(Reading time: 10 - 20 minutes)

ஒரு பெண், விடுதலையை யாரிடம் இருந்து பெற வேண்டும் ? ஆண்களிடம் இருந்தா ? இதோ, ஆம் என்ற பதிலாய் மாலினியின் கணவன் இருக்கின்றானே. ஆனால், அப்பா மற்றும் காலை தன்னிடம் மறியாதையுடன் பேசிய டிரைவர் போன்ற ஆண்களும் உள்ளனரே ?

அன்று பெண் விடுதலை பற்றி பேசிய அம்மாவும், கமலா சித்தி போன்ற பெண்களும் கூட இன்று மாலினி போன்று தனது மகள்களையும் அதே நிலைக்கு தானே ஆளாக்குகின்றனர்.

பெண்ணாய் பிறந்தவர்களுக்கு சமுகம் வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்துவிட்டு அதனை தக்க வைத்துக்கொள்ளும் சுதந்திரத்தை மறுத்துவிடுகிறது. பெண்ணாய் மாறிய தனக்கோ எதை வேண்டுமனாலும் செய்ய கொடுத்துவிட்டு, வாய்ப்புகளை கொடுக்க மறுக்கிறது !

 இதோ இந்த புதிய மனிதர்கள் விவரம் எதுவும் அரியாத வரை சாதாரணமாக நடந்துக்கொள்கிறார்கள். விவரம் தெரிந்த பின், வேறு விதமாக நடந்துக்கொள்கிறார்கள்.

இந்த பிற்போக்கான எண்ணங்களை யார்,எங்கே விதைக்கிறார்கள் ?

இவ்வாறு எண்ணிக்கொண்டு இருக்க மாங்கல்யத்தை அவளிடம் ஆசி பெற நீட்டினாள் ஒரு சிறுமி. அக்ஷயா அதை வணங்கிவிட்டு , அட்சதையை எடுத்துக்கொண்டாள். கமலா சித்தி அந்த சிறுமியை முறைத்துக்கொண்டு இருந்தாள். மீண்டும் விடை தேடி யோசனையில் மூழ்கினாள் அக்ஷயா.

“இவ்வளவு எளிதாக நமக்கு புரிகின்றபொழுது ஏன் மற்றவர்களுக்கு புரிவதில்லை. ஒருவேளை நான் ஆணாக இருந்து பெண்ணாக மாறியதாலா?”

சட்டென்று அவளுக்கு எல்லாம் புரிந்தது. ”ஆம், அதுதான். ஆணாக இருந்த நான் பெண்ணாக மாறியது எப்படி?

 அந்த பன்னிரண்டு வருடமும் என்னுள் எங்கோ பெண்மை ஒழிந்துக்கொண்டு இருந்திருக்கிறது.  அது அதிகம் சுரக்கவே பெண்ணாக மாறினேன். ஆகவே ஒவ்வொரு ஆணுக்குள்ளும் பெண்ணியம் ஒழிந்துக்கொண்டு தான் இருக்கிறது. ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஆண்மை ஒழிந்துக்கொண்டு தான் இருக்கிறது

ஆண், பெண் என்பது என்ன ? உடலில் டெஸ்டோஸ்டிரோன் அதிகம் சுரந்தால் அவன் ஆண்.எஸ்ட்ரோஜன் அதிகம் சுரந்தால் அவள் பெண்.

ஆக, ஒவ்வொரு பெண்ணும் தனக்குள் இருக்கும் ஆணை அறிய வேண்டும், ஒவ்வொரு ஆணும் தனக்குள் இருக்கும் பெண்ணை அறிய வேண்டும். அதுவே, பாலினச் சமத்துவத்திற்க்கான ஒரே வழி…”

இவ்வாறு யோசனையில் மூழ்கி இருந்தவள், அய்யர் “கெட்டிமேலம், கெட்டிமேலம்” என்றதும் விழித்தெழுந்தாள். மாப்பிள்ளை மாலினிக்கு தாலி கட்டிக்கொண்டு இருந்தான். அவன் மாலினிக்கு கைவிலங்கு போடுவது போல இருந்தது அவளுக்கு.

அட்சதை தூவி வாழ்த்திவிட்டு அமர்ந்தவள், “ தெய்வமே, ஒரு பெண்ணிற்க்கு தான் எத்தனை பூட்டுகள் போடுகிறார்கள். இந்த மனிதர்களை நீதான் காப்பாற்ற வேண்டும்” என்று வேண்டிக்கொண்டே முகப்பில் இருந்த பராசக்தியை நோக்கினாள்.

ஒருவன் பராசக்திக்கு கிரில் கதவு  உபயம் செய்து பூட்டு போட்டிருந்தான். ”உனக்கே விபூதி அடிச்சிடாங்களா ?” என்று எண்ணியவாறே தனக்குள் சிரித்திக்கொண்டாள்.

தூரத்தில் எங்கோ “நல்லதோர் வீணை செய்தே……” என்ற பாடல் ஒளித்துக்கொண்டு இருந்தது

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.