(Reading time: 4 - 8 minutes)

துவண்ட மனதும்

சோர்ந்த உடலுமாய்

சென்றான் அவன் வீட்டிற்கு...

துப்பு கிடைக்குமென

அவளறையை

அவன் அலச

கிடைத்தது அவனுக்கு

அவள் மனைவியின்

கவிதை காகிதங்கள்.....

" என்னவனே

என் மன்னவனே

உனை காணும் நேரம்

பேரலையாய்

என் மனதில் பெருகும் காதலை

உணர முடியவில்லையா

என் பார்வையில் உன்னால்??

காதலும் வலியும்

உடன்பிறப்போ??

வலியில் பிறந்ததல்லவா என் காதல்....

இவ்வாழ்வில்

இறைவன் அளித்த வரம் நீ எனக்கு...

உன்னை பார்த்துக்கொண்டே

வாழ்ந்திடுவேன் இப்பிறவியில்....

ஆனால் வரம் ஒன்று

கேட்பேன் கடவுளிடம்...

இனி ஒரு பிறவி இருந்தால்

உனக்கானவளாய்

உனக்கேற்றவளாய் பிறந்து

காதல் என்னும் கடலில் மூழ்கி

உன்னுடன் ஆசைதீர வாழ்ந்து

களித்திட வேண்டுமென"

 

அவளின் அளபறியா

காதலை உணர்ந்தான்

அவளின் கவிதைகளில்....

வெறுத்தான் தன்னையே

வெட்கினான் தன்னை எண்ணி

உணர்ந்தான் தன் தவறை....

 

அவளுக்கான காதல்

சிறு ஊற்றாய்

பொங்கி எழுந்திருந்தது

அவன் இதயத்தில்.....

அதன் கனம் தாளாமல்

அழுது உருண்டு

கிழிந்த காகிதமாய்

கிடந்தான் அவளறையில்...

 

கண்ணில் பட்டது

அவள் அலுவலக முகவரிச்சீட்டு...

பதட்டத்தில் மழுங்கி

இருந்த அவன் மூளை

அவள் மேல் கொண்ட

காதலால்

உற்சாகமாய்

இயங்கியது இப்பொழுது.....

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.