(Reading time: 13 - 26 minutes)

நான்:" Hello...."

மோனி:" என்ன Officer Madam சாப்பிட வரலியா....நான் Food court wait பண்ணிட்டு இருக்கேன் சீக்கிரம் வா...."

நான் சாப்பாடு தான் என்று விரைந்தேன். சாப்பிட்டு இருவரும் கதை அளந்து விட்டு இருக்கைக்கு சென்றோம்.

அமர்ந்த ஒரு 5 நிமிடத்தில் ஏதோ தொலைந்த உணர்வு,

என்னுடைய அடையாள அட்டை.

நான்:"கடவுளே என் ID card அ திருடுனவங்கள என் கண்ணுல காமி னு" வேண்டுனதும் மோனி மட்டுமே என் கண்ணில் பட்டால்.

நான்:" மோனி.......Baby....."

மோனி:" சொல்லு டீ .... இப்ப யாரு என்ன சொன்னாங்க".

நான்:"அது இல்ல டீ"

மோனி:" வேற என்ன".

நான்:" Give my ID Card.....".

மோனி:" what Non sense you are talking about me, ஒரு gentlewomen ட்ட கேக்குற கேள்வி யா இது ,பார்த்து பேசுங்க Madam"

நான்:" இந்த மாதிரி பிலக்கா பசங்க வேலை லாம் நீ தான் பன்னுவ"

மோனி:" அது college படிக்கற அப்போ...இப்போ நான் அப்படி இல்ல Believe me Baby மா".

நான்:" நான் Food court போய் பார்த்துட்டு வரேன் இரு".

என்று கூறி விரைந்தேன்.நாங்கள் சாப்பிட்ட Table ஐ பார்க்க உள்ளே நுழையும் போது, அங்கு சாப்பிட்டு கொண்டிருந்த ஒருவர் கையில் என் ID இருந்தது. யார் என்று பார்த்த போது, அது அவர் தான்.

அவரை பார்த்ததும் என் உடல் வெப்பநிலை மாறியது, நெஞ்சம் படபடத்தது, அவர் என்னை இடித்த போது வந்த கோபம், அவர் என்னிடம் மன்னிப்பு கேட்டதும் வந்ந கருணை, அவர் எங்களுக்கு வர போகிற குழு தலைவர் என தெரிந்ததால் வந்த பயம், அவர் என்னை பற்றி அவர் நண்பரிடம் பேசியதை நண்பர் மூலமாகவே எனக்கு தெரிய படுத்திய போது வந்த ஈர்ப்பு என பல உணர்சிகளின் கலவைகளில் தயங்கி தயங்கி போய் கேட்கலாமா வேண்டாமா என்று யோசித்து கொண்டிருந்தேன்.

தைரியம் வரவைத்துக் கொண்டு " என் ID card நான் கேட்குரேன் இதுல என்ன இருக்கு " என்று அவரு அருகில் நெருங்க நெருங்க என் கால்களோ வலு இழந்தது, அருகில் செல்ல செல்ல சற்றே அதிகமான என் இதய துடிப்பின்

சத்தம் மட்டுமே என் காதில் விழுகிறது, நான்கு ஐந்து முறை மூச்சை இழுத்து விட்டு என் இதய துடிப்பை சரி செய்து விட்டு அவர் அருகில் நின்றேன்.

நான்:" excuse me".

அவர் என்னை பார்த்த ஒரு நொடி நான் என்னை மறந்து சிலையானேன்.அவரோ எந்த வித உணர்ச்சியும் காட்டாமல் என்னை பார்த்து கொண்டிருந்தார்.

என்னை பார்த்து மெதுவாக புன்னகைத்தார், "Actually we don't need a formal introduction, உட்காருங்க Ms......?"என் ID card ஐ.பார்த்து "yeah Ms.Priyadharshini" .

என்ன நடந்துக்கொண்டிருக்கிறது என்று தெரியாமல் நான் உட்கார்ந்து பின் அவர் " என்ன அடிக்கடி Meet பண்றோம், But those incidents are memorable and I'm sorry for that 2 incidents"

அவர் பேசுவதை கேட்டேனே தவிர பதில் சொல்ல வில்லை.

அவர்:"Hello .....Excuse me....Priya ....?"

நான்:" Yeah ...yeah..It's okay ....வேணும்னா செஞ்சி ருப்பிங்க.".

அவர்:" அப்பறம்".

நான்:"ID card .....!!!!".

அவர்:" yeah....இந்தாங்க....and what do you like to have??".

நான்:" No, Thanks...இப்போ தான் சாப்டோம்".

அவர்:" Are you sure?"

நான்:" yes"

நான்:" நான் கிளம்பரேன்..."

அவர்:" No...No ...Gimme a company, என்ன பிரியா தனியா விட்டுட்டு போரிங்ங, Talk something".

என் வருங்கால TL என்ற பயத்தினால , அவர் மீது உள்ள ஈர்ப்பா , இல்ல பொது மரியாதை காக உட்கார்ந்து இருக்கேனா, எதனால் என்று எனக்கே தெரியவில்லை.

நான்:" இல்ல ....It's getting late... I have to leave....".

அவர்:" okay see you then".

Interview Attend பண்ணியது போல் ஓர் உணர்வு, திரும்பி பாக்காமல் நடந்து சென்று 2 அடி எடுத்து வைத்தபின்....திடீரென அவர் பேர் கேட்க வில்லையே என்று திரும்பினால்.... அவரும் என்னை தான் பார்த்து கொண்டிருந்தார்.

நான்:" உங்க Name சொல்லவே இல்லை யே"

அவர்:" அவர் சிரித்து கொண்டே "Evening Message ல சொல்லுறேன்".

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.