(Reading time: 13 - 26 minutes)

சிறுகதை - இவன் யாரோ!!! - சிரபி

heart

த்தனை கதைகளை பார்த்தாலும் படித்தாலும் ஏன் வாழ்ந்தாலும், தெவிட்டாத இந்த காதல் சுவை யாரை தான் விட்டது என்னை உட்பட......

அதிகாலை குளிர் அறைக்குள் புகா வண்ணம் தாழை போட்டு, மின் விசிறியின் குளிர் என்னுள் புகா வண்ணம் போர்வையில் நான் புகுந்து கொண்டு, வெப்ப நிலையை சம நிலை செய்ய , ஒரு கால் மட்டும் போர்வைக்கு வெளியே..... அடடா....என்ன சுகமான உணர்வு, கடிகாரம் ஒலிக்கும் முன் அதை பார்த்து, இன்னும் 15 நிமிடம் இருக்கிறது என்று சொல்லி கொண்டு தூங்கும் இன்பம் ,இன்பத்திலும் இன்பம்.....

கடிகாரம் ஒலிக்கும் ஒரு நொடி முன்னே "டொக்...டொக்..." கதவை தட்டும் சத்தம்.என் இன்பத்தை கெடுக்கும் இன்னொரு இன்பம் என் அம்மாவின் குரல்" அம்மூ எந்திரி டா டைம் ஆகுது"

நான்: " என்னமா அதுகுள்ள டைம் ஆச்சி ...2 minutes "

என்று சொல்லி முடிப்பதற்குள் என் எதிரி கடிகாரம் கத்தி கதறி என்னை கடுப்பேற்றி எழ வைத்துவிட்டான்.

எழுந்து சோம்பல் முறித்து என் எதிறியை பார்த்து" ஒரு நாள் இல்லாட்டி ஒரு நாள் , உனக்கு முன்னாடி எழுந்து உன் காது கிட்ட கத்துரேன் இரு ராஸ்கல்" என்று சொல்லி விட்டு கண்களை மூடிக்கொண்டு அமர்ந்து இருக்கும் நான், நான் தான் பிரியதர்ஷினி.

B.Tech Information Technology படித்து விட்டு பன்னாட்டு நிறுவனத்தில் (MNC) வேலைக்கு சேர்ந்து ஒரு வாரம் ஆகிறது.

அப்பா Civil Engineer,அம்மா Bank employee மற்றும் குட்டி சாத்தான் என்கிற என் உடன் பிறப்பு ,தம்பி B.E. ECE இரண்டாம் ஆண்டு. இது தான் என் குடும்பம்.

கல்லூரி முடிந்த 6 மாதம் வீட்டில் நன்றாக உண்டு உறங்கி கொண்டிருந்த என்னை , 6 மணிக்கெல்லாம் எழ சொன்னால் எப்படி...??

அம்மா: "எந்திரிச்சியாடா....??"

நான்:"ம்ம்ம்....."

கண்களில் தண்ணீர் வராமல் அழுதுகொண்டே வெளியே சென்று நாளிதழ் வாசித்து கொண்டிருந்த அப்பா அருகில் அமர்ந்தேன்.

அப்பா:'என்னடாமா....work எப்படி இருக்கு ..புடிச்சிருக்கா....???"

நான்:" ok...Daddy.....பரவால புடிச்சிருக்கு..., காலை ல சீக்கிரம் எழுறது தான் புடிக்கல"

அப்பா:" கொஞ்ச நாள் தான் மா...."

நான்:" அப்புறம்...??"

அம்மா:" அதுவே பழகிடும் ...." என்று கிண்டலடித்துக் கொண்டே தேநீரை நீட்டினாள்.

தேநீரை பருகிக்கொண்டே அறையில் தூங்கி கொண்டிருந்த தம்பியை பார்த்து

நான்:" அந்த எரும மட்டும் எப்படி தூங்கரான் பாருங்க,அவன எழுப்புங்க"அம்மாவிடம் சொல்ல.

அம்மா:" அவன் தூங்குனா உனக்கு பொருக்காதே , பாவம் டி குழந்தை, தூங்கட்டும்"

நான்:" ஏய் சாந்தி , என்ன புள்ள பாசமா,உனக்கு அவன் குழந்தையா இருக்கலாம் , I am dad's princess,நியாபகம் இருக்கட்டும், என்ன daddy..? ஆமா தானே..?"

அப்பா:" ஆமா my dear princess "

அம்மா:" , அப்பா கும் பொண்ணுக்கும் வேற வேலையே இல்ல, எந்திரிச்சி போடி டைம் ஆகுது , உங்களுக்கு வேற தனியா சொல்லனுமா என்ன...?"

அப்பா:" சொன்னா நல்ல தான் இருக்கும்"

காலை வேலைகளை முடித்துவிட்டு, வேகமாக வண்டியை எடுத்து கொண்டு தலைகவசம் அணிந்த பிறகு

நான்:" அம்மா......நான் கிளம்புரேன்"

அம்மா:" பாத்து போடி....bye"

திகாலை கடும் குளிரின் நேர் எதிரி கடும் வெயில் சென்னையையும் என்னையையும் வாட்டி எடுத்து கொண்டிருக்க.

நகரும் வண்டியினால் முகம் மீது படும் காற்று கொஞ்சம் என்னை பொன்முறுவச் செய்தது.

"அப்பாடா" என்று நினைக்கும் முன் , சாலையில் எரிந்த சிகப்பு விளக்கு " அய்யோ" சொல்ல வைத்தது. பச்சை விளக்கு எரியுமா என்று ஏங்கி கொண்டிருந்தேன்.

"நீங்க இப்ப கேட்டு கொண்டிருப்பது சென்னை யின் No 1 FM...Chennai FM 104.4 கேளுங்க கேளுங்க கேட்டு கொண்டே இருங்க, நான் உங்க R.J. நந்தா , நிகழ்ச்சி க்கு போவோம், பொதுவா இவரோட songs போட்டாலே அந்ந show special ஆயிடும், ஆன இப்ப special show வே அவருக்காக தான்,அப்போ show வோட speciality சொல்லவா வேணும்,The one and Only our இசை ஞானி இளையராஜா, அவர பத்தி பேசுரதுக்கு முன்னாடி ஒரு துல்லலான song ஒன்னு play பண்ணிடுவோம் , கேளுங்க கேளுங்க கேட்டு கொண்டே இருங்க ,இது சென்னை யின் No. 1 FM Chennai FM 104.4.

"வலையோசை கல கல கலவேன கவிதைகள் படிக்குது குளுகுளு தென்றல் காற்றும் வீசூது"

சாலை ஓர தேநீர் கடையில் ஒலித்துக்கொண்டிருந்த வானொலி என்னையும் என் ஏக்கத்தையும் மறைத்து அப்பாடலின் வரிகளை முனுமுனுக்க செய்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.