Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
சிறுத் தொடர் - மல்லி - 04 - மணக்கும் சந்தன பூ - சசிரேகா - 5.0 out of 5 based on 1 vote
Pin It

சிறுத் தொடர் - மல்லி - 04 - மணக்கும் சந்தன பூ - சசிரேகா

sandalwoodFlower

ல்லி ரொம்ப நன்றிப்பா” என மல்லிகார்ஜுன் பூக்கடைக்குப் பக்கத்தில் எப்போதும் காலம் காலமாக பழங்களை விற்றுக் கொண்டிருந்த பெண்மணி கமலா அவனிடம் கைகூப்பி நன்றி சொல்ல அவன் சிரித்தபடியே அவரது கைகளை இறக்கிவிட்டு

”என்னக்கா நீ, என் அம்மா போனதுக்கப்புறம் உன்னைதான் நான் என் அம்மாவா நினைக்கிறேன், நீ என்னடான்னா கைகூப்பற இது நல்லாவா இருக்கு”

“உனக்கு இருக்கற மனசு யாருக்கு வரும், உன்னாலதான் என் பொண்ணு இன்னிக்கு டீச்சர் படிப்பை முடிச்சிருக்கா உன்னோட உதவியை நான் காலத்துக்கும் மறக்கமாட்டேன்”

“நான் என்னக்கா செஞ்சேன், என்னால படிக்க முடியலை உன் பொண்ணு படிக்க பணம் இல்லைன்னு சொன்ன, சரின்னு 5 வருஷமா பணம் தரேன் இதெல்லாம் ஒரு உதவியா அந்த பொண்ணு நல்லா படிச்சதாலதான் பெரிய ஆளா வந்தா, நான் கொடுத்த பணத்தால இல்ல, நீ நன்றி சொல்லனும்னா உன் பொண்ணுக்குச் சொல்லு. இனிமேலயாவது இந்த வேகாத வெயில்ல பழம் விக்கறத நிறுத்திட்டு வீட்ல இரு”

”அதெப்படி முடியும் இன்னும் பொண்ணுக்கு கல்யாணம் செய்யனும், உன்கிட்ட வாங்கின பணத்தை திருப்பி அடைக்கனும்”

“அய்யோ அக்கா நான் கடனா அதை தரலை ஏதோ சொல்வாங்களே அன்பளிப்பு அதைத்தான் செஞ்சேன், நீ வேற என்னை கடன்காரனா ஆக்காதக்கா அந்த பணத்தை நான் கொடுத்த உடனே மறந்துட்டேன், நீ வேற விடுக்கா நீ ஒண்ணும் எனக்கு திருப்பி தரனும்னு அவசியமில்லை”

“ஆனா நீ கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணமாச்சே”

“இருக்கட்டுமே என்கிட்டயிருந்தா பெரிசா என்ன செலவு செஞ்சிருப்பேன், சும்மாதான் பேங்க்ல இருந்திருக்கும் ஏதோ ஒருத்தரோட படிப்பு செலவுக்கு அந்த பணம் உபயோகமாச்சே அதுவே எனக்குப் போதும் ஆமா இன்னும் பணம் வேணும்னா சொல்லுக்கா தரேன்”

“வேணாம்பா அதான் அவள் டீச்சர் படிப்பும் படிச்சி முடிச்சிட்டு வந்துட்டாளே”

“ஆமாம் இத்தனை நாளும் உன் பொண்ணை நான் பார்த்ததில்லையே இங்கல்லாம் வரமாட்டாளா”

“நான் இங்க கஷ்டப்படறத பார்த்தா அவளால ஒழுங்கா படிக்க முடியாது, என் வேலையை எடுத்து செய்றேன்பா, அவள் படிக்கனும் நல்ல இடத்தில வாக்கப்படனும் அதான் என் அண்ணன் வீட்ல தங்க வைச்சி படிக்க வைச்சேன்”

Pencilஹாய் பிரெண்ட், கதையை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“அண்ணன் வீடு எங்க இருக்கு?”

“காஞ்சிபுரத்தில”

“ஓ சரி சரி இப்ப உன் பொண்ணு வேலைக்கு போதா இல்லையா” என பூவை தொடுத்துக் கொண்டே அவன் கேட்க அதற்கு அவர்

”எங்கப்பா இப்பதானே படிச்சிட்டு வந்தா டீச்சர் வேலை செய்றதுக்குன்னு ஒரு பரிட்சை இருக்காமே அதுகூட எழுதிட்டு பாஸாயிட்டு வந்துட்டா, இனிமேதான் வேலை அதுவா வருமாம்”

“ஓ அரசாங்க வேலையா”

“அப்படித்தான் சொன்னாப்பா புருஷன் இல்லாம வயசு பொண்ணை வளர்க்கறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா, ஏதோ அவளை பாதுகாக்க என் அண்ணா இருந்தாரு, படிப்புச் செலவுக்கு நீ இருந்த, இல்லைன்னா என்னாயிருக்கும் என்னைப் போலவே இங்க கடையில உட்கார்ந்திருப்பா இல்லைன்னா சீக்கிரமாவே கல்யாணம் பண்ணி போயிருப்பா”

”இப்ப ஏன் புலம்பற உன் பொண்ணுக்கு நல்ல ராசி, அதான் பெரியாளா வந்திருக்கு அதை நினைச்சி சந்தோஷப்படு. வேலை கிடைச்சதும் சீக்கிரமா கல்யாணம் பண்ணி வைச்சிடு. அப்புறம் லவ் கிவ்வுன்னு போயிட போகுது” என தன் அனுபவத்தில் மல்லி சொல்ல கமலாவோ

”என் அண்ணனுக்கு ஒரு பையன் இருக்கான், பெரிய பழக்கடை வைச்சிருக்கான்.”

“அப்புறம் என்ன கட்டிவைச்சிடு”

“என் மனசுல ஒண்ணு தோணுது”

“சொல்லுக்கா”

“உன்னாலதான் அவளுக்கு இப்படி ஒரு வாழ்க்கை கிடைச்சது, என் அண்ணன் பையனுக்கு கல்யாணம் பண்ணா வீட்டோட அவளை உட்கார்த்தி வைப்பாங்க, அதே நீ அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னா உன்கிட்ட பட்ட நன்றிக்கடனும் தீரும், நீயும் அவளை நல்லா பார்த்துக்குவ, அவளும் படிப்புக்கேத்த வேலையை செஞ்சிக்குவ, 6 வருஷமா தனியா வாழ்ந்த பொண்ணு, நீ அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டா நானும் உன்கூடவே வந்துடுவேன் என்ன சொல்ற மல்லி” என அவர் சொல்ல சொல்ல மல்லிக்கு சிரிப்புதான் வந்தது

”என்னடா சிரிக்கற பதில் சொல்லு”

“ஏன்க்கா உனக்கு இது நியாயமா படுதா, அது பெரிய படிப்பு படிச்சிருக்கு, டீச்சரா வேற ஆகப்போகுது, என்னை போய் கல்யாணம் பண்ணிக்க சொல்றியே அதுக்கு பழக்கடை வைச்சிருக்கற உன் அண்ணன் பையனுக்கு கல்யாணம் பண்ணி வைச்சா கௌரவமா இருக்குமே, உன் பொண்ணுக்கும் என்னை விட அவன்தான் பொருத்தமா இருப்பான்”

 •  Start 
 •  Prev 
 •  1  2  3  4  5  6  7  8 
 •  Next 
 •  End 

About the Author

Sasirekha

Sasirekha

Sasirekha's Popular stories in Chillzee KiMo

 • Edhetho ennam valarthenEdhetho ennam valarthen
 • Enaiyaalum kadhal desam nee thaanEnaiyaalum kadhal desam nee thaan
 • En mel undranukkethanai anbadiEn mel undranukkethanai anbadi
 • Ilaiya manathu inaiyum pozhuthuIlaiya manathu inaiyum pozhuthu
 • Ullathal unnai nerungugirenUllathal unnai nerungugiren
 • Maasilla unmai kadhaleMaasilla unmai kadhale
 • Unnai kaanaathu urugum nodi neramUnnai kaanaathu urugum nodi neram
 • Vannam konda vennilave vaanam vittu vaaraayoVannam konda vennilave vaanam vittu vaaraayo

Completed Stories
On-going Stories

Add comment

Comments  
+1 # pavam malliinfanto 2018-09-18 09:16
please sasi adutha kathailayachum malliku oru penna jodi akidunga.. avauku valikitho elayo enaku valikithu ,, oru oru kathailaum kaiku kedachathu vaiku kedaikalayenu ... :sad:
Reply | Reply with quote | Quote
# RE: pavam mallisasi 2018-09-18 14:50
Quoting infanto:
please sasi adutha kathailayachum malliku oru penna jodi akidunga.. avauku valikitho elayo enaku valikithu ,, oru oru kathailaum kaiku kedachathu vaiku kedaikalayenu ... :sad:

:cool: மல்லிக்கு பொண்ணை தேடறேன் கிடைச்சதும் சேர்த்து கதை எழுதிடறேன் நன்றி
Reply | Reply with quote | Quote
+1 # RE: pavam malliinfanto 2018-09-18 15:01
kind request flower name venam jodiku vera peru vainga...#Neyar Virupam..
Reply | Reply with quote | Quote
# RE: pavam mallisasi 2018-09-18 15:12
Quoting infanto:
kind request flower name venam jodiku vera peru vainga...#Neyar Virupam..

ஓகே தங்களின் விருப்பத்தை ஏற்றுக் கொள்கிறேன் நன்றி :clap:
Reply | Reply with quote | Quote
+1 # RE: சிறுகதை - மணக்கும் சந்தன பூ - சசிரேகாmadhumathi9 2018-09-16 21:09
wow innaikkey irandu kathai kofuthuvitteergal big :thnkx: 4 that.naan kaalaiyil yosithu konde irunthen.schedule sundayla kathai kuraivaa irukke sasi indraikku kathai kodutha nalla irukkum endru ninaithen.but :dance: irandu kathai padithuvitten. :thnkx: :thnkx: :grin: (y)
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - மணக்கும் சந்தன பூ - சசிரேகாsasi 2018-09-18 14:48
Quoting madhumathi9:
wow innaikkey irandu kathai kofuthuvitteergal big :thnkx: 4 that.naan kaalaiyil yosithu konde irunthen.schedule sundayla kathai kuraivaa irukke sasi indraikku kathai kodutha nalla irukkum endru ninaithen.but :dance: irandu kathai padithuvitten. :thnkx: :thnkx: :grin: (y)

:dance: :dance: :dance: நன்றி நன்றி
Reply | Reply with quote | Quote

Coming Soon...

Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

Come join the FUN!

Write @ Chillzee
Go to top