமுன்னர், எல்லாவற்றையும் சொல்லிப் புலம்பினாள் கவிதா.

“குடும்பம்னா அப்படி தான் இருக்கும். சரி விடு!குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லைன்னு சொல்லுவாங்க! இதுக்கா நீ கோபிச்சிட்டு கிளம்பி வந்துட்ட.”

“முன்னாடியே சொல்லியிருந்தால் கூட பரவாயில்லமா. இப்ப சொல்றதுதான் கோபமா வருது!”

“சரி பொறுமையா இரு. காபி குடிக்கிறயா? பாட்டிக்குக் காபி போட்டுட்டு தான் இருந்தேன்!”

“பாட்டிகிட்ட இதைச் சொல்ல வேணாம்மா. தாத்தா சின்ன வயசுல எனக்கு ஆசையா வாங்கித் தந்த செயினைத் தான் அடமானம் வச்சிருந்திருக்காங்க!”

“சரி சொல்லல! நீ குளிச்சு சாப்பிடு.!”

“போன தடவை நீ குலதெய்வம் கோவிலுக்குப் போகாததால் தான் உனக்குப் பிள்ளை உண்டாகலன்னு உன் மாமனார் குறை சொல்லிட்டுருந்தார். இப்பவும் கோயிலுக்குப் போறதுக்கு மாலை வாங்கி வச்சு ரெடியா இருந்தார்னு அப்பா வந்து சொன்னாங்க.! இந்த முறையும் நீ போகலையா. என்ன சொல்லப் போறாரோ?”

“என்ன வேணும்னாலும் சொல்லட்டும்மா! எனக்குக் கவலையில்லை.”

“டென்ஷன் ஆகாத! ரெஸ்ட் எடு போ!”

பயணச்சோர்வுடன் மனச்சோர்வும் ஆட்கொள்ள மதிய நேரத்தை தூங்கிக் கழித்தாள். மாலையில் எழுந்து வந்த போது, ப்ரியாவும், அவள் கணவரும், வந்திருந்தனர்.

“ஞாயிற்றுக் கிழமை நிவேதாவுக்கு காதணி விழாவை வைத்துக் கொள்ளலாம் என்று அப்பா சொன்னாங்க அண்ணி. அண்ணனும் விசா பிராசஸ் முன்னாடியே பங்க்ஷனை வச்சுகிறது நல்லதுன்னு சொன்னாங்க. உங்கள் அம்மா, அப்பாவை இன்வைட் பண்ண தான் அண்ணி வந்தோம்!”

“ம்” என்று ஒற்றைச் சொல் உதிர்த்தாள் கவிதா.

நிவேதா பாப்பாவுக்கு குடிக்க கொஞ்சம் வெந்நீர் வேண்டும் என்று ப்ரியா கேட்கவும், அடுக்களைக்குள்  சென்ற கவிதாவைப் பின் தொடர்ந்தாள். 

“அண்ணி, நாங்க எல்லாரும் உங்ககிட்ட சொல்லாம இருந்தது தப்புதான் அண்ணி மன்னிச்சிருங்க. என்னோட கல்யாணத்துக்காக எவ்வளவோ தியாகம் பண்ணி இருக்கீங்க. எனக்காக அப்பா செஞ்சதை மன்னிச்சிருங்க அண்ணி. ப்ளீஸ் அண்ணி.”

“நிவேதாவுக்கு தாய்மாமா மடியில் காது குத்தணும்னு நான் ஆசைப்படுறேன். அத்தையா நீங்க பக்கத்தில் இல்லாம இருந்தால் எப்படி அண்ணி. நடந்த தவறை மன்னிச்சு நீங்களும் வரணும் அண்ணி.”

“இந்தா பாப்பாவுக்கு வெந்நீர்” என்று நீட்டினாள்.

“வீட்டுக்கு வாங்க அண்ணி. நாளைக்கு பாப்பாவுக்கு கம்மல், பட்டுப்பாவாடை எல்லாம் நீங்க வந்து செலக்ட் பண்ணுங்க! அத்தை தான் அவளுக்கு வாங்கணும்!”

உள்ளே சென்று பர்சில் இருந்து, டெபிட் கார்டு ஒன்றை ப்ரியாவின் கையில்  கொடுத்து, “இதில் தேவையானதை வாங்கிக்கோங்க!” என்றாள் கவிதா.

“இதெல்லாம் வேணாம், நீங்க நம்ம வீட்டுக்கு வரணும் அது தான் அண்ணின் எனக்கு வேணும்!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.