(Reading time: 10 - 20 minutes)

சஸ்பன்ஸ் உடைக்காதீங்க மதிப்பா..

" எது?? இது சஸ்பன்ஸ்?? என்னடா சஸ்பன்ஸ்க்கு வந்த சோதனை " என்று கூறி வாய்விட்டு சிரித்தான்..

ம்ம்ச்...டிஸ்டர்ப் செய்யாதீங்கபா..

ப்ளோல போய்ட்டு இருக்கேன்ல...

ஓகே ஓகே கோ அஹட் மது....

" எனக்கு சீக்கிரம் கல்யாணம் நடக்கனும்னு கல்யாண பெருமாள் கோயிலுக்கு என்னை கூட்டிட்டு போனாங்க அம்மா... அன்னிக்கு திருக்கல்யாண வைபவம் நடந்திட்டு இருந்துச்சு... ரொம்ப கூட்டம் கோவில்ல... அதனால கடைசியா சுவர் ஒட்டி நின்னுட்டு கல்யாணத்தை பார்த்துட்டு இருந்தேன்... அப்ப அம்மா கண்ணை மூடி வேண்டிக்கோமானு சொன்னாங்க..."

" நானும் கண்ணை மூடி என்னை அப்பா மாதிரியே அன்பாய் பாத்துக்கிற புருசன் வேணும்னு வேண்டிக்கிட்டு கண் முழிச்சா , வேஷ்டி சட்டைல கைல பாவாடை சட்டை போட்ட குட்டிப் பாப்பா தூக்கிக்கிட்டு 

"செல்லக்குட்டி அழ கூடாது, மாமா உங்களுக்கு நிறைய சாக்கி வாங்கி தருவேனாம்னு"

சொல்லிக்கிட்டே என்னை கிராஸ் செஞ்சி போனீங்க..."

" அந்த செல்லக்குட்டிங்கிற வார்த்தை தான் என் கவனத்தை ஈர்த்தது.... ஏன்னா என் அப்பா என்னை அப்படி தான் கொஞ்சுவாங்க...."

"இப்ப கூட எப்பலாம் நீங்க என்னை செல்லக்குட்டினு கூப்பிடுறீங்களோ, அப்பலாம் அப்படியே ஒரு பாதுகாப்பான கைக்குள்ள இருக்க பீல் வரும்... உங்க தோள் சாஞ்சிகனும்னு தோணும்..."

பாசமாய் பார்வை வீசி இதம் தரும் காற்றாய் அவன் மனதை வசப்படுத்திக் கொண்டிருந்தாள் தன் வார்த்தைகளால்...

" ஜஸ்ட் அப்ப பாத்ததோட சரி.. எந்த எண்ணமோ அபிப்ராயமோ கிடையாது அப்ப உங்க மேல...."

"நானும் உங்களை போல வீட்டில பார்க்கிற பையன் தான் கல்யாணம் செய்யனும்... கணவனுக்கு மட்டும் தான் என் மொத்த காதலும்னு இருந்த பொண்ணு தான்... அதனால மாப்பிள்ளை பார்க்கிறது உங்கள் விருப்பம்னு விட்டுட்டேன்...."

" நீங்க பொண்ணு பார்க்க வந்தனிக்கி தான் பார்த்தேன்.. அப்படியே ஷாக்காயிட்டேன்... ஹே இது அவர்லனு தோணுச்சு...."

அப்ப என் மனசுல உதிச்சது...

"கடவுள் அமைத்து வைத்த மேடை..

இணைக்கும் கல்யாண மாலை..

இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று.."

"ஆனாலும் ஃபிக்ஸ் செய்ற வரைக்கும் மனசை அலை பாய விடக் கூடாதுனு எதையும் யோசிக்கலை..."

"நம்ம கல்யாணம் நிச்சயமாகி நாம பேச ஆரம்பிச்ச நாள்ல இருந்து கொஞ்ச கொஞ்சமா என் மனசுல நுழஞ்சி சேர் போட்டு உட்கார்ந்துட்டீங்க..."

காதல் பார்வை அவன் மீது வீசி குழைவாய் கூறிக் கொண்டிருந்தாள்...

"அது முழு காதலா மாறின நேரம்... நான் உணர்ந்த தருணம்னா....

நம்ம மேரேஜ் நிச்சயமான அப்பறம் நம்ம டெய்லி கால் பேசிட்டுருந்த நேரம்... உங்க ஆபிஸ் டூர்னு இரண்டு நாள் கேரளா போனீங்களே... சிக்னல் இருக்காது போன் பண்ண முடியாதுனு வேற சொல்லிட்டீங்க..."

" என்னமோ ஒரு வெறுமை பீல்ங்க மனசுல அப்ப... உங்க குரல் கேக்காம  பேசாம இருக்கவே முடியல... மனசுல அப்படி ஒரு வலி.... ஆனா அந்த சமயத்துலயும் நான் உங்கள தேடுவேனு சொல்லி உங்க ரூம்ல இருந்து ரெண்டு கிமீ நடந்து வந்து எனக்கு கால் பண்ணி பேசினீங்களே..."

" அப்படியே மனசுகுள்ள தேன்மழை சாரல் அப்ப... கண்ணுல ஆனந்த கண்ணீர்.. அப்ப தோணுச்சு இனி நீங்க இல்லாத ஒரு வாழ்க்கை என்னால நினைச்சிக் கூட பாக்க முடியாதுனு..."

"எனக்கு நீங்க எல்லாமே மதிப்பா..உங்க அன்பு , பாசம் ,அரவணைப்பு, பாதுகாப்பு எல்லாத்துக்கும் நான் அடிமை மதிப்பா"

ஐ லவ் யூ சோ மச் மதிப்பா!!!

அவள் பேச்சில் கட்டுண்டவன் போல் அமர்ந்திருந்தவன்,  தன் இரு கைகளையும் விரித்து அவளை நோக்கி தன் பார்வை செலுத்தி தன் தலை மேலும் கீழுமாய் அசைக்க...

தாயை அடையும் கன்றுக்குட்டி போல் ,அவன் கைகளுக்குள் அடைக்கலமானாள் அவள்....

அவள் காதில் மென்மையாய் உரைத்தான் , " என் மனம் கவர்ந்த ஸ்வீட் செல்லக்குட்டிடா நீ " என்று.....

தன் அணைப்பை இறுக்கி அவன் வார்த்தைக்கு செய்கையால் பதிலுரைத்தாள் இவள்....

இதே அன்போடும் சந்தோசத்தோடும் காலம் முழுக்க இன்பமாய் வாழட்டுமென வாழ்த்தி விடைபெறுவோம் நாமும்....

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.