(Reading time: 13 - 26 minutes)

நான்:" நான் தான் Number தர மாட்டனே".

அவர் என் ID card ஐ பார்த்து சிரித்தார், நான் ID card ஐ தலையில் அடித்துக் கொண்டு வெட்கத்துடன் சென்றேன்.

நான்:" மோனி ID card கிடைச்சிடுச்சி".

மோனி:" பச்ச குழந்தை மேல சந்தேக பட்டியே டி பாவி.....சரி எங்க இருந்துச்சி...?

நான்:" நாம சாப்பிட்ட Table ல தான் , But அவர் வச்சிருந்தாரு.".

மோனி:" மறுபடியும் அவரா.....யவன் டி அவன்...?".

நான் காலை முதல் நடந்ததை சொல்ல.

மோனி: ஆச்சரியத்துடன் " மோதல் காதல் ஆ...அடிப்பாவி Project வரதுக்குள்ள TL அ correct பண்ணிட்ட".

நான்:" சீ அசிங்கமா பேசாத டீ....பார்த்ததும் காதல் வருமா...It's just attraction, நீ சொன்ன மாதிரி சிடு மூஞ்சி லாம், He is cool.".

மோனி:" Friendship கூட 2,3 நாள் ஆகும், பாத்த ஒடனே வரது தான் காதல்".

மோனி:" just attraction அ love அ ...போக போக தெரியும், கத்திரிக்காய் முத்துனா கடை வீதீக்கு. love தீக வாழ்க்கை யில் சிக்கி கொண்டாயே பிரியா".

நான்:" சிறுத்தை சிக்கும் ...சில்வண்டு சிக்காது டீ"

இருவரும் சிரித்துக்கொண்டோம்.

மோனி:"நாளைக்கு Project kick off meeting உன் ஆல பார்க்கலாம்,sight அடிக்கலாம் , ஒரே jolly தான்".

நான்:" என் உயிர வாங்காத டி ... எரும மாடே...".

Evening எந்த ஒரு Message ம் வரவில்லை சற்று ஏமாற்றத்துடன் மறுநாள் அலுவலகம் சென்றேன்.

மோனி :" என்ன டி இன்னைக்கு 40watts பிராகாசமா இருக்க".

நான்:" அப்படியா...I'm normal only".

மோனி:" சரி வா meeting க்கு போலாம்"

அவரை பார்க்க போகும் சந்தோசம் சற்று அதிகமானது.உள்ளே நுழைந்து பின் என் கண்கள் அவரை தான் தேடியது. அதற்குள் ஒருவர் எழுந்து

" Hello Everyone I'm Madhan ,TL for this Project,Happy to see you all and welcome everyone".

நான்:" என்னடி TL மாத்திடாங்களா என்ன".

மோனி:" என்ன ஒலர்ர டி...இவரு தான் நம்ம TL and உன் ஆலு".

நான்:" நான் சொன்ன அவரு , இவரு இல்ல டி".

இரண்டு பேரும் பெரும் குழப்பத்துடன்

" அப்போ அவன் யாரூ"

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.