(Reading time: 10 - 20 minutes)

சிறுகதை - காதல் மலர்ந்த தருணம் - நர்மதா சுப்ரமணியம்

love

ப்பொழுது நாம் பார்க்க போவது மதுரஞ்சனி மற்றும் மதியரசனின் காதல் கதை....

மது மற்றும் மதியின் திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கபட்டு நடந்தேறிய அக்மார்க் அரேஞ்ச் மேரேஜ்.... திருமணமாகி மூன்று மாதமேயான புதுமண தம்பதியர்கள் அவர்கள்...

பின் எப்படி இது காதல் கதை என்று நீங்க யோசிக்கி்றீர்கள் தானே... வாங்க கதைக்குள்ள போகலாம்...

அன்று காலை உணவு உண்டபின் தங்களின் அறையில் அமர்ந்திருந்தான் மதி... அவன் மடியை தலையணையாக்கி இடையை கட்டிக்கொண்டு படுத்திருந்தாள் மது... அவனிடம் எப்பொழுதும் கேட்கும் அதே கேள்வியை இப்பொழுதும் கேட்டு வைத்தாள் மது…

மடியில் இருந்தவாரே தன் தலையை நிமிர்த்தி அவன் முகம் பார்த்து கேட்டாள்...

"என் மேல எப்ப மதிப்பா, உங்களுக்கு லவ் வந்துச்சு??"

"விழிகள் பார்த்து கொஞ்சம் வந்தது...

விரல் சேர்த்து கொஞ்சம் வந்தது...

முழு காதல் என்று வந்தது தெரியாதே.. அது தெரியாதே"

என்று வழக்கம் போல் பாடினான் அவன்....

அந்த காதல் நிறைந்த காந்த குரலுக்கு அவள் மனம் மயங்கி அவனிடம் சென்றாலும், இன்று அறிந்தேயாக வேண்டுமென்ற உந்துதலில் மனதை தன் கட்டுக்குள் கொண்டு வந்தாள் அவள்....

" விளையாடாதீங்க மதிப்பா..." சிணுங்கிக் கொண்டே கேட்டாள்...

"காதல் நீங்க பீல் செஞ்ச நேரம்.. நம்ம கல்யாணம்  அரேஞ்ச் மேரேஜ்ங்கிறனால குறிப்பிட்ட நாள்னு சொல்ல முடியாதுனு தெரியும்.. இருந்தாலும் நீங்க உணர்ந்த தருணம்னு இருக்கும்ல மதிப்பா... அதை சொல்லுங்களேன்"...

அவளின் பேசும் விழியை பார்த்து அழகாய் இதழ் விரிய சிரித்தான் அவன்..

" ஹம்ம்ம் சொல்றேன்டா...  நான் உன்னை முதல எங்க பார்த்தேனு தெரியுமா மது???"

" என்னை பொண்ணு பார்க்க வந்தன்னிக்கி தானே.. இல்ல அதுக்கு முன்னாடி போட்டோல பாத்திருப்பீங்க"

இதற்கும் அவள் மேல் காதல் பார்வை வீசி அழகாய் சிரித்தான்...

" என்னங்க நீங்க சும்மா சும்மா ரோமேன்டிக் லுக் விட்டுட்டு இருக்கீங்க.... அப்படி என்ன மர்மம் அடங்கி இருக்கு "

கண்கள் சுருக்கி அவனை நோக்கி அழகாய் கேட்டுக்கொண்டே மடியில் தலையணை வைத்துக் கொண்டு அமர்ந்தாள் அவள்...

"நான் உன்னை முதன் முதல பாரத்தது நம்ம காலேஜ்ல..."

அவளின் வழி வியப்பில் விரிந்து அவனை நோக்கியது...

"நீங்க வேற காலேஜ் தானே படிச்சதா சொன்னீங்க.."

"அது யுஜி மா... பிஜி உங்க காலேஜ் பக்கத்துல தனி பில்டிங் வெச்சிருக்காங்க.... அங்க படிச்சேன்..

குறுக்க குறுக்க பேசாம சொல்றத கேளு..."

ஓகே ஓகே கன்டின்யூ....

" நான் ரெக்கார்ட் சைன் வாங்க உங்க பில்டிங்ல இருக்க எங்க சாரே பார்க்க வந்தேன்.... அப்ப லேப் முன்னாடி ஒரு குட்டிப் பொண்ணு துறுதுறு கண்ணுல தண்ணியோட நகத்தை கடிச்சிக்கிட்டு நின்னுட்டு இருந்துச்சு... அந்த லேப் சார், கோட் இல்லாம ஏன் வந்தனு திட்டிட்டு போனதை பார்த்தேன்...

அந்த பொண்ணோட வாட்டமான முகம் என் மனசை என்னமோ பண்ணுச்சு... அதனால என் ப்ரண்டுக்கு கால் பண்ணி உடனே ஒரு கோட் அரேஜ் பண்ணி உன் கிளாஸ் பசங்க மூலமா அந்த பொண்ணுகிட்ட கொடுக்க வைச்சேன்... அப்ப அந்த பொண்ணு சிரிச்ச சிரிப்பிருக்கே.. அந்த கண்ணும் சேர்ந்து சிரிச்சிது... அவ கண்ணு அவ்ளோ அழகு.... "

புசு புசு வென மூச்சு வாங்க அதே அழகிய கண்களால் அவனை முறைத்து கேட்டாள் " யாரந்த பொண்ணு???" ...

"அடியே என் மக்கு பொண்டாட்டி!!

அது நீ தான்டி என் செல்லக்குட்டி "

சிதறிய சிரிப்பினூடே கூறினான் அவன்...

"அப்பலாம் அது லவ் கிடையாது.. ஜஸ்ட் ஒரு குட்டிப்பொண்ணு பீல் செய்றத பார்க்க முடியாம செஞ்ச ஹெல்ப்.. அவ்ளோ தான்..."

"நான் படிப்புலாம் முடிச்சி வேலைக்கு போய்ட்டு இருந்த டைம்... பொதுவா எனக்கு ஒரு பழக்கம் உண்டு... படிக்கிற காலத்துல வார கடைசி நாட்கள் தவறாம முதியோர் இல்லம் போவேன்.. அங்கிருக்கிற பெரியவங்க கிட்ட ஜாலியா பேசிட்டு அவங்க தேவைய கவனிச்சிக்கிட்டு வருவேன்...

என்னை பொறுத்த வரைக்கும் முதியோருக்கு தேவை பணமோ ஆடம்பரமோ இல்ல... அவங்க கூட அன்பா ஆதவரா இருந்து பேச ஒரு துணை போதும்... அது யாரா வேனா இருக்கலாம்... மனைவியா, மகனா, மகளா,பேரனா,பேத்தியா யாராவேனா இருக்கலாம்.... அப்படி அன்பு செலுத்த ஒரு ஆள் அவங்களுக்காக இருக்காங்கனு தெரிஞ்சாலே அவங்களுக்கு மலையளவு நிம்மதி வரும்.... அத தான் நான் அவங்களுக்கு கொடுத்துட்டு இருந்தேன்.... "

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.