Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
சிறுகதை - சும்மா ஒரு பேச்சுக்கு... - ரவை - 5.0 out of 5 based on 1 vote

சிறுகதை - சும்மா ஒரு பேச்சுக்கு... - ரவை

just-like-that

"ந்த வீட்லே யார், 'ரவை'ங்கிற பேர்ல, சில்ஸீல, எல்லாம் தெரிஞ்ச மேதாவி மாதிரி, உபதேசம் பண்றது?"

" முதல்லே, உட்காரும்மா! தாகத்துக்கு என்ன குடிக்கிறே? டீ, காபி,.......?"

" எல்லாம் குடிச்சிட்டுத்தான் வந்திருக்கேன்.....அவரை கூப்பிடு முதல்ல!"

"நீ பேசறதிலிருந்தே, குடிச்சிட்டு வந்திருக்கேன்னு தெரியுது! இருந்தாலும், வீட்டுக்கு வந்த விருந்தாளிக்கு குடிக்க தண்ணீராவது கொடுக்கிறதுதான், பண்பாடு!"

" என்ன கிண்டலா? ......எழுதறதெல்லாம் பித்தலாட்டம், பேசறதுமட்டும் பண்பாடு!......எங்கே ரவை?"

" உட்காரும்மா! ரவை இங்க வந்தாலும், பயனில்லே, ஏன்னா அவருக்கு ரெண்டு காதும் டமாரம் அடிச்சாக்கூட கேட்காது. எங்கிட்ட சொல்லு! நான் அவர் காதிலே சங்கு வைச்சு ஊதறேன்........"

அவள் உட்கார்ந்தாள்.

" உன் பேரு?"

" தமிழரசி! ரவைக்கு என்னையும் என் கணவர் கவியரசையும் நல்லா தெரியும். போன வருடம் அக்டோபர் 14ந்தேதி 'அவர்களும் வாழவேண்டாமா'ன்னு ஒருசிறுகதை எழுதியிருக்கிறார், அந்த மேதாவி! அதைப் பாராட்டியிருக்காங்க, சில்ஸீ டீமும் சுவேனியும்! அதிலே சுவேனி எழுதறாங்க, ஏழைகளின் கஷ்டத்தை புரிஞ்சி நடக்கணும்னு, மறைமுகமா என்னை தாக்கியிருக்காங்க! இதெல்லாம், அந்த ரவையினாலே!"

" அது என்ன கதைன்னு சுருக்கமா சொன்னா, நீ பேசறது எனக்கு புரியும்."

அவள் சொன்னாள்:

Pencilஹாய் பிரெண்ட், கதையை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

எங்க வீட்டு வேலைக்காரி தன் சம்பளத்தை இருநூறு ரூபாய் அதிகப்படுத்தி தரச்சொன்னாள். நான் அவளுக்கு மட்டுமில்லாம, எங்க காம்ப்ளெக்ஸிலே வேலை செய்கிற அத்தனை பேருக்கும் இரண்டு மடங்காக சம்பளத்தை உயர்த்தித் தர ஏற்பாடு பண்ணி வேலைக்காரிங்களுக்கு நன்மை பண்ணியிருக்கேன், இந்த மேதாவி எழுதறாரு, நான் சூது பண்ணி அவங்களை ஏமாத்திட்டேன்னு பழி சுமத்தறாரு......அவரை கூப்பிடு, ஒரு பிடி பிடிக்கணும், அவரை!"

" அவர் அப்படி பழி சுமத்த நீ என்ன தப்பு பண்ணினேன்னு சொல்றாரு?"

" உங்களை பார்த்தா, வயசானவரா தெரியுது, நான் சொல்றதை உங்களாலே புரிஞ்சிக்கமுடியும். ....."

" எனக்கு ஏற்கெனவே ஒரு விஷயம் நல்லா புரிஞ்சிருக்கு. அந்த மேதாவி, அதான் ரவை, வேற யாரையோ உயர்த்துவதற்காக, உன்னை வில்லியாக்கிட்டார்னு!......."

" பெரியவங்க பெரியவங்கதான்! சரியா சொன்னீங்க! என் கணவர் கவியரசை உத்தமனா காட்டறதுக்காக, என்னை வில்லியாக்கிட்டார். ஐயோ! நினைக்க நினைக்க பற்றிக்கிட்டு வருது, என் கணவர் பிற்பட்ட வகுப்போரிலே, முற்போக்கானவராம், நான் அதே பிற்பட்ட வகுப்போரிலே பிற்போக்கானவளாம்! இது விஷமத்தனமானதுதானே! கணவன்-மனைவிக்கிடையே பிளவு ஏற்படுத்தறதா, ஒரு மேதாவியின் வேலை? அடுத்து, நான் மூணுதலைமுறையா பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவளாம், என் கணவரோ, இந்த தலைமுறையிலேதான் ஏழ்மையிலிருந்து விடுபட்டிருக்காராம், நான் வலதுசாரியாம், என் கணவர் இடதுசாரியாம்! ஏங்க, அவருக்கு ஒற்றுமையா வாழற குடும்பத்தை உடைச்சு பிரிக்கிறதே, வேலையா? 

அதற்கு நேர்மாறா, நான் எங்க காம்ப்ளெக்ஸிலே வாழற நூறு குடும்பங்களை சேர்த்துவைச்சிருக்கேன், நீங்களே சொல்லுங்க!"

" நான் சொல்றது, இருக்கட்டும், அந்த மேதாவி, அதான் ரவை, நீ என்ன சூது பண்ணினேன்னு சொல்றாரு!"

" வேலைக்காரிங்க ஆரம்பிச்ச யூனியனை இழுத்து மூடவைச்சேனாம். ஆமாம், அது உண்மைதான். அப்படி ஏன் செய்தேன்னா, அப்பத்தான் நூறு குடும்பமும் வேலைக்காரிங்க சம்பளத்தை இருமடங்கா உயர்த்த சம்மதிச்சாங்க........"

" நல்ல காரியம்தானே!"

" உங்களுக்கு புரியுது, அந்த மேதாவிக்கு புரியலையே! அவர் எப்படி உண்மையை திரித்துச் சொல்றார்பாருங்க, சம்பளத்தை உயர்த்திக் கொடுத்த இரண்டாவது மாதமே, வேலைக்காரிங்க யூனியனை மூடின இரண்டாவது மாதமே, அவங்களை வேலையை விட்டு நீக்கிவிட்டு, புதுசா வேலைக்காரிங்களை பழைய குறைச்ச சம்பளத்திலே வேலைக்கு வைச்சிடுவேன்னு, பழி சுமத்தறாருங்க!"

" அப்படியா! நீ அப்படி எங்காவது பேசினியா?"

" ஆமாம், பேசினேன், ஏன் பேசினேன்? அப்படி பேசினதாலேதான், நூறு குடும்பங்களும் வேலைக்காரிங்களுக்கு சம்பளத்தை இருமடங்காத் தர ஒத்துண்டாங்க! ........"

" நீ சொன்னபடி ரெண்டு மாசத்திலே வேலைக்காரிங்களை நீக்கிட்டியா?"

" சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன்...."

" சும்மா சொல்றது, இப்பவா? அப்பவா?"

"என்ன பெரியவரே! ரூட் மாறுகிறாமாதிரி தெரியுது!"

  •  Start 
  •  Prev 
  •  1  2  3 
  •  Next 
  •  End 

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: சிறுகதை - சும்மா ஒரு பேச்சுக்கு... - ரவைabimahesh 2019-03-28 21:44
Nice Story Sir!! And Good point also :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - சும்மா ஒரு பேச்சுக்கு... - ரவைரவை 2019-03-29 06:49
Thanks, Abhimahesh!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - சும்மா ஒரு பேச்சுக்கு... - ரவைmadhumathi9 2019-03-28 14:18
:clap: :grin: nice story. (y) vaaltugal sir. :thnkx: :GL:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - சும்மா ஒரு பேச்சுக்கு... - ரவைரவை 2019-03-28 16:26
மிக்க நன்றி, மதுமதிம்மா!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - சும்மா ஒரு பேச்சுக்கு... - ரவைJebamalar 2019-03-28 10:25
உங்களோட கதை திறன் மிக அருமை... சுவை நயத்துடன் கதையின் கருத்தையும் அழகாக கூறியுள்ளீர்கள்.. Super :clap: :GL:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - சும்மா ஒரு பேச்சுக்கு... - ரவைரவை 2019-03-28 11:37
ஜெபமலர் அவர்களே! உங்கள் பாராட்டு மழையில் நான் மேலே மேலே உயரே உயரே பறக்கிறேன். மிக்க நன்றி!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - சும்மா ஒரு பேச்சுக்கு... - ரவைchitra 2019-03-28 08:35
Cute story sir ,unmaiyum kooda ,ithai naan summa oru pechukku sollalai :grin:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - சும்மா ஒரு பேச்சுக்கு... - ரவைரவை 2019-03-28 09:57
Dear Chitra! உங்கள் பாராட்டு எனக்கு அளவிலா மகிழ்ச்சி தருகிறது. மிக்க நன்றி!
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

சுடச் சுடச்...!

 

Go to top