Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
சிறுகதை - வேண்டாம் திருமணம்! - ரவை - 5.0 out of 5 based on 1 vote

" அந்தப் பொண்ணு உன்னை எதுக்காக பாராட்டி, கட்டியணைத்து, முத்தமிட்டாள்னு, கேட்டியா?"

" கேட்டேனே, அவ சொன்னா, பணத்தை மணமகளிடம் தரவேண்டுமெனச் சொன்னதற்காகவாம்..........."

" பார்த்தியா, கல்யாணமாவதற்கு முன்பே, அவளுக்கு ஆண்களைப்பற்றி நல்லா தெரிஞ்சிருக்கு!, அதுசரி, நீ ஏன் மணமகனிடம் தரச்சொல்லாம, மணமகளிடம் தரச்சொன்னே?"

" ஆடியன்ஸிலே, அன்னிக்கு, மாணவிகள் மாணவர்களைவிட அதிகமாயிருந்தாங்க, சிறப்பா பேசினது யார்னு, முடிவிலே, ஆடியன்ஸை ஓட்டுப் போடச்சொல்லி, தேர்ந்தெடுப்பாங்க, அதனாலே......."

" இந்தமாதிரி குள்ளநரித்தனம் அந்த நாளிலேயே உனக்கு வந்துடுத்தா?"

" ஏய்......சமயம் பார்த்து காலை வாராதே!"

" போகட்டும், அடுத்த பாயிண்ட்?"

" ஆங்! இது செம பாயிண்ட்! கேளு, திருமணமே நாட்டிலே நடக்கலேன்னா, கல்யாண மண்டபங்கள், சினிமா தியேட்டராக மாறி, இளைஞர்கள் பணத்தையும், நேரத்தையும், மனதையும், கெடுத்துவிடும், எப்படி?"

" உன்னைப்போய் பாயிண்ட்ஸ் கேட்டேனே, என்னை........."

" நேற்று வாங்கினது,......சரி சரி, .என்ன தப்பு, அதிலே?"

"எங்க பட்டிமன்ற நடுவர், யார் தெரியுமா? பிரபல சினிமா தயாரிப்பாளர் பி.எஸ்.வி.செட்டியார்!"

" ஓ! அப்படியா! இதை நீ முன்பே சொல்லியிருக்கணும், சரி, கொஞ்சம் யோசித்து, வேற நல்ல பாயிண்டா சொல்றேன்..............."

"என் நேரம்தான் வேஸ்ட்! நானே யோசித்து தயார் பண்ணிக்கிறேன், நீ போய் உன் வழக்கமான வேலையைச் செய்!"

"வழக்கமான வேலையா?"

" ஆமாம், இட்லி, தோசைக்கு மாவாட்டறது!"

 மாளவிகா மேற்கொண்டு என்ன செய்வது என சிந்திக்கையில், காலிங் பெல் ஒலித்தது. கதவைத் திறந்தாள். பத்மினி!

 " வாட் எ சர்பிரைஸ்! இப்பத்தான் உன்னை நினைச்சேன், நீ எதிரே நிற்கிறே! வாவாவா!"

 உள்ளே போய் இருவரும் அமர்ந்தனர்.

 " அக்கா! நான் எதுக்கு வந்தேன்னு சொல்றதுக்கு முன்பு, நீங்க எதுக்கு என்னை நினைச்சீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா?"

 " பத்மினி! வேறெதுக்கு? எல்லாம் பட்டிமன்ற விவகாரம்தான்!"

 " நாம ரெண்டுபேரும் எப்படி ஒரேமாதிரி சிந்திக்கிறோம், பார்த்தீங்களா? நானும் அது விஷயமாத்தான் பேசவந்திருக்கேன்...."

 " வெரி குட்! ஏதாவது குடிக்கிறியா?"

 " எனக்கு குடிக்கிற பழக்கம் கிடையாது, அக்கா!"

 " அடி செருப்பாலே! எனக்கு உண்டுன்னு சொல்றியா?"

 இருவரும் வாய்விட்டு சிரித்தனர்.

 " அக்கா! காபி, டீ, குடிக்கிற பழக்கம் எனக்கு சின்ன வயசிலிருந்தே கிடையாதுன்னு சொன்னேன்......"

 " ஓ.கே....ஓ.கே...சொல்லு! உன் பாயிண்ட்ஸை தயார் பண்ணிட்டியா?"

 " அக்கா! நம்ம டீமிலே, உங்களைத் தவிர, மற்ற மூணுபேரும் கல்யாணமாகாதவங்க! நீங்க மட்டும் தான், கல்யாணமாகி, மூன்று குழந்தைகளுக்குத் தாயாகி உள்ளவங்க! வயசிலே பெரியவங்க! அதனாலே, நாங்க மூணுபேரும் முதல்லே பேசிடறோம், எங்களை எதிர்த்து பேசறவங்களை உன்னிப்பா கவனிச்சு, அந்தபாயிண்ட்ஸ்களுக்கு பதில் சொல்றது மட்டும் நீங்க செய்யுங்க! ஏன்னா, எங்க வாதங்களை அவங்க சுலபமா முறியடிக்க, அவங்க எடுக்கிற அஸ்திரம் எதுவாயிருக்கும், தெரியுமா? நாங்க கல்யாணமாகாதவங்க, அதனாலே, விஷயம் தெரியாம பேசறோம் என்பதுதான்!"

 " பத்மினி! வெரி குட்! நீ நல்லா யோசிக்கிறே! ........"

 " அக்கா! அதனாலே, இப்ப நாம செய்யவேண்டியது, எதிர்கட்சியிலிருந்து என்னென்ன வாதங்கள் வரும், அவைகளை எப்படி முறியடிக்கிறது என்பதுதான்........."

 " ஆமாம்! அதுக்கென்ன செய்யலாம், இப்ப நீ எதிர்கட்சி சொல்லக்கூடிய வாதங்களை ஒவ்வொன்றாக சொல்லு, அதுக்கு நான் பதில் தயார் பண்ணிக்கிறேன்........"

 " ரெடியா? முதல் கேள்வி: திருமணத்தால் பெண்களின் சுதந்திரம் பறிக்கப்படுகிறது. அதனால் திருமணம் வேண்டாம்.........."

 மாளவிகா, தொண்டையை கனைத்துக்கொண்டு, பேசினாள்:

 " முதலில், எதிர் கட்சியினர், ஒரு விஷயத்தை புரிந்துகொள்ளவேண்டும். திருமணம் என்பது, என்னவோ, பெண்கள் மட்டுமே சம்பந்தப்பட்டதென பேசுகிறார்கள். அது தவறு. திருமணத்தில் ஆண், பெண், இருவருமே சம்பந்தப்பட்டவர்கள். இருவருமே உரிமைகளை இழக்கிறார்கள், சலுகைகளை பெறுகிறார்கள். என்ன சுதந்திரத்தை பெண்கள் இழக்கிறார்கள்? அவர்கள் கணவனின் அனுமதியுடன்தான் எதையும் செய்யவேண்டியிருக்கும், அதனால் உரிமையை இழக்கிறோம் என்கிறார்கள். பெண்கள் செய்கிற நல்ல காரியங்களை ஆண்கள் ஒருபோதும் தடுக்கமாட்டார்கள். அதுபோலத்தான் பெண்களும், ஆண்கள் செய்கிற நல்ல காரியங்களுக்கு குறுக்கே நிற்கமாட்டார்கள். அதனால், அனுமதி என்று தவறாக கருதாமல், கலந்தாலோசிப்பது என்று நம்புங்கள்...."

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: சிறுகதை - வேண்டாம் திருமணம்! - ரவைabimahesh 2019-03-28 21:51
Good Story Sir!! Maalu solra points la Super.. But apdi nadukkuma? :thnkx: :grin:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - வேண்டாம் திருமணம்! - ரவைரவை 2019-03-29 06:47
நடக்கும், நடக்கணும், my dear Abhi mahesh! Thanks for your compliments
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - வேண்டாம் திருமணம்! - ரவைmadhumathi9 2019-03-28 20:32
wow fantastic story. :clap: :clap: (y) :thnkx: :GL: sir.arumai :clap: :clap:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - வேண்டாம் திருமணம்! - ரவைரவை 2019-03-28 20:54
மிக்க மகிழ்ச்சி, மதுமதிம்மா!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - வேண்டாம் திருமணம்! - ரவைJebamalar 2019-03-28 18:37
இரு மனமும் ஒரு மனதானால் கதையின் பிற்பகுதி போல் இனிக்கும்... இரு மனமும் இரு வேறு மனதானால் முற்பகுதி போல் குடும்பம் களை கட்டும் என்று அழகாக கூறியுள்ளீர்கள்... வாழ்த்துக்கள் sir
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - வேண்டாம் திருமணம்! - ரவைரவை 2019-03-28 20:52
மிக்க நன்றி, ஜெபமலர்!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - வேண்டாம் திருமணம்! - ரவைharii k 2019-03-28 16:52
Good one sir,, Pengalai rasikamatumalla mathiakvum terindha aangalukana story :clap: :clap:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - வேண்டாம் திருமணம்! - ரவைரவை 2019-03-28 20:51
Thanks, dear Hari!
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top